மூத்திர அறிஞர்!
மூத்திர அறிஞர்!
*
’கானகன்’ நாவலில் ஒரு வரி வரும், பாஸ்பரஸ் மூலம் மிருகங்களை விரட்டுதல் என்று. அதெப்படி பாஸ்பரஸ் மூலம் விரட்டமுடியும் என்று தேடியபோது சில விஷயங்கள் சிக்கின.
18ம் நூற்றாண்டில் இந்த ரஸவாதிகளின் (Alchemist) அக்கப்போர் பயங்கரமாக இருந்திருக்கிறது. தாரிலிருந்து தங்கம் எடுக்கிறேன், வெந்நீரிலிருந்து வெள்ளி எடுக்கிறேன் என்று பலரும் கிளம்பி இருக்கிறார்கள். அப்படி கிளம்பிய ஒருவர்தான் இந்த ”ஹென்னிங் பிராண்ட்”.
தனது முதல் மனைவி இறந்த பின்னர் அனைத்து சொத்துக்களையும் ஆராய்ச்சிக்காக செலவழித்துள்ளார். பின்னர் கையில் காசில்லாமல் போகவே, நல்ல நிலபுலன் கொண்ட ஒரு விதவையை திருமணம் செய்துக்கொண்டார். மேலும், தனது மகனையே உதவியாளனாக சேர்த்துக்கொண்டு, வீட்டின் ஒரு பகுதியை ஆராய்ச்சிக்கூடமாக மாற்றியமைத்தார்.
மனிதனின் சிறுநீரிலிருந்து தங்கம் எடுப்பதே அவரது நோக்கம். அதற்காக அவர் 5600 லிட்டர் சிறுநீரை சேமித்து வைத்திருந்தாராம்.
அவரும் என்னவெல்லாமோ செய்து பார்த்தும், கடைசிவரை தங்கம் கிடைக்காமல் கண்ணாமூச்சி காட்டி உள்ளது. ஆனால், அவரே எதிர்ப்பார்க்காத ஒரு புது விஷயம் கிடைத்துள்ளது அதுதான் ‘பாஸ்பரஸ்’.
இந்த பாஸ்பரஸ் காற்றுடன் வினையாற்றி நெருப்பை உண்டாக்கும். காடுகளில் பயணம் மேற்கொள்வோர் வெளிச்சத்திற்காகவும், விலங்குகளை விரட்டவும் இதை பயன்படுத்துவது உண்டு. என் நினைவு சரியென்றால் ’பேராண்மை’ படத்தில் யானைகளை விரட்ட தேவைப்படும் பொருட்களை சொல்லும்போது ஜெயம் ரவி இதையும் சொல்லுவார் என்று நினைக்கிறேன்.
-பிகு
Comments
Post a Comment