சம்மர் ஸ்பெஷல்!


என்ன டிரெஸ் போட்ருக்க ??
ஏன் கேக்குற?
சொல்லேன்…
டி-ஷ்ர்ட், ஷார்ட்ஸ்! என்ன?
அவ்ளோதானா??
ஏய்…போடா பன்னி.
சொல்லு லூசு..
என்னலாம் போடணுமோ எல்லாம் போட்ருக்கோம் மூடிட்டு கெளம்பு!
*
இப்போதே கோடையை சமாளிக்க முடியவில்லை. ’கும்பி-பாக’த்திற்கு சப்ஸ்டிட்யூட் மாதிரி இருக்கிறது. கண்டிப்பாக இதை கவனித்தே ஆக வேண்டும். இரண்டுமுறை ’சிக்கனமாக’ குளித்தல், காலத்துக்கு ஏற்றாற்போல் உடையணிதல் போன்றவை நம்மை சிறிது பாதுகாக்கும். வழக்கமாக எல்லாரும் சொல்வதுதான், காட்டன் உள்ளாடைகள் பயன்படுத்துங்கள் என்று. சில விஷயங்களை, எப்போது பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்வதை போல எப்போது பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிய வேண்டும். இந்த ’உள்ளாடை’ விஷயத்திற்கு இது பொருந்தும். இரவு நேரங்களில் பெரும்பாலும் உள்ளாடைகளை (இரு பாலரும்) தவிர்த்துவிடுவது நல்லது. ஆண்கள் லுங்கி அணிந்து தங்களது சுதந்திர தாகத்தை தணித்துக்கொள்ளலாம்; ஆனால் இந்த விஷயத்தில் பெண்கள் சற்று விழிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே, டி-ஷர்ட், ¾, ட்ராக், நைட்டி வகையறாக்கள் அணிந்து, அதனுள் மேலும் மூன்று விதமான உள்ளாடை அணியும் வழக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் (இந்த வெயில் காலத்தில் மட்டுமாவது).
இப்படி செய்வதன் மூலம் வியர்வையை ஓரளவு கட்டுப்படுத்தலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும். உடலுறுப்புகளுக்கும் சற்று ஆசுவாசமாக இருக்கும்.
அதேப்போல் இன்னொரு விஷயம், முடிந்த அளவு உடலில் இருக்கும் ரோமங்களை எடுத்துவிடுங்கள். சம்மர்-கட் அடித்தல், தலை பாரம், வியர்த்து வியர்த்து சளி பிடித்தல் போன்றவற்றில் இருந்து காக்கும். முக்கியமாக அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் இருக்கும் ரோமங்களை நீக்கிவிடுதல் நமக்கும் நம் அருகில் இருப்பவருக்கும் சால சிறந்தது. என்ன டியோ பயன்படுத்தினாலும் ரோமங்களினால் வரும் வியர்வை வாடையை கட்டுப்படுத்துதல் கஷ்டம். கிருமிகளில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ளலாம்!
*
என்னடா போயிட்டியா? சும்மாதான் போ-ன்னு சொன்னேன்!
சரி போ…
ஹிஹிஹி… வந்துட்டேன்!
-பிகு

07-04-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்