சென்னை புத்தகச் சங்கமம் 2017

சென்னை புத்தகச் சங்கமம் (ஏப்ரல் 21-25)
0
ஏனோ தெரியவில்லை தீபாவளி, பொங்கல் அளவுக்கு இந்த புத்தக தினமும் என்னுள் மகிழ்ச்சி அலைகளை உண்டாக்கியிருந்தது. பேஸ்புக்கில் நிறைய நண்பர்களின் புத்தக வாசிப்பு தொடர்பான பதிவுகள் வாசித்தது மனநிறைவாக இருந்தது. மேலும், சென்னை புத்தக சங்கமம் என்ற பெயரில் எழும்பூர் பெரியார் திடலில் நடைப்பெற்ற புத்தக காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பல முன்னணி பதிப்பகங்கள் 50% கழிவில் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தன. ”முத்தின கத்திரிக்காய் கடைவீதிக்கு வந்துதானே ஆகணும்” என்ற ரீதியில் சில புத்தகங்கள் இருந்தாலும், முத்தினதில் முத்துக்களாய் சிலவும் இருக்கத்தான் செய்தது. அதிலும், ஆங்கில புத்தகம் வாசிப்பவர்கள் தவறவிடக்கூடாத நிகழ்வு இது. 100 ரூபாய்க்கு 3 ஆங்கில புத்தகம் என்ற அறிவிப்பு அட்டையை அநேக இடங்களில் காணமுடிந்தது.

நான் வாசகன் என்ற சொல்வதில் எப்போதும் எனக்கு ஒரு கர்வம் இருந்துக்கொண்டே இருக்கிறது. ”அப்படி என்ன பெருசா வாசிச்சு கிழிச்சுட்டேரு”? என்றுக்கேட்டால், ஆம் அப்படியொன்றும் கிழிக்கவில்லை தான். விரல் பிடித்து நடக்கும் குழந்தை, தாயின் வயிற்றினுள் வளர காரணமாயிருந்த விந்தணுக்கள் போல இது வெறும் தொடக்கம் மட்டுமே; தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளிருந்து பெரும் ஊற்றாய் ஊறிக்கொண்டே இருக்கிறது.
தேடுவதென்ன என்பதறியாது 
எதையோ தேடி செல்கிறேன் 
நான் தேடுவதென்னை கண்டுக்கொண்டால்
தேடி வரட்டும் இல்லையேல் 
தேடிக்கொண்டேயிருப்பேன்!

முத்தினதில் சில முத்துகள்:
கட்டுரை
~
1. எதற்காக எழுதுகிறேன் – சி.சு.செல்லப்பா (எழுத்து இதழ் தொகுப்பு)
2. பெருகும் வேட்கை – அழகிய பெரியவன்
3. எதிர்ச்சொல் – பாரதிதம்பி

கடிதம்
~
1. அன்புள்ள கி.ரா.வுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்
2. கலீல் கிப்ரானின் காதல் கடிதங்கள்

நாவல்
~
1.
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் – சாரு
2. சூதாடி – தஸ்தயேவ்ஸ்கி
3. தனது பொக்கிஷத்தை விற்ற துறவி – ராபின் ஷர்மா

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்