#வாசகசாலை 5
#வாசகசாலை-யின்
எத்தனையாவது நிகழ்வுன்னு-லாம் கணக்கே கிடையாது, ஒரு மாசத்துக்கு பதினொரு இலக்கிய நிகழ்வு
நடத்துறாங்க(!!!!). கடந்த இரண்டேகால் வருஷமா நடத்திகிட்டு இருக்காங்க. நீங்களே கணக்கு
பண்ணிக்கோங்க மக்கழே இது எத்தனையாவது நிகழ்வு-னு!
சரி மேட்டருக்கு
வர்றேன், நேத்து அண்ணா நூலகத்துல நடந்த சிறுகதை கலந்துரையாடல் நிகழ்வுல பேசுன மூணு
பேருமே ரொம்ப நல்லா பேசுனாங்க. மூணு பேருமே அவங்கவங்க ஸ்டைல்ல அடிச்சு பேசுனாங்க. ஹரிக்கு
கொடுத்த கதை புதுமைபித்தனோட கிளாஸிக் “ஒரு நாள் கழிந்தது”. ஹரிக்கு இது முதல் ’இலக்கிய’
மேடைங்கறது பேசுனதுலயே தெரிந்தது, செம்மயா தமிழ் பேசுறாரு, இன்னும் தொடர்ந்து வாசிச்சாருனா
இலக்கியமும் அடிச்சு நொறுக்குவாரு. சேகருக்கு கோபிகிருஷ்ணனோட ”ஒரு ரூபாய்க்கு ஒரு கதை”.
மூணு கதைல கொஞ்சம் சின்ன கதை, இதுல என்ன பேசிற முடியும்னு நெனச்சன், ஆனா அத உடைச்சு
சரியா பேசுனாரு. இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனமா பேசுனா பெர்ஃபெக்ட்-டா
இருக்கும். பாதசாரியின் ”காசி”, யார்யா இந்த பாதசாரி எனக்கே தெரிஞ்சுக்கணும் போல இருக்கே-ங்கற
மாதிரியான கதை. நல்ல நீள..மான கதை. இந்த கதைப்பத்தி என்ன பேசுறாங்க-னு கேக்கத்தான்
போனேன். பவித்ரா பேசுனாங்க இந்த கதைய. நேரம் இல்லாததனால சுருக்கமா பேசிட்டாங்க-னு நெனைக்கிறேன்.
இந்த கூட்டத்துக்கு முக்கியமா போறதே ”பார்த்தி” அண்ணே இந்த கதைகள பத்தி என்ன பேசுறாரு,
எப்படி பேசுறாரு-னு பார்க்கத்தான். நேத்தும் அதேமாதிரி செறப்பா பேசுனாரு! கதை தேர்வுகள்ல
இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம் என்பது என்னோட எண்ணம். மத்தபடி சரியான பாதையில தான் போயிட்டிருக்கோம்,
இன்னும் போவோம்.
கதையாடல் குறித்து
பேசுவதை விட, அந்த கதைகளை பற்றி பேசுவதே வாசகசாலையின் இந்த முயற்சிக்கு உண்மையான வெற்றி
ஆகும். ஆதலால், இந்த கதைகள் குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்!
-பிகு
10-04-2017
Comments
Post a Comment