அந்த ’அக்கா’

எனக்கு இவர்கள் குறித்து ஒன்று எழுத வேண்டியிருக்கிறது. அலி, ஒம்போது, உஸ் என்று அழைப்பதை விவரம் தெரிந்ததில் இருந்து தவிர்த்தே வருகிறேன். ஆனாலும், சில நேரங்களில் அவர்கள் செய்யும் செய்கைகள் ஏற்கதக்கதாக இருப்பதில்லை. உதாரணமாக, ரயிலில் துட்டு வசூலிப்பதை சொல்லலாம். அதை கூட சகித்துக்கொள்ளலாம் என்றாலும் சில விஷயங்களை கண்டிக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது.



சோழிங்கநல்லூர் டூ மேடவாக்கம்

ஏறி அமர்ந்து டிக்கெட் வாங்கி கொண்டிருக்கும்போதே ஒரு திருநங்கை வந்து அருகில் அமர்ந்தார். நாம் டிக்கெட் எடுத்து பயணிக்கிறோம் அதேப்போல் அவரும் பயணிக்கிறார் என்ற ரீதியில் தான் நகர்ந்தமர்ந்து இடமளித்தேன்.
“மேடவாக்கம் ஜங்ஷன் ஒண்ணு” – நான் கண்டக்டரிடம்
”மேடவாக்கத்துல டேஷன் இருக்காப்பா?” – அந்த ’திருநங்கை’  
”இல்ல ’அக்கா’ பஸ்-ஸ்டாண்ட் தான்”,

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே என்னை நெருங்(க்)கி அமர்ந்தார். நான் சற்று நெளிந்தவனாக இன்னும் ஓரத்தில் ஒதுங்கினேன். அவரது மாராப்பை சற்று இறக்கிவிட்டு, புடவை இல்லாத அவரது இடுப்பு எனது முழங்கையில் உரசுமாறு அமர்ந்திருந்தார். அவரது கைகள் ஏறத்தாழ எனது தொடை மீதிருந்தது. அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்று என்னால் யூகிக்க முடிந்தது.

மேலே கவனித்தால் தெரியும், அவரை நான் அக்கா என்றே அழைத்திருந்தேன்; பொதுவாக அவர்களை அக்கா என்றழைக்கையில் ஒருவிதமான பூரிப்பு அவர்களது முகத்தில் பரவுவதைக் காணமுடியும். அப்படித்தான் இதுவரை அழைத்தும் இருக்கிறேன். மேலும், அவர் ஏறிய உடன் பேருந்தில் இருந்த அனைவரின் முகத்திலும் எங்கே ’இது’ நம்மருகில் வந்து அம்ர்ந்துவிடுமோ?? என்ற கலவரம் படர்ந்தது தெரிந்தது. எனக்குள் அப்படி எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

இவ்வளவு இருந்தும் அந்த அக்காவின் செயல் எனக்கு உவப்பானதாக இல்லை. இறுதியில் எந்தவித முகசுளிப்பும் கோபமும் இல்லாமல்,
”நீங்க நல்லா வசதியா உக்காந்துக்கோங்க அக்கா” என்று வேறு சீட் மாறி அமர வேண்டியதாகிவிட்டது.

இறுதிவரை திரும்பி திரும்பி பார்த்துகொண்டே இறங்கி சென்றார் அந்த ”அக்கா”.


கடவுள் இருக்கிறாரா என்று வானத்தை அண்ணாந்து பார்த்தவாறு இறங்கிவிட்டேன்!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா