கண்ணம்மாக்களுக்கு பிடித்த ஏசப்பா


”கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை..” ’றெக்க’ படத்தின் இந்த பாடல் வந்த புதிதில் பெரும் வரவேற்பை பெற்றது. எங்கெங்கு காணினும் நல்லோர் அனைவரும் மாலாக்கா துதி பாடிக்கொண்டிருந்தனர். எனக்கும் மாலாக்காவை பிடித்திருந்தது. ”பாரதி உன் சாயலை பாட்டாக பாடுவான்” என்ற வரிகளை காப்பியடித்து எழுதி என்னவளிடம் கன்னத்து முத்தமும் வாங்கியாகிவிட்டது. இப்போது நான் சொல்ல வந்தது வேறு. அந்த பாடலில் இரண்டு காட்சிகள் வரும். முதலில் மாலாக்கா தேவாலயத்தில் ஜெபம் செய்வது போன்றும் (ரொம்ப உருகி கண்ணீர் மல்க ஜெபித்துக்கொண்டிருப்பார்), பின்னர் ஒரு கோவில் நடையில் அமர்ந்து அந்த தம்பிக்கு கையில் கயிறு கட்டிவிடுவது போன்றும் வரும். இங்குதான் மாலாக்கா இந்துவா, கிறிஸ்டினா என்று சந்தேகம் வந்தது (நான் படம் பார்க்கவில்லை. படத்தில் இதுகுறித்த காட்சிகள் இருக்கிறதா என்றும் தெரியவில்லை) இதுபற்றி நண்பர் ஒருவரிடம் பேசுகையில், ”ஆமா, பிகு அந்த பாட்டுல அப்படி வரும் சரிதான். அதபத்தி எனக்கும் தெரியல. ஆனா எனக்கு இன்னொரு விஷயம் தோணுது. கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா தெரியும், தங்களோட வாழ்க்கையின் ஒரு கட்டத்துல அது பள்ளிப்பருவமோ, கல்லூரி பருவமோ ஏதோ ஒரு காலத்துல இந்த இந்து பொண்ணுங்க ’ஏசப்பா ஏசப்பா..’னு ரொம்ப தீவிரமா இருப்பாங்க. கழுத்துல சிலுவை டாலர் போட்டுக்கறது, அடிக்கடி குறுக்கும் நெடுக்குமாக சிலுவை வரைந்துக்கொள்வது என்று இருப்பார்கள். ஒருவேள மாலாக்காவும் அப்படி இருக்குமா இருக்கும்”


இது அவர்களுக்குள் எப்போது வருமென்றும் எப்படி போகுமென்றும் அவர்களுக்கே தெரியாது. ஆனால் இது நடப்பதுதான். அவர் சொன்ன பின்னர்தான் யோசித்துப்பார்த்தேன், எனக்கு தெரிந்தே நான்கைந்து பெண்கள் இந்த மாதிரி இருக்கிறார்கள். இதில் ஏதோ இருக்கிறது.

விடுங்கள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்.

மாலாக்கா மூலம் மத நல்லிணக்கம் தோன்றினால் சரிதான்!
-பிகு

12-05-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா