ப.பாண்டி

ப.பாண்டி
.
சமீபத்தில் வந்த படங்களில் நான் வெகுவாக ரசித்த படம் ப.பாண்டி. கடைசியாக தனுஷ் ’நடித்து’ வெற்றிப்பெற்ற படம் எதுவென்று நினைவில்லை ஆனால் இயக்குனராக இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்குமுன் இதே ராஜ்கிரண் நடித்த ’மஞ்சப்பை’ படமும் கிட்டத்தட்ட இதே கதைக்களம் தான். ஆனால், இதில் அந்த இளமை+முதுமை காதலை உட்புகுத்தி வேறொரு இடத்திற்கு கதையை நக்ர்த்தி சென்றிருப்பார் தனுஷ். நமக்கு இந்த ஜோனர் கொஞ்சம் புதிதும்கூட. அதாவது குறிப்பிட்ட வயதுக்கு மேல் வரும் காதலை நாம் நம் சினிமாக்களில் அதிகம் பார்த்ததில்லை. யாரும் காட்டியதுமில்லை. அவ்வாறு வந்தாலே அது கள்ளக்காதல் என்று நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கதையை எடுத்து கையாண்ட இயக்குனர் தனுஷுக்கு வாழ்த்துகள்.
நடிகர்கள் தேர்வும் அட்டகாசம். குறிப்பாக பிரசன்னா, ராஜ்கிரண். ஒரு சராசரி ஐ.டி இளைஞனாக நம்முன் நிற்கிறார் பிரசன்னா. இந்த கதை ராஜ்கிரணுக்காகவே எழுதப்பட்டிருக்கலாம் என்பது என் யூகம். ஏனென்றால், அந்த ஸ்டண்ட் மாஸ்டர் கேரக்டருக்கு தேவையான ஒரு சிறுப்பிள்ளைத்தனம், ஒரு முரட்டுத்தனம் போன்றவற்றை அவர் வெளிப்படுத்தும் விதம் அற்புதம். ராஜ்கிரணை தமிழ் சினிமா வீணடித்துவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு இருந்தது அவரது நடிப்பு. அதுவும் அந்த டான்ஸ் ஸ்டெப்புலாம் செம்ம..
தனுஷ் வந்ததும் படத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது போல் தோன்றியது. அதற்கு அவருடைய ஓவர் ஆக்டிங் தான் காரணமா என்று தெரியவில்லை. மடோனா என்னும் பூந்தென்றல் அழகாய் வீசி சென்றது. இருந்தாலும் செலினை அடிச்சுக்க முடியாது. ரேவதி நல்ல தேர்வு.
வேல்ராஜின் ஒளிப்பதிவு இருக்கும்வரை தனுஷிற்கு கவலையில்லை.
படம் முழுக்க நாம் ஒரு விளிம்பு நிலையிலே இருந்தது போன்று இருந்தது. நமக்குள் ஏதோ ஒன்று தளும்பி நின்று, கொஞ்சம் அசைந்தாலும் பொங்கி வழிந்துவிடும் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.
சத்தியமாக சொல்கிறேன், இந்த படம் பார்த்த 60-களில் இருக்கும் ஆட்களுக்கெல்லாம் நாமும் இப்படி போய்விடலாமா என்றொரு எண்ணம் நிச்சயம் வந்திருக்கும்!
அதுதான் பவர் பாண்டியின் வெற்றி!
வெல்கம் டைரக்டர் தனுஷ்…
-பிகு

21-05-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

கேசம் - நரன்

முள் - சாரு நிவேதிதா