ஆட்டோ அலப்பறைகள்


இந்த ஊர், அந்த ஊர் என்றில்லாமல் எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் இந்த ஆட்டோகாரர்களின் அலப்பறை சொல்லி மாளாது. சென்னையை எடுத்துக்கொண்டால் ஷேர் ஆட்டோக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் பேருந்துக்காக நின்றுகொண்டிருப்போம், அந்த சமயத்தில் இவர்கள் மெதுவாக அந்த நிறுத்ததிற்கு முன் ஊர்ந்துக்கொண்டிருப்பார்கள். ஆட்டோ ஓட்ட சொன்னால் தேரோட்டிக்கொண்டிருப்பார்கள். நம்ம நேரம், சரியாக அந்த சமயத்தில் தான் நாம் காத்திருந்த பேருந்தும் வந்து சேரும். பஸ் டிரைவர் பெரிய அறிவாளிப்போல் பஸ்ஸின் பின்வாசல் சரியாக ஆட்டோவிற்கு பக்கத்தில் வருமாறு நிறுத்திவிட்டு ஒரு பெருமித பார்வை பார்ப்பார். அடேய்.. எப்படிடா பஸ்ஸுக்குள்ளாற ஏறுவேன்?? நேரா போனா தோள் இடிக்கும்னு, திரும்பி போனா தொப்பை தட்டும்!! சரின்னு முன்னாடி போய் ஏறு போனா, ஏதோ கட்டுன பொண்டாட்டி மாதிரி கூடவே வருவான் ஆட்டோகாரன். டேய்.. நான் பஸ்ல ஏறப்போறன்டா-னு சொல்லி ஏறுறதுக்குள்ள கண்டக்டர் சொய்ங்ங்..னு விசில போட்டு வண்டிய கிளிப்பிருவாரு.
சரி, இத விடுங்க. ரயில்நிலையங்களில் இவர்களின் அக்கபோர் படுபயங்கரமாக இருக்கும். ஒருமுறை ஊருக்கு செல்வதற்காக ரயில்நிலையத்தினுள் சென்றேன். தண்ணீர் பாட்டில் வாங்க மறந்துவிட்டதால் மீண்டும் வெளியே வந்....
வெளியே வருவதற்குள் ஒரு 5,6 பேர் சுற்றி வளைத்துவிட்டார்கள்; மிரட்டாதக்குறையாக எங்க சார் போணும், வாங்க நம்ம வண்டில போயிடலாம்- னு கிட்டத்தட்ட கையப் பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க..
அடேய் நான் திருநெவேலி போவணும்டா-னு சொன்னா ஒரு பயலும் நம்ப மாட்டேங்கறான். ஒரு வழியா தப்பிச்சோம் பொழைச்சோம்னு ஓடியாந்துட்டேன். பின்னாடி திரும்பி பாக்குறேன், நான் ஸ்டேசன் உள்ள போறேனா-னு பாத்துட்டே இருக்காய்ங்க...!!!
இதேமாதிரி ஊருல இருந்து வரும்போதும், ஸ்டேஷன் வாசல்லயே கையப்பிடிச்சு இழுத்தானுங்க. எங்க சார் போணும், வாங்க வாங்க-னு ஏதோ வீட்டுக்கு வந்த மாப்பிளைய விருந்துக்கு கூப்டுற மாதிரி கூப்டாய்ங்க. இந்த தடவை நான் கொஞ்சம் அலர்ட் ஆயிட்டேன்.
"அண்ணே ஆட்டோலாம் வேணாம். இந்த ரோட்ட மட்டும் கொஞ்சம் கிராஸ் பண்ணிவிட்டீங்கனா போதும், நான் என் ரூமுக்கு போயிடுவேன்"
அண்ணன் கோவக்காரரா இருப்பாருப்போல, புதுப்புது வார்த்தைகள்ல அநாயசமா பேசுனாரு. அவர் பேசுன வார்த்தைக்கு மீனிங் தேடிட்டே ரூமுக்கு வந்துட்டேன்.
-பஞ்சகல்யாணி
20-05-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா