குச்சி மிட்டாயில் ஒரு வரலாற்று பிழை!


அரண்மனை-2” படத்தில் வந்த குச்சி மிட்டாய் குருவி ரொட்டிபாடல் கேட்டிருப்பீர்கள் தானே?? கேட்டிருப்போமா என்று தெரியாது, கண்டிப்பாக ஓங்கியுயர் கால்களுக்கு கவசமாக வெள்ளை லெக்கிங்ஸும், சைட் ஓப்பன் டாப்ஸும் அணிந்த நாயகிதிரிஷாவையும் வெண்ணெய்யை உருக்கி வழியவிட்டாற் போலிருக்கும் இடையுடைய பூனம் பஜ்வாவையும் ..வென்று வாய்பிளந்து பார்த்திருப்போம். இதில் பிஸியாக இருந்துவிட்டு, அதில் வரும் ஒரு வரலாற்று பிழையை கவனிக்க தவறிவிட்டோம்.

பாடலின் 1.14 நிமிடத்தில் சூரி அவர்கள் இப்படி பாடுகிறார்,

அண்ணாமலை ரஜினிய போல காச வாரி நான் இரைக்கிறேன் டி..”

இதில் தான் அந்த பிழை இருப்பதாய் எனக்கு தோன்றியது. அண்ணாமலை படத்திலா ரஜினி காசை வாரி இரைப்பார்?? அது அருணாச்சலம் தானே?? இந்த ரம்பா, சௌந்தர்யாவெல்லாம் நடித்திருப்பார்களே அந்த படத்தில்தானே இந்த மொக்க கான்செப்ட் வரும்??

பூனம் பஜ்வாவை பார்த்துக்கொண்டே அடுத்த வரியை கவனிக்காமல் விட்டுவிட்டேன்; மீண்டும் ரீவைண்ட் செய்து கேட்டேன். அடுத்த வரி இப்படி வருகிறது,

மொட்டை தலை கஜினிய போல...” என்று.

அட..கவிஞர்களே உங்கள் வசதிக்காக வரலாற்றை மாற்றி எழுதாதீர்கள்

-பிகு

21-05-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா