பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்!

நமக்கும் நம் உடன் பிறந்தவர்களுக்கும் வெகு அரிதாக சில விஷயங்களில் ஒத்துப்போகும். அப்படி ஒரு விஷயம் தான் இந்த ”விஜய் ரசிகத்தனம்”. நானும் எங்கக்காவும் ஒருகாலத்துல விஜய் வெறியர்களாக இருந்திருக்கிறோம். எப்போ இருந்து விஜய் பிடிக்கும்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியாது, ஏன்னா எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்தே ஹீரோனா அது விஜய் மட்டுந்தான். எங்கள் வீட்டுக்கு வரும் பெரும்பாலான கிரீட்டிங் கார்டுகளில் பத்ரி விஜய்யோ, திருமலையில் காலரை கடித்தவாறு நிற்கும் விஜய்யோ தான் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் எல்லாம் விஜய் பைத்தியம் தலைக்கேறிவிட்டது. உதாரணமாக, திலி.ஜங்ஷன் ராம் (Ram-Muthuram Cinemas) தியேட்டரில் ஷாஜஹான் படம் பார்த்துவிட்டு, விஜய் போட்டிருக்கும் அந்த ”நெக் செயின்” மேல் அப்படி ஒரு கிரேஸ். அழுது அடம்பிடித்து அதேமாதிரி கழுத்துக்குள் நிற்பதுபோல் பட்டையான செயினை வாங்கியும்விட்டேன். அப்பறம் யூத் படத்தில் வரும் அந்த ”சர்க்கரை நிலவே” பாடல். அணில் ஸ்டோர்ஸில் அதேப்போல் அதே செங்காமட்டி கலரில் அரைக்கை சட்டையும் ஊதா ஜீன்ஸும் வாங்கியது இன்னும் நினைவிருக்கிறது. திடீரென்று விஜய்யின் மீதான கிரேஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. ஒரு தருணத்தில் வல்லிசாக இல்லாமலும் போய்விட்டது. அந்த டிரான்ஸ்பார்மேஷன் எப்போது நடந்தது, எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை. இப்போது அந்த செயினும் என் கழுத்தில் இல்லை, நான் விஜய் வெறியனும் இல்லை.
Belated பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்!
-முன்னாள் விஜய் வெறியன்.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா