வண்ணதாசன் 👌💖

வண்ணதாசன் 👌💖
~
பாராட்டு மிக முக்கியமான வஸ்து. நம்மை மேலும் மேலும் இடைவிடாமல் இயங்க வைக்ககூடிய வல்லமை அந்த பாராட்டிற்கு உண்டு.
இந்த மாதம் தடம் இதழில் வந்திருக்கும் நரனின் ’மூன்று சீலைகள்’ கதை சமீபத்தில் நான் வாசித்த கதைகளில் சிறந்த கதையாக தெரிந்தது. எப்போதுமே ஒரு கவிஞர் எழுதும் சிறுகதை எனக்கு பிடித்ததாகவே அமைந்துவிடுகிறது. அப்படித்தான் எனக்கு, கல்யாண்ஜியை விட வண்ணதாசனையே பிடிக்கும். அந்த வகையில் நரனின் லாகிரியை விட ’காது’ம், ’மூன்று சீலைகளும்’ அதிகம் பிடித்து இருக்கிறது.
இதுகுறித்து யாரும் இங்கு பேசியதாக தெரியவில்லை. உப்பு சப்பில்லாத விசயத்தை ஏத்திவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பாக்கியம் சங்கர் ஒரு விழாவில் பேசியிருந்தார், எழுத்தாளனை அவன் எழுதும் காலத்தே அவன் படைப்பு வெளிவரும் காலத்திலையே பாராட்டிவிடுங்கள். அவன் சென்ற பின்பு ஆஹா..ஓஹோ என்று எவ்வளவு வானளாவ புகழ்ந்தாலும் அதை கேட்கவேண்டிய இரண்டு செவிகளை அந்த பாராட்டு சென்றடையாது. அதுதான் உண்மையும்கூட.
வண்ணதாசன் இதை சரியாக செய்திருந்தார். ’தடம்’ வெளிவந்த மறுநாளே வரவனை செந்திலின் ’காலிகிராபி’ கதையையும் ’முன்று சீலைகள்’ கதையையும் பாராட்டி எழுதியிருந்தார். இலக்கியம் பேசுபவனும் இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவனும் செய்ய வேண்டியது இதுதான். எங்கே அவனை பாராட்டி பேசினால் அவனது புத்தகம் நான்கு அதிகமாக விற்றுவிடுமோ என்று கள்ளமௌனம் காப்பது அசிங்கம்.
சக மனிதனை தட்டிக்கொடுங்கள். குறைந்துவிடமாட்டீர்கள்.
-பிகு
08-07-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா