தேங்க்ஸ்க்கா

"தேங்க்ஸ்க்கா"
------------------------------
"ஏய், காசுக் கொடு,
அக்காவுக்கு தீவாளி காசு கொடும்மா"
என்று செந்தூர் எக்ஸ்பிரஸின் S6 பெட்டியில் என்னிடம் கேட்கிறாள் நங்கையொருவள், திரு.நங்கையொருவ(ள்); 
"காசிலக்கா" என்று மறுதலிக்கிறேன்,
பொய் சொல்லுகிறேன்.
பொய் இயல்புதானே;
அதைத்தானே இத்தனை நாள் பழகியிருக்கிறோம்!!
"நல்ல அழகா ராஜா மாதிரி தான இருக்க, அக்காவுக்கு கொடுத்தா என்னவாம்??" என்று கன்னம் கிள்ளினாள்.
சட்டென்று பூரித்துவிட்டேன், கன்னம் கிள்ளி என்னை ராஜாவென்று யாரும் இதுவரை கூறியதில்லை.
சென்றுவிட்டாள்;
'அவர்களை' எப்போதும் அக்காவென்றே நான் அழைக்கிறேன்.
அக்கணம் அவர்கள் கண்களில் ஒரு ஒளி தோன்றுவதைப் போலிருக்கும் அல்லது அவ்வாறு தோன்றுவதாக நான் நினைத்துக்கொள்வேன். மீண்டும் ஒருமுறை என்னைக் கடந்துச் சென்றாள், மீண்டும் கன்னம் கிள்ளி "ராஜா மாதிரி இருக்க" என்றாள், அவள் கொஞ்சம் தள்ளிச் சென்ற பிறகு கத்திச் சொன்னேன், "தேங்க்ஸ்க்கா". என்னையுமறியாமல் அந்த "அக்கா"வில் அழுத்தம் கூடியிருந்தது;
அந்த கண்களின் ஒளி, பின் மண்டையில் தெரிந்தது போலிருந்தது எனக்கு!!!
-பிகு.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா