வேர் பிடித்த விளை நிலங்கள்!

வேர் பிடித்த விளை நிலங்கள்!
0
நேற்றைய தினம் ஜீவா படைப்பகம் வெளியீடாக எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களின் ”வேர் பிடித்த விளைநிலங்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா தி.நகர் தக்கர் பாபா பள்ளி, வினோபா அரங்கில் நடைபெற்றது. இதுகுறித்து, ஒரு வாசகனாக, எழுத்தாளனாக, பதிப்பாளனாக கார்த்திக் புகழேந்தி அதிகம் எழுதியிருக்கிறார்.
நான் எழுத இருப்பது என்னவென்றால், ஒரு புத்தக வெளியீடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேற்றைய நிகழ்வு ஒரு உதாரணம். ஒரு துண்டு அல்வாவுக்காகவும், ஒரு கோப்பை கருப்பட்டி காப்பிக்காகவும் இதை சொல்லவில்லை. இதுவரை நான் சென்ற இலக்கிய நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் பெரும்பாலும் தனிநபர் துதி பாடுவதாகவும், அடிவருடுவதாகவுமே இருக்கும். ஆனால், நேற்றைய நிகழ்வு அதற்கு நேர்மாறாக இருந்தது.
”அக்ச்சுவலா இந்த புக் இன்னிக்கு மார்னிங் தான் என் கையிலயே கிடைச்சது பாத்துக்கோங்க, சோ நான் இத முழுசா படிக்கல” என்று சொல்வது இப்போது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது. ஒருவேளை புக்கை முன்னதாகவே கொடுத்து படித்துவிட்டால் பேச வரமாட்டார்களோ என்று பதிப்பாளர் செய்யும் உத்தியா இதுவென்றும் தெரியவில்லை. சரி, அது கிடக்கட்டும். நான் சொல்ல வந்தது வேறு.
சிலர் இருப்பார்கள், எந்த விழாவாக இருந்தாலும் என்ன தலைப்பாக இருந்தாலும், என்ன பேச சொன்னாலும் அவர்களுக்கு என்று ஒரு பார்மெட் வைத்து இருப்பார்கள், அதை வரி தவறாமல் ஒப்பித்துவிட்டு, ஏதோ உலகளாவிய சொற்பொழிவு ஆத்தியதைப்போல் ஒரு பெருமித பார்வை ஒன்று பார்ப்பார்கள் பாருங்கள்… சரி அது எதற்கு நமக்கு விட்டுத்தள்ளுங்கள்…..
முதலில் எழுத்தாளர் பாக்கியம் சங்கர் பேசினார். அடுத்ததாக ஊடகவியலாளர் ரோகிணி பேசினார்.
”கரு. ஆறுமுகத்தமிழன்” என்று ஒருவர் பேசினார் பாருங்கள், மனுசன் பிச்சு உதறிட்டாரு; ஜோ டி குரூஸே கொஞ்சம் மிரண்டிருப்பாரு-னு நினைக்கிறேன். ஒரு புத்தகத்தை படித்துவிட்டு என்ன என்னவெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப்போட்டு ”அவ்வளவுத்தாண்டா போங்கடா” என்ற ரீதியில் பேசினார்.
நண்பர் என்பதற்காக கூஜா தூக்கவோ, ’சோப்’போடவோ இல்லை. உள்ளதை உள்ளபடி அப்படியே அப்பட்டமாக மேடையில் கைநீட்டி கேள்வி கேட்கிறார். ’ஜோ’வின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என்று போட்டாரே ஒரு போடு, முடிந்தது கதை.
இதுதான், இதுபோலத்தான் இருக்கவேண்டும் ஒரு இலக்கிய நிகழ்வு. சும்மா ஏத்தி ஏத்தி விடுவதாகவும், சொறிந்து விடுவதாகவும் இருக்க கூடாது. இலக்கியம் பேச தொடங்கியிருக்கும் தற்கால இளைஞர்கள் இதுப்போன்ற ஒரு விமர்சனத்தையே முன்வைக்க வேண்டும். பம்மிக்கொண்டும் பதுங்கி கொண்டும் இருந்தால் எழுத்தாளன் நம்மை எளிதாக ஏமாற்றிவிடுவான்.
அவன் எமகாதகன்!
இதுப்போன்ற இன்னும் பல நிகழ்வுகளை தற்கால இலக்கிய அமைப்புகள் எடுத்து நடத்துவதில் முனைப்புக் காட்ட வேண்டும். காட்டுவோம்!
ஆறுமுகத்தமிழன் பேசிக்கொண்டிருக்கையில் அண்ணன் கார்த்திக் புகழேந்தி என்னருகில் வந்து, ”தம்பி, எப்படி பேசுறாரு இவரு”?? என்று கேட்டுவிட்டு ஒரு சிரிப்பு சிரித்தார். அதில் நான் பார்த்தது, எழுத்தாளர், வாசகர் கா.பு.வை அல்ல; ஒரு ”பதிப்பாளர்” கார்த்திக் புகழேந்தியை தான்
டாட் .
கார்த்திக் புகழேந்தி | அகர முதல்வன் | Sekar Sakthivel | Arasan | Giridaran Giri | Muru Gesh | Pargunan Babu | Kesavaraj Ranganathan | மற்றும் நேசத்திற்குரிய ஓவியர். கவிமணி கவி
புகைப்படம் : Renga Karuvayan
-பிகு
19-06-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா