விளிம்புக்கு அப்பால் சிறுகதை தொகுப்பை முன்வைத்து

விளிம்புக்கு அப்பால் சிறுகதை தொகுப்பை முன்வைத்து
0
சமீபத்தில் வெகு ஆர்வமாக வாசித்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று. அதற்கு முக்கிய காரணம், இதில் எழுதி இருப்பவர்களில் பெரும்பாலானோர் என் வயதை ஒத்தவர்கள். (கி.ரா. எழுத வரும்போது அவருக்கு வயது 35-க்கு மேலாம். இதில் ஒரு கதை எழுதியிருக்கும் நாக பிரகாஷின் வயது 19!) இதில் வெளியாகியிருப்பது சிலரின் முதல் சிறுகதை, மேலும் இதிலிருக்கும் சிலருடன் பேஸ்புக் பழக்கமும் உண்டென்பதால் இந்த தொகுப்பை வாசிக்க அதிக ஆர்வம் காட்டினேன். மொத்தம் 14 கதைகள். ஒவ்வொன்றாக எழுதுகிறேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம்.
1.      நின்று கொல்லும்அரசன்
ஒரு அசலான கிராமத்து கதை. நமக்கு அதிகம் பழக்கமில்லாத கிராமத்தில் புழங்கும் வார்த்தைகளை அங்கங்கு பயன்படுத்தியிருக்கிறார். மேலும், கிராமங்களுக்கே உண்டான சில விஷயங்களை உட்புகுத்தி நம்மை அந்த சூழலுக்குள் அழகாக அழைத்து செல்கிறார். ஒரு சிறுகதைக்கு உண்டான வரைமுறை என்று நாம் சிலதை வகுத்து வைத்திருக்கிறோம் இல்லையா? (தொடக்கம்-உச்சம்-முடிவு) அதை இந்த கதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. கதையின் கரு என்று எடுத்துக்கொண்டால், நமக்கு நன்கு அறிமுகமானதுதான். கதை ஒரு கட்டத்திற்கு மேல் நகர்ந்த பின்னர் முடிவை நாமே யூகிக்ககூடியதாகத்தான் இருக்கிறது. அதை சொன்ன விதம்தான் கொஞ்சம் வேறுபடுகிறது. தேவைக்கு அதிகமாக சில விவரணைகள் இருக்கிறதோ என்று தோணுகிறது. உதாரணமாக, கதையில் ஆறாவது பத்திகூடைகள்குறித்து வரும். அதை படிக்கும்போது எதற்கு இது என்ற ஒரு கேள்வி எழுகிறது. சரி, அதை பின்னால் எங்காவது பயன்படுத்தியிருப்பார் என்று பார்த்தால், எங்கும் இருப்பதாக தெரியவில்லை. தன்னிடம் இருக்கும் அத்தனை சரக்கையும் இறக்கிவிட வேண்டும் என்று எழுத்தாளன் நினைப்பது சரிதான். ஆனால் எந்த இடத்தில் இறக்குகிறோம் என்பது முக்கியம்தானே. சில இடங்கள் தேவையில்லாமல் துருத்திக்கொண்டிருப்பது போல் தெரிகிறது.
அரியலூர் அரசனுக்கு வாழ்த்தும் வரவேற்பும். இன்னும் எதிர்பார்க்கிறோம் உங்களிடம். அடித்து ஆடுங்கள் அரசன்!
2. சங்கிலியன் படை
ஈழத்துக் கதைகள் அவ்வளவாக வாசித்ததில்லை. ஈழ எழுத்தாளர்கள் அறிமுகம் இருந்தாலும் படைப்பு என்று உள் நுழைந்ததில்லை. .முத்துலிங்கம் வாசித்திருக்கிறேன். ”ஆட்டுப்பால் புட்டுஎன்றொரு தொகுப்பு. .முத்துலிங்கத்தை ஈழ எழுத்தாளர்கள் வரிசையில் அவரை சேர்க்கலாமா என்று தெரியவில்லை. இருந்தாலும் இருக்கட்டும். அகரமுதல்வன் அண்ணன் பழக்கமுண்டு. கவிதைகளை கடந்து வந்திருக்கிறேன். பல கவிதைகள் கடக்க முடிந்ததில்லை. கனமான கவிதைகள் அவை. சங்கிலியன் படைக்கு வருவோம்.
அண்ணனிடம் கொஞ்சம் பேசியதாலோ என்னவோ, இதில் இருப்பவை எதுவும் எழுத்துக்களாக தெரியவில்லை. அகரனின் குரலாகத்தான் கேட்கிறது. இந்த ஈழத்தமிழ் மீது எனக்கொரு கிரேஸ் உண்டு. நிறைய பேருக்கு இது இருக்கும்.
உதாரணமாக.,
ஜெயந்தனைச் சுட்டுட்டாங்கள்” – அந்தள்மீதுதான் அத்தனை கிரேஸும் !
பொலிஸ்காரர்களோடு நீதவான்” – ’பொலிஸ்காரர்களோடுஅந்தபொ’!
டோர்ச் லையிற்றால் – ‘டோர்ச்அந்தடோ’!”
இதேப்போல் நிறைய இருக்கின்றன. படித்து உய்யுங்கள்.
இது ஒரு கொடூரமான கதை. ஈழத்து கதைகள் என்றாலே அதானே. இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நம்பிக்கை துரோகத்திற்கான தண்டனை. காதலுக்கு செய்த குரோதத்திற்கான மரண பரிசு. இதுவரை நாம் வாசித்த கதைகளில் இருந்து சற்று வேறுபடுகிறது. அடங்கியவனின் அவலத்தை நிறைய கதைத்து இருக்கிறோம், இது அடங்கியவன் அத்துமீறி எழுந்தால் என்னவாகும் என்ற கதை. உடனிருந்து குழி பறித்தவனின் கதை. காதலித்த பெண்ணை புணர்ந்து கொன்றவனை கொல்லும் கதை. கொலை என்றாலே அநியாயம் என்ற எண்ணத்தை உடைத்தெறியும் கதை.
இப்பேர்ப்பட்ட ஒரு கதையை லா..ரா மாதிரி எழுத முடியுமா?? அப்படித்தான் எழுதியிருக்கிறார் முதல்வன்.
உதாரணமாக.,
இரவின் பேரின்ப வாசனை வெளியை வலை பின்னிக் கொண்டிருக்கிறது.
மின்குமிழ்களின் வெளிச்சம் சிவப்பு நிற குரோட்டன்களில் பூத்து நின்றன..
தீயின் ஒளி காற்றில் கலைந்து ஜெயந்தன் போலொரு புன்னகை செய்தது.
உயிரின் வெக்கையான நிறம் கறையாக நெளிந்து போனது.
பழுத்த பலா இலையின் நிறத்திலான சட்டை.(எப்படி இருக்குமென யோசிக்கிறேன்)
இன்னும் பல…..
ஒரு அக்மார்க் ஈழத்து கதை. இன்னும் கொஞ்சம் கிளாரிட்டி இருந்திருக்கலாமோ என்று  எனக்கு தோன்றியது. ஏனெனில் வேறொரு நிலத்தின் கதையை சொல்கிறபோது வாசிப்பில் தடுமாற்றம் வருவது இயல்புதான், மற்றும் கதையின் அமைப்பும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால், வாசகன் குழம்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனக்கும் முதல்முறை படிக்கையில் வேறு தோணியது, பின்னர் வாசிக்கையில் வேறு தோணியது. அடுத்து வாசிக்கையில் வேறு தோணலாம்!
மேலும், முதல் 10,15 வரிகளுக்குள்ளாகவே 6 முறை சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான், மிக வேகமாக மிதித்தான், மித வேகமாக சென்றான் என்று வெவ்வேறு சொற்களில் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது.
மற்றபடி அகரன் ஈழத்தை தனது கதைகளின் மூலம் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய வேண்டும்.
வாழ்த்துகள் அகரன்!
முஸ்தபாவை சுட்டுக்கொன்றது குறித்து பின்னர் பேசுவோம்.    
3.      பரிசு எண்கள்விஷால் ராஜா
விஷால் ராஜாவின் கதைகள் முன்னமே கொஞ்சம் படித்திருக்கிறேன். அவரின் மற்ற கதைகளை விட இது என்னை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். கதையை அழகாக கொண்டு செல்கிறார். ஒரு ஊரில் திருவிழா நடக்கிறது, அங்கு கடைவீதியில் நடக்கும் ஒரு காட்சியை மூன்றாவது ஆள் ஒருவன் சொல்வது போல் கதை செல்கிறது. என்னளவில் கதைக்கு டீடெயிலிங் முக்கியம் என்று நினைப்பேன். அது இதில் சாத்தியப்பட்டிருக்கிறது. அதுவே, மைனஸாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது.
அதாவது, அந்த ஊரின் சூழலுக்குள் வாசகனை இழுத்து செல்வதற்காக அந்த ஊரில் நடக்கும் திருவிழாவை காட்சிப்படுத்துவதாய் ஆரம்பத்தில் ஒரு பகுதி வருகிறது. அது கொஞ்சம் அதிகப்படியாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. அதை இவ்வளவு பெரிதாக சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை, இன்னும் சுருக்கமாக சொல்லியே அதை காட்சிப்படுத்திவிட முடியும் விஷால் ராஜாவால்.
கதை சென்று கொண்டிருக்கும்போதே திடீரென்று ஒரு சிறுவன் வருகிறான். (அந்த ஏரி சிறுவன்) அந்த பகுதி இல்லாவிட்டாலும் கதை முழுமை அடைந்திருக்கும் தான். அந்த திடீர் காட்சி அவசியம்தானா? ஒருவேளை எழுத்தில் சமூக அக்கறை இருந்தே ஆகவேண்டும் என்று யாரோ சொன்னதால் அந்த காட்சி திணிக்கப்பட்டிருக்கலாம் என்று தோணுகிறது.  
கதை களமும் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கலாம் என்றெண்ணுகிறேன்.
வாழ்த்துகள் விஷால் ராஜா!
4.      தங்கம் - ஷான்
இந்த தொகுப்பில் இருக்கும் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று இந்த தங்கம்”. நான் இந்த சொற்களுக்கு பெரிய அடிமையாகிவிடுகிறேன். எம்பட தங்கம்என்று சத்தார் ஆரம்பிக்கும் அந்த நொடியே, கதை என்னை இழுத்துக்கொண்டது. இந்த கதையை முடிக்கையில் மயிர் சிலிர்த்தது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது ஆனால் மயிர் சிலிர்த்தது என்பதுதான் உண்மை. அதுவும் அந்த சத்தார் கதாபாத்திரம் தமிழ் சிறுகதை வரலாற்றில் ஒரு கிளாஸிக். கதை மொத்தத்தையும் சுமந்து செல்கிறாள் சத்தார். ஆம், நான் சத்தாரை அவள்என்றே சொல்கிறேன். கதையிலும் அவள் என்று வந்திருக்கலாமோ என்று தோன்றியது. வழக்கமான க்ளிஷேவான ஒரு கதை தான். ஒரு திருநங்கை. அவளுக்கு ஒரு காதல்(அது காதலில்லை அதற்கும் மேல்). அது கைக்கூடவில்லை. அவளது காதலனுக்கு உதவுகிறாள். அதன்மூலம் வரும் சிக்கல்களால் அவளுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் கதை. நான் எளிதாக சொல்லிவிட்டேன். ஆனால் ரொம்ப சென்ஸிட்டிவான கதையிது.
செம்ம ஷான் அண்ணா..
முத்தங்கள்!

5.      பெர்ஃப்யூம் - ரமேஷ் ரக்சன்
எனக்கு எப்போதுமே பேஜ்போபியா உண்டு. அதாவது ஒரு சிறுகதை குறிப்பிட்ட சில பக்கங்களை தாண்டிவிட்டால், என்னை அறியாமல் ஒரு அயர்ச்சி உண்டாகிவிடும். கதையின் நீளத்தை அந்த கதை தான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய, அதை எழுதுபவன் முடிவு செய்ய கூடாது, இயலாது என்பதை ஏற்கிறேன். அதிக பக்கங்கள் இருந்தாலும் என்னை கைப்பிடித்து அழைத்து சென்ற கதைகள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக, யானை டாக்டர். மூன்றே பக்கங்களில் அத்தனை அழகாக ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் ரமேஷ் ரக்சன். கதையின் பெயர் பெர்ஃப்யூம்”. என்னளவில் இது ஒரு தைரியமான முயற்சி என்றே சொல்வேன். ஒரு எழுத்தாளன் தன் எழுத்தின் மீதுவைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே இதுப்போன்ற கதைகள் எழுத தூண்டுவதாக இருக்கிறது. கவித்துவமான கதையிது. வாசித்து பாருங்கள். ஆண், பெண் உளவியல், உறவுகள் குறித்தும் தந்தையை இழந்த பெண்ணொருத்தி குறித்தும் நாம் யோசிக்காத ஒரு களத்தில் நின்று சொல்கிறார் ரக்சன். இந்த கதையை வாசித்த உடன் இவரது மற்ற கதைகளையும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுகிறது. இந்த கதையை தேர்ந்தெடுத்த அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.
வாழ்த்துகள் ரமேஷ் அண்ணே!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா