#வாசகசாலை 2

#வாசகசாலை மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து வழங்கிய தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வு முடிந்து இரண்டு நாட்களாகியும் எழுதாமல் இழுத்தடித்து வந்தேன், நேற்று அண்ணன் Raja Rajendran வின் பதிவை பார்த்தவுடன், எனக்கும் எழுத வேண்டுமென்று தோன்றியது.
சமகாலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு வாசகசாலை ஆற்றிவரும் பங்கு அளப்பரியது. தமிழில் அவர்கள் தொடாத களங்களே இல்லை. நாவல் குறித்து விவாதிக்கிறார்கள், சிறுகதைகளுக்கென்று பிரத்யேக கதையாடல் கூட்டங்கள் நட்த்துகிறார்கள், கவிதைகளையும் விட்டுவைப்பதில்லை. பொதுவாக ஒரு ஆர்வகோளாறில் இப்படி சில அமைப்புகள் தோன்றுவதுண்டு. பெரும்பாலும் அவை மழையில் முளைத்த காளானாகவே இருக்கும். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித தொய்வுமின்றி இலக்கியம் குறித்து பேசி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் இது தொடர வேண்டுமென்பது என் ஆசை.
கடந்த ஞாயிறு அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், இக்காலமின்றி எக்காலமும் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகளான ஜெமோ., எஸ்.ரா, சாரு அவர்களுடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (தலா ஒன்று) குறித்தான அமர்வு நடந்தது. மூவரும் என் வாசிப்புக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அமர்வில் நானும் கலந்துக்கொண்டேன். மனநிறைவான ஒரு நிகழ்வாய் இருந்தது. ’அறம்’ குறித்து நண்பர் சையது அழகாக பேசினார் (நந்தி கலம்பகம் குறித்து திருமதி. லதா பேசியது போனஸ்). அதை தொடர்ந்து சாருவின் ’முள்’ குறித்து அஸ்வினி மற்றும் எஸ்.ரா.வின் ’ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி’ குறித்து தோழர் ஆரோனும் அருமையாக பேசினர். அனைத்திற்கும் உச்சபட்சமாக அண்ணன் பார்த்திபன் பேசியது நிகழ்வின் ஹைலைட்.
வாசகசாலையின் இலக்கிய பயணத்தில் கைகோர்த்து நடப்பதற்கு தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன்!
வாழ்த்துகள் வாசகசாலை.
(மீண்டும் ஞாயிறு மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்திப்போம்)
நன்றி.
-பிகு
07-03-2016
கதைகளுக்கு:-
சாரு: http://azhiyasudargal.blogspot.in/2010/10/blog-post_04.html
எஸ்ரா: http://www.sramakrishnan.com/?p=4498
ஜெயமோகன்: http://www.jeyamohan.in/11976#.WLOlNn1X5oM //

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா