முதல் சம்பளம்

முதல் சம்பளம்
.
ஒருவனுடைய வாழ்வில் முதல் சம்பளம் மிக முக்கியமானது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தந்தையின்/தாயின் சம்பாத்தியத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்து, பெற்றோரிடம் தயங்கி தயங்கி பணம் பெற்று செலவழிக்கையில் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்துக்கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து சற்றே பெருமிதத்துடன் நடக்க வைக்கும் இந்த முதல் சம்பளம். தன் சொந்த சம்பளத்தில் ஒரு செருப்பு வாங்கினாலும் அது ஆத்ம திருப்தி தான். சம்பளம் வாங்குவதை விட அதை செலவளிப்பது தனிக்கலை. முதல் சில மாதங்கள் அந்த ஐந்து இலக்கத் தொகை மீதிருக்கும் மோகத்தால் பணம் தண்ணியாய் செலவழியும். பின்னரே ஒரு திடத்தன்மை வந்து, செலவுகள் கட்டுக்குள் நிற்கும்.

அந்த தொகை 1000 ஆக, 10,000 ஆக அல்லது 99,999 ஆக இருக்கலாம்; என்னவாக இருந்தாலும் அது முதல் சம்பளம்!!
என் உழைப்புக்கான ஒரு வெகுமதி; அங்கீகாரம்.
அதுவும் முதல் சம்பளத்தில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நமக்கு "பிடித்தவர்களுக்கும்" பிடித்ததை வாங்கி கொடுப்பது என்பது முத்தத்தை போன்றது. கொடுப்பவருக்கும் இன்பம்
பெறுபவருக்கும் இன்பம்!!
சிலருக்கு முத்தம் போன்றவை பரிசாக..
சிலருக்கு முத்தமே பரிசாக!!!
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா