பேத்தையன்



பேத்தையன்
~

பேத்தையன் தெரியுமா உங்களுக்கு?
பொல்லாத பயல் அவன். ஆழம் குறைவாக இருக்கும் கடல் பகுதிகளில் வாழும் அரியவகை மீன் அது. எப்படி இடத்துக்கு தகுந்தபடி, நேரத்திற்கு தகுந்தபடி மாறிக்கொள்பவர்களை நிலத்தில் பச்சோந்தியுடன் ஒப்பிடுகிறோமோ, அதற்கு சிறிதும் குறைவில்லாதவன் இந்த பேத்தையன்.
ஆம், தன்னை விட பெரிய மீன் ஏதாவது அதை உண்ண வரும்போது தண்ணீரை தனக்குள் இழுத்துக்கொண்டு தனது உடலை பலூன் போல ஊதச்செய்து உருவத்தை மாற்றிக்கொள்ளும். உண்ண வந்த மீனோ குழம்பி திரும்பிச்சென்றுவிடும். மேலும் அவ்வாறு ஊதச்செய்கையில் அதன் மேல் இருக்கும் முட்கள் மற்ற மீன்களை குத்தி கொன்றுவிடும்.
இது பெரும்பாலும் கடல்புரத்திலே வாழ்ந்தாலும், ஆறுகளிலும் வாழும் தன்மையுடையது. இந்த மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தாலும் காற்றை தன்னுள் இழுத்துக்கொண்டு உருவத்தை மாற்றிக்கொண்டு நம்மை மிரட்டி நமக்கே விபூதி அடிக்க பார்க்கும்.
நம்மை சுற்றியும் பேத்தையன்கள் நிரம்பிக் கிடக்கின்றன(ர்)! ஜாக்கிரதை..
(சோர்ஸ்: தி இந்து & கூகுளாண்டவர்!)
- பிகு
31-1-03-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா