#வாசகசாலை 4

#வாசகசாலையின் இலக்கிய செயல்பாடுகள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்வேறு தளங்களில் சிறப்பாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ”ஈழத் தமிழ் எழுத்தாளர் வரிசை” என்ற தொடர் நிகழ்வில் இந்த முறை திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் சமீபத்திய வெளியீடான ’ஆட்டுப்பால் புட்டு’ சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் வடபழனி ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் நடைப்பெற்றது. சிறப்புரையாற்ற தோழர். செல்வா அவர்களும் வாசகர் பார்வையில் சிந்து அக்காவும் நானும் பேசினோம். தேர்ந்தெடுத்த கதைகளின் மூலம் நுட்பமான விஷயங்களை மிக அழகாக கோர்வையாக பேசினார் சிந்து. சீக்கிரம் முடித்தது போலிருந்தது; இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருக்கலாம் என்பதென் எண்ணம். அடுத்ததாக என் முறை. ஓரளவு வாசிப்பு அறிமுகம் இருந்தாலும் ஒரு முழு இலக்கிய நிகழ்வில் ஒரு மூத்த எழுத்தாளரை பேசுவதென்பது எனக்கு முற்றிலும் புதிது. அ.முத்துலிங்கத்தின் கதைகளையும் கட்டுரைகளையும் ஆங்காங்கு கொஞ்சம் வாசித்ததுண்டு. அவரின் எழுத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்வு, அவர் பயன்படுத்தும் உவமைகள், அவரது விவரணைகள் மற்றும் அவரது எழுத்தில் தென்படும் சில டெக்னிக்கல் விஷயங்களையும் முன்வைத்து கொஞ்சம் பேசினேன். அடுத்ததாக வந்த தோழர். செல்வா-வின் பார்வை வேறாகவும், கோணம் வேறாகவும் இருந்தது. ”காமாலைக்காரனுக்கு பார்க்குறதெல்லாம் மஞ்சள்” என்பது போல் அண்ணனின் பார்வை முழுதும் அவர் இயங்கி வரும் தளத்தை ஒத்தே இருந்தது. இந்த கதைகளில் இருக்கும் அரசியலை தற்கால சூழலுடன் ஒப்பிட்டு மிக அழகான தெளிவான ஒரு உரையாக இருந்தது. கடைசியாக வழக்கம்போல் எண்ட்ரி கொடுத்த பார்த்தி அண்ணன் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் விளாசி சென்றார். நம் பங்குக்கு கைத்தட்ட அழைத்து சென்ற அந்த 4 பேரையும் சேர்த்து நிகழ்வில் 20 பேர் கலந்துக்கொண்டனர்.
வாசிப்பு, முகநூல் என்ற அளவிலிருந்த எனக்கு இலக்கியம் பேசுவதற்கு ஒரு மேடை அளித்த வாசகசாலைக்கு நன்றிகள்!
அந்த 4 பேர் : Sekar Sakthivel, Murugan SundaraPandian, Hariharasuthan TG, Archana Dharshini (விழா கமிட்டி சார்பாக அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!)
-பிகு

26-03-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா