பனுவல்-பை கணித மன்றம்-திருவான்மியூர்


பனுவல்-பை கணித மன்றம்-திருவான்மியூர்

-
இன்று பை கணித மன்றம் – பனுவல் புத்தக நிலையம் இணைந்து தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடத்திய, ”கதையில் கலந்த கணிதம்” கருத்தரங்கில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நேற்று பனுவலில் இருந்து வந்திருந்த மெயிலைப் பார்த்தவுடனே போகவேண்டும் என்று முடிவு செய்தாகிவிட்டது. மதியம் சாப்பிட்ட சிக்கனின் கைங்கர்யத்தால் சற்றே கண்ணயர்ந்துவிட்டேன். எழுந்து அவசரம் அவசரமாக கிளம்பி 5.40க்கு போய் சேர்ந்தேன்; ஆனால், சரியாக 5.30 மணிக்கு நிகழ்வு தொடங்கிவிட்டது. 
பேராசிரியர். சிவராமன் மிக எளிமையாக தெளிவாக நமது முன்னோர்கள் கணிதத்தை கையாண்ட விதத்தையும், நம்மையறியாமலே நம்முள் ஒன்றர கலந்துக்கிடக்கும் கணிதத்தையும் விளக்கினார். பொதுவாகவே சிலருக்கு சில விஷயங்களில் ஆர்வம் இருக்கும், ஆனால் ஏதோ ஒன்று அவர்களை செயல்படவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த அமர்வு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. பல புதிய விஷயங்களை ஆர்வமுடன் தேடி படிக்க வழிசெய்கிறது. பேராசிரியர் சிவபுராணத்திற்கும் கணிதத்திற்கும் முடிச்சிடுகிறார். மகாபாரதத்தை கணிதத்துடன் இணைக்கிறார். இப்படியெல்லாம் சொல்லும் போது எண்களின் மீது ஒரு ஈர்ப்பு தானாக வந்து ஒட்டிக்கொள்கிறது. அமர்வு முடிகையில் ஏதையோ தெரிந்துக்கொண்டுவிட்ட ஒரு உணர்வு வருகிறது. இதிலிருந்து இன்னும் ஒரு மாதத்திற்கு தேடிப்படிக்கவும், கற்றுக்கொள்ளவும் விஷயங்கள் கிடக்கிறது, அதற்குள் அடுத்த நிகழ்வு வந்துவிடும்..
பனுவலுக்கும் பை கணித மன்றத்திற்கும் வாழ்த்துகள்!
-பிரவின்குமார்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா