பாம்பு சட்டை - சினிமா


பாம்பு சட்டை

.
இந்த படத்திற்கு தான் போக வேண்டுமென்றெல்லாம் எந்த திட்டமுமில்லை. எந்த படத்திற்கு டிக்கெட் கிடைத்தாலும் போய்விடலாம் என்ற நிலையில் தானிருந்தோம். துரதிர்ஷ்டவசமாக பாம்பு சட்டை கிடைத்தது. 
நாயகன் தன்னோட பணத்தேவைக்காக ஒரு கள்ளநோட்டு கும்பலிடம் செல்கிறான், அங்கு ஏமாற்றப்படுகிறான்; பின்னர் என்ன நடக்கிறது? ஹீரோ என்னவாகிறார், பணம் கிடைத்ததா என்பது மீதிக்கதை.
எடுத்துக்கொண்ட ஒன்லைன் ஓகே என்றாலும் அதை கதையாக்கியதில் நிறைய தடுமாற்றங்கள். ஆங்காங்கே வசனங்கள் தெறிக்கவிடுகின்றன. சில காட்சிகள் தான் என்றாலும் சார்லி ஸ்கோர் செய்கிறார். விதவை மறுமணம், துப்புரவு தொழிலாளியின் நிலை போன்ற முற்போக்கு விஷயங்களெல்லாம் பேசினாலும் ஹீரோயினை டார்ச்சர் பண்ணியே லவ் வர வைக்கும் இடத்தில் இயக்குனர் கடுப்பேத்துகிறார்.
பாபி சிம்ஹாவும், கீர்த்தி சுரேஷும் யார் மோசமாக நடிப்பதென்று போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். (ஏம்ப்பா..பாபி உன்ன பெரிய நடிகனுலாப்பா நினைச்சேன்). கீ.சு அழகாகவே இருக்கிறார், வாயை திறக்காதவரையில். மொட்டை ராஜேந்திரன் காமெடி சொல்லுமளவுக்கில்லை. 
பின்னணி இரைச்சல். 'தாமிரபரணி' பானு ரீ- என்ட்ரி ஓகே. வேற வில்லனே கிடைக்கலயா சாமி?? இயக்குனர் மகேந்திரனுக்கு (தெறி வில்லர்) தம்பி மாதிரி இருக்காரு. சீரியஸாவே வில்லன் நல்ல காமெடி பண்றாரு. யாருக்கும் நடிக்க வரலையா இல்ல இயக்குனருக்கு நடிப்பு வாங்கத் தெரியலையானு தெரியலை. தற்போதைய தமிழ் சினிமா சூழலில் முதல் படம்தானே என்று காம்பரமைஸ் செய்துக்கொள்ள முடியாது. இப்போது வரும் இளம் இயக்குனர்களின் படங்களெல்லாம் வேற லெவலில் இருக்கின்றன. எதுவா இருந்தாலும் அடுத்த படத்திற்கு இயக்குனர் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். 
-பிகு
27-03-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா