#சென்னை_டேஸ்


கண்டக்டர் எல்லாம் ஒரு முடிவோட தான் இருக்காங்க போல. அன்னிக்கு ஒரு சம்பவம் சொன்னேன்ல, அதேமாதிரி நேத்து ஒண்ணு. ஜெயின் காலேஜ் டூ ஐஐடி போயிட்டிருக்கேன். பெருங்குடில ஒரு பொண்ணு ஏறுது. தலையில வழக்கமான மண்டக்கட்டு, காதுல ஹியர்போன், ஜீன்-டாப். பஸ்ஸோட முன் கதவு பக்கத்துல கண்டக்டர் உட்கார்ந்து இருந்தாரு. அந்த பொண்ணு ஏறுன உடனே டிக்கெட்னு கேட்ட நம்மாள கண்டுக்காம கடைசி சீட்டுல போய் உட்காந்துகிச்சு. நம்மாளு கடுப்பாயிட்டாப்ல. ஏதோ வாய்க்குள்ள முனங்கிகிட்டே போயி டிக்கெட் கொடுத்துட்டு பழைய இடத்துலயே வந்து உட்கார்ந்துட்டாரு. பின்னாடியே பதறிப்போய் ஓடி வந்த அந்த பொண்ணு, "அண்ணே, பத்து ரூபாய் கொடுத்தேன். ஏழு ரூபாய் டிக்கெட் போக மீதி மூணு ருபாய் தரணும், நீங்க ஒரு ரூபாய் தான் தந்துருக்கீங்க"னு சொல்லிட்டு மீதி சில்லறைய வாங்கிட்டு போகுது. "ஒழுங்கா மொதல்லயே டிக்கெட் வாங்கிட்டு போயிருந்தா இப்படி பண்ணிருக்க மாட்டேன்ல; நீ என்னைய அலைய வச்ச, நான் உன்னைய வர வச்சேன்" என்று மைண்ட் வாய்ஸில் சத்தமாக அந்த கண்டக்டர் 'சார்' பேசியதை இந்த பஞ்சகல்யாணி பதிவாக்கி புளங்காகிதம் அடைந்தான்!!!

-பஞ்சகல்யாணி
27-03-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா