சென்னை புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி
0
1. என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு நல்ல முன்னெடுப்புதான். தொடரலாம் தப்பில்லை.
2. ஸ்டால்களுக்கு விலை குறைவுதான். அதிகம் ஆசைப்படாத, கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்துக்கொண்ட பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் கைப்பிடித்தம் இருந்திருக்காது.
3. பபாஸி நடத்தும் புத்தக திருவிழாவிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமாக நான் கருதுவது ”விளம்பரம்” தான்.
4. விலை அதிகமென்ற வழக்கமான புலம்பல்களை கேட்க முடிந்தது. (இதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்)
5. சிறிய இடம் என்பதால் காற்றோட்ட வசதி ரொம்ப குறைவு. ஏதேனும் ஏற்பாடு செய்யலாம்.
6. உள்ளே இருக்கும் அறிவுக்குவியல்களுக்கு சிறிதும் குறைவின்றி வெளியே ஏராளமான நிகழ்வுகள் நடந்துக்கொண்டே இருந்தது.
7. பெரிய மேடைக்கட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர்களையும் அறிஞர்களையும் பேச வைத்தது, எழுத்தாளர் முற்றத்தில் நடந்த நிகழ்வுகள் புத்தகக்காட்சிக்கு மேலும் பொலிவூட்டியது.
8. விலை அதிகம் என்றாலும் சில பதிப்பகங்களில் அதிக தள்ளுபடி கொடுத்திருந்தார்கள். காலச்சுவடில் 60% தள்ளுபடியில் குறிப்பிட்ட சில புத்தகங்கள் கிடைத்தது. அதில் அசோகமித்திரனின் ஒரு சிறுகதை தொகுப்பும், பாவ்லோ கொய்லோவின் சஹீரும் வாங்கினேன்.
10. கடைசி நாளில் கூட்டம் அதிகமாக தென்பட்டது. சந்தையில் விலைப்போகாத புத்தகங்களை 50% தள்ளுபடியில் சில கடைகளில் வைத்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் அண்ணன் ஒருவர் கிளாஸிக் நாவல்களையும் 25% தள்ளுபடியில் விற்று, போட்ட மொத்தத்தையும் எடுத்துவிட்டார்.
11. நிறைய நண்பர்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, Kesavaraj RanganathanAngu RajanSekar Sakthivel-க்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறேன்.
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா