ஆண்ட்ராய்ட் மொபைல் ஆன் ஆகவில்லை
எனக்கு முன் என்னவள்களிடம் அதிக முத்தங்களைப் பெற்றவன். ராவும் பகலும் என்னுடன் இருந்தவன். எனது வலது கையாக இருந்தவன். சில குறிப்பட்ட சமயங்களில் மட்டும் இடது கையாகவும் இருந்தவன். கவிதைகள் என்று நான் எழுதியவைகளை முதலில் பார்த்தவன் இவன் தான். பேருந்தில் போகும்போது பாத்ரூமில் இருக்கும்போது என்று அங்கங்கே உதிக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான சிந்தனைத்துளிகளையும் அந்த மொபைலின் டெக்ஸ்ட் மெமோவில்தான் சேமித்து இருந்தேன். கடந்த ஒரு வாரமாக நான் வைத்திருந்த ஆண்ட்ராய்ட் மொபைல் ஆன் ஆகவில்லை. இப்போது கையில் இருப்பது நோக்கியா 1600 பேஸிக் மாடல். இதில் போன் பேசிக்கலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம், அவ்வளவுதான். முதன்முதலில் எங்கள் வீட்டில் மொபைல் என்று வாங்கியது இதுதான். இதுவும் இப்போது நன்றாகத்தான் இருக்கிறது. அறையில் இருக்கும் நேரத்தில் மட்டும் லேப்டாப்பில் இருந்து பேஸ்புக் வருகிறேன். வாட்ஸப்பில் ஸ்டேடஸ் போட வேண்டிய வேலை இல்லை, ப்ளு டிக்கிற்காக குத்தவைத்து காத்திருக்க வேண்டியதில்லை. முக்கியமாக அலுவலகத்தில் வேலையை மட்டும் பார்க்கிறேன்.
அலுவலகத்தில் வேலை மட்டும் பார்க்கவும் கொஞ்சம் போரடிக்கிறது. அது மட்டுமில்லாமல் நமது வாட்ஸப் ஸ்டேடஸை அதிகம் பேர் எதிர்ப்பார்ப்பதாக நானே நினைத்துக்கொள்கிறேன். இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை.
விரைவில் சந்திப்போம்..
-பிகு
Comments
Post a Comment