காதோரம் லோலாக்கு
காதோரம் லோலாக்கு
0
எல்லாரும் ஜிமிக்கி கம்மலில் பிஸியாக இருக்கிறார்கள். நானும் லோலாக்கை பற்றி கொஞ்சம் பேசிக்கொள்கிறேன். ஏற்கனவே சொன்னதுபோல ஆன்ட்டிமேனியா நோயால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதன் வெளிப்பாடு தான் இந்த லோலாக்கு பதிவு.
0
எல்லாரும் ஜிமிக்கி கம்மலில் பிஸியாக இருக்கிறார்கள். நானும் லோலாக்கை பற்றி கொஞ்சம் பேசிக்கொள்கிறேன். ஏற்கனவே சொன்னதுபோல ஆன்ட்டிமேனியா நோயால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதன் வெளிப்பாடு தான் இந்த லோலாக்கு பதிவு.
எப்போது இருந்து என்றெல்லாம் நினைவு இல்லை, ஆனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் சுகன்யாவிற்காக இந்த பாடலை குறைந்தபட்சம் 200 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். கடந்த சௌந்தர்யா பதிவில் சொன்னதுப்போலவே, சுகன்யாவும் அந்த கோணவாய் லிஸ்ட்டில் வருகிறார்.
பாடலின் தொடக்கத்தில் சுகன்யாவின் காதுகளில் அந்த லோலாக்கு ஆடும்போதே நம் மனதும் ஆடத் தொடங்கிவிடுகிறது. இந்த பாடலில் கவனிக்க வேண்டிய அழகான அம்சம் சுகன்யா அணிந்துவரும் ’சேலைகள்’. அந்த பாடல் முழுதுமே கிட்டத்தட்ட காட்டன் சேலைகள் தான். அதிலும் முட்டிக்கு சற்று மேலிருக்கும்படி அணிந்துவரும் அந்த ரவிக்கையெல்லாம் வேற லெவல். இரண்டாவதாக வரும் கத்திரிப்பூ கலர் சேலையையும், பிருஷ்டத்தை தாண்டி கருப்பு அருவியாய் தவழ்ந்து வரும் அந்த தலைமுடியையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அடுத்ததாக வரும் முழு ஆரஞ்சு வண்ண லோ-ஹிப் சேலை எல்லாம் டிவைன். வெண்ணுடையும் காண்ட்ராஸ்ட் ஜாக்கெட்டும் அதே வெள்ளை வண்ண காதணியும் அற்புதம் சாரே..!
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் – பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கலந்துக்கட்டி வரும் அந்த மல்டி கலர் சேலை. இந்த பாடல் வந்த புதிதில் இந்த வகையான புடவைகள் பெரும் வரவேற்பை பெற்றதாக செவி வழி வந்த செய்தி சொல்கிறது. பாடல் முழுதும் சுகன்யாவின் நடனம் ரசிக்க கூடியதாய் இருக்கும். ரொம்ப கஷ்டமான மூவ்மெண்ட்லாம் இல்லாமல் சுலபமான அசைவுகளை ஸ்டைலாக செய்திருப்பார். சுகன்யாவின் நடனம் குறித்த அற்புதமான தகவல் ஒன்றை, போன வருடம் பாரி அண்ணன் சொல்லி இருந்தார். அது என்னவென்று அவரிடமே கேட்டுக்கொள்ளவும்.
”உன்னாட்டந்தான் தங்கத்தேரு..கண்டதில்ல இந்த ஊரு”
மற்றபடி இந்த நாள் சுகன்யாவிற்கானது!
(பிகு:- இந்த பாடலில் பிரபுவும் செம்ம ஹேண்ட்ஸம்மாக இருப்பார்)
-பிகு
Comments
Post a Comment