#29th_Graduation_NEC
0) பட்டம் வாங்கப்போறோம் என்ற எண்ணத்தைவிட நண்பர்களை பார்க்கப் போகிறோம் என்ற அந்த உணர்வுதான் ப்லைட் பிடித்து, இரண்டு ரயில்கள் மாறி, டாக்ஸி பிடித்து, பஸ் ஏறி அதிகமானோரை வர வைத்துள்ளது.
0) காலை 8 மணி முதலே கல்லூரி வளாகம் களைகட்டியது. நிறைய மாணவர்கள் தங்களது பெற்றோர் உடன் வந்திருந்தனர்.
0) விசாரிப்புகளும், கேலிகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தது. ”மீண்டும் கல்லூரி” மோடுக்கே திரும்பி இருந்தோம்.
0) அந்த கறுப்பு கோட் ”கடுப்பேத்றார் மை லார்ட்” வடிவேலுவை நினைவுப்படுத்தினாலும் நல்லாத்தான் இருந்தது.
0) நீண்ட நாட்களாக ”காணாதவர்களை”, ஆசையும் வெட்கமும் கலந்து பார்க்கும் அந்த பார்வைக்கு அர்த்தங்கள் பல.
0) காலை 11.30 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது பிக்பாஸ் நினைவு வந்தது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.
0) சிறப்பு விருந்தினர்கள் பூனியா மற்றும் பட்நாயக் பேசியது மிக முக்கியமான ஒன்று.
0) நிகழ்ச்சி முடிந்ததும் சாப்பிடுவதற்காக வரிசையில் நின்றிருந்தோம். கடந்த 4 வருடங்களாக மேசைக்கு அந்த பக்கம் நின்று நிறைய பரிமாறி இருக்கிறோம். இன்று தட்டை கையில் ஏந்தி பிரியாணி வாங்கும்போது அதை வைத்த தம்பி கேட்டான், “நீங்க படிக்கும்போதும் பிரியாணி இப்படித்தான் இருந்துச்சா’ண்ணே”. இன்னும் எத்தனை தலைமுறை படிச்சாலும் இப்படித்தான்-டா இருக்கும் என்று சொல்லி நக்ர்ந்தேன்.
0) கல்லூரி எங்கும் செல்பிக்களால் நிரம்பிக்கிடந்தது.
0) கைக்குழந்தையுடனும் புது தாலிச்சரடோடும் கர்ப்பிணியாகவும் சில தோழிகளை பார்க்க முடிந்தது.
0) இருந்தாலும் எங்கள் சார்பில் புதுமாப்பிளை ஒருவனை இறக்கி இருந்தோம். வந்த தடம் தெரியாமல் சென்றுவிட்டான்,
0) இதுநாள் வரை காலேஜ் கிராஜுவேஷன் டே-ல பார்ப்போம்-னு சொல்லிட்டு இருந்தோம், இனிமேல் சொல்வதற்கு ஏதுமில்லை என்ற ரீதியில் வெளியே வந்துவிட்டோம்.
-பிகு
Comments
Post a Comment