பேரறிவாளன்

பேரறிவாளன்

0

18-19 வயதில் சிறை சென்ற ஒருவன் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு பின் வெளியுலகம் வருகிறான். 26 ஆண்டுகள் சிறைவாசம். 9V பேட்டரி வாங்கிக் கொடுத்தது, விஷயம் தெரிந்தும் மறைத்தது; உண்மையோ பொய்யோ, எல்லாம் இருக்கட்டும். 26 வருடங்கள் வெளியுலகம் பார்க்காமல், சுகங்களை அனுபவிக்காமல் எத்தனை போராட்டங்கள், கண்ணீர்கள், ஏமாற்றங்கள் இவை அனைத்தையும் தாண்டி ஒரு இளங்கலை பட்டமும். அந்த மனம் எவ்வளவு பண்பட்டதாக மாறியிருக்கும்? அதற்குள் என்னென்ன வேதனைகள் அடைப்பட்டு கிடக்கும்.
ஒவ்வொருமுறை நம் அரசியல் வியாதிகள் அற்புதம் அம்மாளின் கரங்களை வாஞ்சையுடன் பிடித்திருப்பதைப் போன்ற படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வெறுப்பு வருகிறது. இதற்கு மேலும் இன்னும் எத்தனை காலம் இதுப்போல் இருக்க வேண்டுமோ?
மாதமொருமுறை தான் வீட்டிற்கு செல்வேன். கடந்த 5 வருடங்களாக அப்படித்தான். ஒவ்வொரு முறை வீட்டிற்கு செல்லும்போதும் அம்மாவிடம் பேசுவதற்கு ஆயிரம் கதைகள் இருந்திருக்கிறது. வீட்டின் பின்வாசல் நடையில்(படியில்) சக்ரா கோல்ட் டீ குடித்தவாறே சில விஷயங்கள் பேசுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அது துக்க செய்தியாகவோ, பொது விஷயமோ, குடும்ப விவகாரங்களோ, பொருளாதார நிலைப்பாடுகளோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பரோலில் வரும் பேரறிவாளன் தனது தாயிடம் என்னென்ன பேசுவார், தந்தையின் கரங்களை பற்றியவாறு எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பார். சகோதரிகளின் குழந்தைகள் 'மாமா' என்றழைக்கையில் ஏற்படும் அவரது உணர்வுகளை யோசித்துகொண்டே இருக்கிறான்.
வார்த்தைகளை விட மௌனங்களுக்கு தானே உரக்க பேசும் சக்தியுண்டு.
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா