பெருமை பீத்தல் பதிவு

பெருமை பீத்தல் பதிவு
~
உண்மையில் ’பிகு’ என்ற பெயர் பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது. ரொம்ப நெருக்கமானவர்களை தவிர்த்து, பேஸ்புக்கில் எனது நட்பு வட்டத்தில் இருக்கும் பெரும்பாலானோர் என் முழுப்பெயர் தெரிந்தும் அப்படியே அழைக்கின்றனர். அதுமட்டுமின்றி இங்கு இடப்படும் பதிவுகளையும் கவனிக்கின்றனர்.
//டேய்.மச்சான் அனிரூத் வச்சு ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்த பாரு, செம்மல // இது கடந்த ஜனவரியில் அனிரூத் மேட்டர் ’உச்ச’கட்டத்தில் இருந்தபோது ஒரே ஒரு வரி எழுதியது.
//அந்த லிப்ட்..கிஸ்//..ம்ம்ம்ம்ம்-னு சொல்லிட்டு போறான் இன்னொருத்தன்.
அடேய்களா, படிச்ச புக் பத்தி என்னலாமோ எழுதிருக்கேன், வேற எதெல்லாமோ எழுதி போட்டுருக்கேன். அதையெல்லாம் விட்டுட்டு இத மட்டும் ஏண்டா??
உன் பேர பார்த்தாலே படிக்கிறதுலாம் இல்ல மாப்ள..லைக் போட்டுருவேன் என்று கூறி வெள்ளந்தியாக சிரிக்கிறான் நண்பன் ஒருவன்.
என் நியூஸ் பீட்-ல உன் போஸ்ட் மட்டும்தான் தமிழ்-ல வரும். படிக்கவே நல்லா இருக்கும். கீப் இட் அப். இது ஒரு தோழியின் தோள் தட்டல்.
எனக்கான ஆடியன்ஸ் இவர்கள்தான். நான் எழுதுவதும் இவர்களுக்காக தான். இங்கு நான் புத்த்கம் குறித்து எழுதியதை படித்து ஒருவராவது அதை தேடினால் அதுதான் நான் கிறுக்குவதற்கு எனக்கான வெகுமதி.
மீண்டும் சொல்லுகிறேன் என்னை பொறுத்தவரையில் ”ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை” நிலைதான் இது என்றாலும் இது போன்ற பாராட்டுக்கள் தான் தொடர்ந்து எழுத உந்துதலாக இருக்கிறது.
சமீப நாட்களாக பதிவுகள் அதிகம் வருவதில்லை என்று கேட்கிறார்கள், ஆம். இன்னும் நேர மேலாண்மை தெரியவில்லை. நேரமில்லை என்ற வழக்கமான நொண்டி சாக்கு தான்.
இன்னும் வாசிக்க நிறைய இருக்கிறது.
வாசிக்க வேண்டும். வாசித்து எழுத வேண்டும்.
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா