நமக்குள் இருக்கும் ஜூலி!

நமக்குள் இருக்கும் ஜூலி!
0
சிறுவயதில் என்னைவிட வயது மூத்த அண்ணன்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதுண்டு. ஆரம்பகாலத்தில் விளையாட சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். பேட்டிங் டீமில் உள்ள அனைவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பார்கள், அவர்களுடன் தான் நானும் அமர்ந்திருப்பேன். அப்போதெல்லாம் நான் தான் அவர்களுக்கு டைம்பாஸ். என்னை வைத்துதான் பொழுதுபோகும். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாட கொஞ்சம் கற்றுக்கொண்டேன். எந்த அளவுக்கு என்றால், டீம் பிரிக்கும்போது கடைசியில் என்னையும் ஏதாவது ஒரு டீமில் எடுத்துக்கொள்வார்கள். பந்தே வராத ஒரு இடத்தில் பீல்டிங்கும், கடைசி மூன்று பந்துகள் இருக்கும்போது என்னைப்போன்றே டீமில் இருக்கும் அனைவருக்கும் ஒரு பந்துவீதம் பேட்டிங்கும் தருவார்கள். அந்த ஒரு பந்தில் நான்கு ரன்களோ அல்லது இரண்டு ரன்களோ எடுத்தால் அடுத்த மேட்ச்சில் மூன்று பந்துகள் கிடைக்கும் பேட்டிங் ஆட.
சில நேரங்களில் அந்த பெரிய அண்ணன்களின் நண்பர்கள் யாராவது வந்துவிட்டால், நமது வாய்ப்பு பறிபோக வாய்ப்பிருக்கிறது, அந்த மூன்று உப்புக்கு சப்பாணிகளில் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பெற முடியும். அந்த ஒருவன் நானாக இருப்பதற்காக, அவர்களது அனைத்து கிண்டல்களுக்கும், பேச்சுக்களுக்கும் கோபமே வராதவனைப்போல் பல்லை பல்லை காட்டிக்கொண்டு நிற்பேன்.
இதைத்தான் ஜூலி செய்துக்கொண்டிருக்கிறாள். அந்த வீட்டில் பெரியண்ணத்தனம் பண்ணிக்கொண்டிருப்பது தழுவல் சிநேகன், ட்ரிக்கர் சகதி, முகரைக்கட்டை காயத்ரி தான். அவர்களை ஐஸ் வைத்தால் அவர்களுக்கு ஜால்ரா அடித்தால் தான் நிலைத்துவிடலாம், அதிக அளவில் பாப்புலராகலாம் என்ற எண்ணம்தான் காயத்ரி தன்னை நாய் போல் ட்ரீட் பண்ணதையும் மறந்து அவள் அருகில் அமர்ந்து கைத்தட்டிக்கொண்டிருக்கிறாள்.
ஒரு கட்டத்தில் நமது சுயமரியாதை விழித்துக்கொள்ளும் போது அதில் இருந்து வெளியே வந்துவிடுவோம். ஆம், அதன்பின் அவர்களுடன் நான் கிரிக்கெட் ஆடுவது இல்லை.
அன்று காயத்ரி அவளை பேசியதற்கு போடி மயிரு.. என்று கிளம்பியிருக்க வேண்டும். ஓவியாவுடன் சேர்ந்து காயத்ரியையும் நமீதாவையும் தோலுரித்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த ஜூலி திருந்துவதாய் தெரியவில்லை.
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்