வாஞ்சிநாதன் - தமிழ் இந்து
வாஞ்சிநாதன் மேட்டரில் தமிழ் இந்துவை வைத்து செய்துக் கொண்டிருக்கிறார்கள், சோ கால்ட் நியாயவான்கள். சரி, இவர்களெல்லாம் யாரென்று பார்த்தால் தன்னுடைய கட்டுரை இந்துவின் நடுப்பக்கத்தில் ஒரு தடவையேனும் வந்துவிடாதா என்று தினமும் காலையில் பேப்பரை விரித்து வைத்துக்கொண்டு மலங்க மலங்க முழிப்பவர்கள் தான். அப்போ, இந்து செய்ததில் தப்பில்லையா என்றால், இருக்கிறதுதான். அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டாமா என்றால் வேண்டும்தான். அதற்காக கீழ்த்தரமாக அதை கழுவி ஊற்றுவது என்பது நம்முள் இருக்கும் வேறொருவரை தோலுரிக்கிறது. நாளைக்கே இந்துவில் இருந்து ஒரு கட்டுரைக் கேட்டு வந்தால், கொடுக்க மாட்டீர்களா?? ’தனிமனிதர்’ (சமஸ்) மீதான வன்மத்தையும் அதிருப்தியையும் ஒரு நிறுவனத்தின் மீது காட்டுதல் நல்லதல்ல.
காலச்சுவடு, ஆ.வி விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. இப்போதெல்லாம் ஆ.வி படிப்பதில்லை என்று சொல்வது ஒரு பெருமையான விஷயமாகிவிட்டது. அப்படி சொல்லிக்கொண்டே சைடில் avstory@vikatan.com-க்கு கதையை மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தேவுடு காக்கிறது ஒரு கூட்டம். காலச்சுவடு இந்துத்வா பத்திரிக்கைதான்; தெரிகிறது தானே. இருந்தாலும் நம் கதையோ கட்டுரையோ அதில் வரவேண்டும், புகழ் பெற வேண்டும் என்று நினைப்பது என்ன மாதிரியான மனநிலை. நீ இந்துத்வா, உன் பத்திரிக்கையில் என் படைப்பு வந்து நான் புகழ் அடைய வேண்டியதில்லை என்றுதானே சொல்லவேண்டும். எதற்கு இந்த இரட்டை வேடம்??
தமிழ் இந்து ஒன்றும் அவ்வளவு மோசமான பத்திரிக்கை இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்ப் பிரபா அண்ணன் தமிழ் இந்துவின் தவறை சுட்டிக்காட்டி அனுப்பிய கடிதத்தை வாசகர் கடித பகுதியில் வெளியிட்டிருந்தது. அண்ணன் ஒருவர் எழுதி அனுப்பிய அரைப்பக்க கட்டுரைக்கு கணிசமாக தொகை கொடுத்திருக்கிறார்கள். இலக்கிய ஜாம்பவான்களை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதில் இந்துவின் பங்கு கணிசமானது.
எனக்கு தஞ்சை ப்ரகாஷும், ஜி.நாகராஜனும் அறிமுகமானது இத வழிதான்.
என்னதான் சொல்லுங்கள், தமிழ் பத்திரிக்கை உலகில் தமிழ் இந்துவுக்கான அடையாளம் தனித்துவமானது.
என்னதான் சொல்லுங்கள், தமிழ் பத்திரிக்கை உலகில் தமிழ் இந்துவுக்கான அடையாளம் தனித்துவமானது.
-பிகு
Comments
Post a Comment