#Chennai_Book_Fair July 2017

#Chennai_Book_Fair July 2017
---------------------------------------------
நேற்றுதான் அபிஷியலாக முதல்நாள் சென்னை புத்தகக்காட்சிக்கு. நேற்றே ஒரு சுற்று முடித்துவிட்டேன். வழக்கமாக ஒவ்வொரு புத்தககாட்சிக்கும் இரண்டு மூன்று முறை செல்வது வழக்கம். முதல்முறை செல்லும்போது பெரும்பாலும் புத்தகம் எதுவும் வாங்கமாட்டேன். அனைத்து அரங்குகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, முக்கியமான புத்தகங்கள் எங்கெங்கு இருக்கின்றன, அதிகமான தள்ளுபடி எங்கேனும் இருக்கிறதா?, நமக்கு வேண்டிய புத்தகங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து குறிப்பெடுத்து கொள்வேன்.
அப்படித்தான் நேற்று செல்லும்போதும் ஆரம்பத்திலேயே அழகிய சிங்கர் அவர்களின் ”விருட்சம்” ஸ்டால் இருந்தது. அவரும் அமர்ந்திருந்தார். உள்ளே சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். நான் வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சம்பத்-ன் இடைவெளி, காஸ்யபனின் அசடு, வியூகங்கள் என்று நிறைய புத்தகங்களும் இருந்தன. மேலும், ”ஞானக்கூத்தன்” நடத்திய இதழின் முழுத்தொகுப்பை காட்டி சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார். மீண்டும் வரும்போது வாங்கிக்கொள்வதாக சொல்லியிருக்கிறேன்.
தமிழினி, நற்றிணை, காலச்சுவடு, எதிர்,வம்சி என்று மெதுவாக முன்னேறினேன். வாங்க வேண்டிய புத்தகங்கள் அதிகம் இருந்தது; ஆனால், விலை அதைவிட அதிகம் பயமுறுத்துவதாக இருந்தது.
காலச்சுவடு அரங்கில் 60% தள்ளுபடியில் சில புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் அசோகமித்திரனின் சிறுகதை தொகுப்பு ஒன்று இருந்தது. கெட்டி அட்டை புத்தகம். விலையை பார்த்தேன் 200ரூ. 60% தள்ளுபடியில் 80ரூ.க்கு பில் போட்டு மனநிறைவுடன் வாங்கிவந்தேன்.
என்.பி.டி, என்.சி.பி.ஹெச், சாகித்ய அகாடெமி உள்ளிட்ட ஸ்டால்களை தவறவிடாதீர்கள். குறைந்த விலை அதிக புத்தகங்கள்!
இன்று மீண்டும் செல்வதாக திட்டம். ஆனால், இரவு 9 மணிக்குள் அறைக்கு திரும்பி வந்துவிட வேண்டும்.🤣🤣
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா