Posts

கீழ்மையான மேல்மட்டம்!!!

Image
வங்காளத்தில் ஒரு கிராமம்.  அங்கே ஒரு படு சுட்டியான  சிறுவன். அவன் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுடன் விளையாட விடுவதே ஒரு கீழ்மையான செயல் என நினைப்பவர்கள் சமுதாயத்தின் மேல்மட்டங்களில் வாழ்ந்தனர்.  அப்படி ஒருவர்தான் துர்காதாஸ்.அவர் தன் வீட்டு பெண் குழந்தைகளை கோஷாவுக்குள் வளர்த்தார். தன் வீட்டு பெண்களை பிற ஆண்கள் பார்க்க முடியாது என்று ஜம்பம் அடிப்பார். அந்த சிறுவனுக்கு இது பிடிக்கவில்லை. துர்காதாஸின் பெண் குழந்தைகளுடன் விளையாட கிராம பெண் குழந்தைகள் மட்டும் அவர் வீட்டுக்கு செல்லலாம். ஒரு நாள் புதிதாக ஒரு பெண் குழந்தை வந்தாள். தான்  நெசவாளர் பெண் என்றும் கிராமத்துக்கு புதிது என்றும் சொன்னாள். அந்த ஜமீன்தாரின் பெண் குழந்தைகளுடன் நன்றாக விளையாடினாள். வீட்டு பெண்களுடன் நன்றாக பேசினாள். நாள் முழுக்க ஆடலும் பாடலும் வித விதமான கிராமத்து விளையாடல்களுமாக கழிந்தன. அன்று மாலை துர்காதாஸின் கண் முன்னாலேயே அந்த புதிய பெண் குழந்தையை  தன் அலங்காரங்களை கலைத்து கொண்டு தனது சகோதரன் அழைத்த போது ஓடி சென்ற போதுதான் துர்காதாஸுக்கு புரிந்தது.  அது அவள...

போற்றுதலும் தூற்றுதலும்

நேற்று போற்றியோர் இன்று தூற்றுவர்.. இன்று தூற்றுவோர் நாளைப் போற்றுவர்.. போற்றுதலும் தூற்றுதலும் இங்கு,  "உண்டல்,உறங்கல்,உரம்போடுதலைப்"  போன்று சர்வ சாதாரணம். -தமிழ்மறவோன். 02-06-2016

"தயிர்சாதமும் புளிக்கொழம்பும்"

Image
"தயிர்சாதமும் புளிக்கொழம்பும்" ------------------------------ எனக்கு மிகவும் பிடித்த கொழம்பு வகைகளில் இந்த புளிக்கொழம்பிற்கு முக்கிய இடமுண்டு. அதும் அம்மா வைக்கும் புளிக்கொழம்பென்றால் அதினினும் பிடிக்கும்.அந்த புளிக்கொழம்பு எப்படி இருக்கணும் தெரியுமா? நிறைய சின்ன வெங்காயம் போட்டு, பல்லு பல்லா பூண்டுப் போட்டு நடிகை சிநேகா கலர் வர்ற வரைக்கும் வதக்கி கொழம்பு நல்ல சுரு சுருனு கொதிக்கும் போது பிஞ்சாவும் இல்லாம முரட்டுக் காயாவும் இல்லாம் நல்ல நீளமான முருங்கைகாயப் போட்டு இறக்கி, அந் த கொழம்போட மேல் லேயர்ல அப்படி நல்லெண்ணய்ய ஊத்தி நல்லெண்ணய்ல கொழம்ப மிதக்கவிட்டு இறக்கி வைக்கோணும்!!! அதுக்கப்புறம் சாதத்துல தயிர நிறய ஊத்தி கொஞ்சமா தண்ணி சேர்த்து நல்ல பிசைஞ்சு சோத்த விட கொழம்ப அதிகமா ஊத்தி முருங்க காயோட சதைப்பத்த சோத்துக்குள்ள புதைச்சு பெரிய உருண்டையா உள்ள தள்ளுனோம்ணு வைங்க "தேனுல ஊறுன பேரிச்சையும் தோத்துப் போகும்". முக்கியமான இடத்துக்கு இப்பதான் வாரோம். சாப்பிட்டு முடிச்சுட்டு தயிர் சோத்துல உள்ள தயிரும் கொழம்பும் மிக்ஸிங்கா தட்டுல திட்டு திட்டா ஒட்டிட்டு இருக்கும...

பழக்கமில்லை

Image
தயவுசெய்து அவள் பெயரை எழுதச் சொல்லாதீர்கள், எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை. ‪#‎ பிதற்றல்கள்‬ -தமிழ்மறவோன். 30-05-2016

கழுதை

Image
போடா கழுதை என்று திட்டினாள்; கழுதையாவதில் எனக்கெந்த தயக்கமுமில்லை, சுமப்பது உன்னையென்றால்!!! ‪#‎ பிதற்றல்கள்‬ -தமிழ்மறவோன். 29-05-2016

(உங்கள் கேள்விக்கென் பதிலிதுவே!!) .

Image
(உங்கள் கேள்விக்கென் பதிலிதுவே!!) . பெரும்பாலும் கவிதை எழுதும் அனைவரும் இக்கேள்வியை கடந்தே வந்திருப்பீர்கள். "நீங்க கவிதைலாம் எழுதுறீங்களே, யாரையாது காதலிக்கிறீங்களா"?? இதை இரண்டு விதமாக அணுகலாம். "காதலித்தால் கவிதை எழுத வேண்டுமா? அல்லது கவிதை எழுதுபவர்களெல்லாம் கண்டிப்பாக காதலித்தாக வேண்டுமா?" நம் மனதில் அப்படித்தான் விதைக்கப்பட்டிருக்கிறது போலும்.சிறுவயது முதலே காதலிப்பவர்கள் தான் கவிதை எழுதுவார்கள் என்றும்; கவிதை எழுதுறான்னா அவன் கண்டிப்பா யாரையோ உருண்டு புரண்டு காதலிக்கிற ான் என்றும் உட்செலுத்தி வைத்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை, "கவிஞனுக்கு காதலி(கள்) அவசியமில்லை.. ஆனால்,காதல் அவசியம்!!!". ஏதோ ஒரு காதலின் அதீத வெளிப்பாடுதான் கவிதை. அந்த "காதல்" எதன் மீதும்,யார் மீதிலும் வரலாம்.காலையில் பருகும் சாயாவிலிருந்து, மலரும் கொன்றை மீது,கடக்கும் காக்கையின் மீது என்று வரலாம்.சில நேரங்களில் பிடித்த பெண்ணின்(காதலி) மீதும் வரக்கூடும்.ஒன்று உறுதியாய் சொல்லலாம், "ஒவ்வொரு கவிஞனுக்கும் காதலி இருப்பாள் என்று சொல்ல முடியாது, ஆனா...

தியாகி

Image
தன் 8 வயது மகனுக்காக,  மூக்கை பொத்திக் கொண்டு  புரோட்டா வாங்க  கடையில் நிற்கும்  ஒவ்வொரு தாயும்  தியாகியே!!! -தமிழ்மறவோன் 27-5-2016

தேவதைகளுக்கு சமர்ப்பணம்

*தேவதைகளுக்கு சமர்ப்பணம்* பெண்களுக்கு ஆண்களிடம் சொல்வதற்கு விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. சிறுவயதில் ஆடிய கண்ணாமூச்சியாட்டம், செல்லமாய் வளர்த்த நாய்க்குட்டி, அது இறந்தப்போது அழுது புரண்டது; அதற்கு இணையாய் கிளி வாங்கிக் கேட்டது. அதனுடன் தோட்டத்தில் அமர்ந்து பேசுவது. தனக்கு பிடித்த வான் நீலம்; அதன்பால் கொண்ட காரணமில்லா ஏக்கம்,மயக்கம்!!! முதன்முதலில் அம்மா வாங்கிக் கொடுத்த புடவை; அப்போது தைத்து, இப்போது இறுகிப் போயிருக்கும் சட்டை.நீள் கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாவைப் பற்றிய கதை. மு தல்நாள் கட்டிய காட்டன் சேலையை பற்றிப் பேச ஆயிரம் விஷயமுண்டு அவர்களிடம். ஆண்களிடமும் இத்தகைய விஷயங்கள், அனுபவங்கள் இருக்கலாம்; ஆனால் அடுத்தவர் ரசிக்கும்படி சொல்வதென்பது சற்றே சிரமம்தான்.பெண்கள் அனைவருக்கும் இக்கலை வாய்ப்பது இயல்பு.மேலும், பெண் சொல்லும் இவ்விஷயங்களுக்கு "ம்ம்ம்" கொட்டுவதைக் காட்டிலும் வேறென்ன இன்ப அனுபவம் இருந்துவிட முடியும் ஆணுக்கு??? பெண்களின் உலகு அழகு!!!! பெண்களால் ஆன உலகு பேரழகு!!!!! -தமிழ்மறவோன்.

தட்டையான முடிவு

Image
சுவாரஸ்யமான நாவலின் தட்டையான முடிவுப் போல் முடிந்துவிட்டது கல்லூரி வாழ்க்கை!!! -தமிழ்மறவோன். 22-05-2016

"VOTE FROM YOUR CURRENT LOCATION"

"VOTE FROM YOUR CURRENT LOCATION" ------------------------------ அவசியம் படிக்கப்பட வேண்டிய ஒன்று, பகிரப்பட வேண்டிய ஒன்று: நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அங்கு இருந்தபடியே ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியுமா?? இதுவரை முடியாது. இனிமேல் முடியும்!!! ஆம்,அதற்கான ஒரு தொழில்நுட்ப முறையைதான் "நேஷனல் பொறியியல் கல்லூரி,கோவில்பட்டி Electronics and Instrumentation பிரிவு" 2015 ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாம் படித்த தொழில்நுட்ப கல்வியை இதுபோன்ற சமூக மாற்றத்திற்கான நோக்கோடு கண்டுபிடித்துள்ளது வரவேற்கதக்கது. இதை நடைமுறைக்கு கொண்டுவருவதன் மூலம் தேர்தல் நேரங்களில் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏற்படும் உடல் அலைச்சலையும், பண விரியமும் ஏற்படுவதை தடுக்க முடியும். அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல கைகோர்ப்போம். *மின்னணு ஓட்டு இயந்திரம் கண்டுபிடிக்கும்போது "சுஜாதா" ஒரு கல்லூரி மாணவர்தான் எனபதை நினைவில் கொள்க.* பிகு: அதன் Working and Operation விரைவில் Update செய்யப்படும். நன்றி. -Praveenkumar P 16-...

‪#‎TNElection2016‬

நேத்து நைட்டு கரண்ட் கட் ஆனப்ப ஒரு கரை வேட்டி வந்து கவரை நீட்டி கண்டிப்பா "***க்கு" ஓட்டு போட்ருங்கனு சொன்னாரு. "சரிண்ணே"னு கவரை பிரிச்சு பேப்பர சரிப் பார்த்துட்டே "அண்ணே, உங்கட்ட கவரை வாங்கிட்டு வேற யாருக்காது ஓட்டுப் போட்டா எப்டிண்ணே கண்டுபிடிப்பிங்க???"னு எதார்த்தமா கேட்டேன். படக்குனு கவரை பிடுங்கிட்டு பக்கத்து வீட்டுக்கு போயிட்டாப்ல!!!! பின்னாடியே கேமராவ தூக்கிட்டு ஓடுனேன், அங்கயும் குடுக்காம ஓடிட்டாப்ல...  "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"!! ‪#‎ TNElection2016‬ -பஞ்சகல்யாணி.

உன் வாசம்

Image
என்றோ நீ தந்த மிட்டாயை தின்றுவிட்டு, அந்த தாளை மட்டும் புத்தகத்தினூடே வைத்திருந்தேன். இன்று அதை மீண்டும் எடுத்து நுகர்கையில் தாளில் அப்படியே எஞ்சி நிற்கிறது உன் வாசம். -தமிழ்மறவோன். 15-05-2016

ஜூனியர் பொண்ணு-சத்திய சோதனை"

இப்பலாம் பசங்க போடுற பேண்ட்ட (Pant) பார்த்தாலே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எப்ப அவுந்து கீழ விழுமோங்கற நிலைமைல,கொஞ்சமா இடுப்ப பிடிச்சுட்டு நிக்குது. இதுல சில பசங்க போடுறது ரொம்ப டைட்டா வேற இருக்கு. ******************************** என்னைக்குத்தான் நம்ம ஊரு பஸ்ல படிய கீழ இறக்கி வைக்கப் போறாய்ங்களோ தெரியல. பஸ் படில ஏறுறதுக்கே ஒரு ஏணி படி வேணும்போல,அப்படியிருக்கு. ******************************** என்ன சம்பந்தம் இல்லாம பேசுறனா?? இருக்குங்க... இன்னைக்கு ஒரு காலேஜ் (முடிச்ச) பையன் ரெண்டு கையிலயும் லக்கேஜ்,முதுகுல ஒரு டிராவல் பேக்கோட டைட்டா ஒரு பேண்ட்டையும் மாட்டிக்கிட்டு பைபாஸ்ல "பாபநாசம்"(நோட் திஸ்) போற உயரமான படியுள்ள பஸ்ஸ கைகாட்டி நிறுத்தி ஏறும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அந்த பையனோட பேண்ட்டு கிழியக்கூடாத இடத்துல கிழிஞ்சுபோச்சு.பேண்ட்டு கிழியுறதுல ஒரு கான்செப்ட் இருக்கு. என்னனா,அது ஒரு சில இடங்கள்ல கிழிஞ்சா நமக்கும் பிரச்சனையில்லாம பார்க்குறவங்களுக்கும் பிரச்சனையில்லாம முடிஞ்சுரும்; நல்ல காத்தோட்டமாவும் இருக்கும். ஆனா சில இடங்கள்ல கிழிஞ்சா உடனடியா மராமத்...

ஸ்ட்ராபெரி பெண்ணே

Image
"ஸ்ட்ராபெரி பெண்ணே" (Not a பா.விஜய்'s flavour)                                                                                                      - தமிழ்மறவோன்  ----------------------------------------------------------------------------------------------------------------------------- அன்று அவளுக்கு நான் அனுப்பிய கடைசி மெசேஜ் இதுதான், "லவ் யூ ஆதி". அதன் பின்னர் அவளது பதிலை எதிர்நோக்க தைரியம் இல்லாமல் மொபைல் டேட்டாவை ஆப் செய்துவிட்டேன். இரவு எவ்வளவு நீளம் என்று அன்றுதான் தெரிந்தது. மறுநாள் காலை அவளிடமிருந்து "6.00 p.m. ibaco" என்றொரு வாட்ஸப் மெசேஜ் மட்டும் வந்திருந்தது. எப்போதும் போல் 5 மணிக்கே சென்று ஒரே ஒரு காபி மட்டும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தேன். அந்த வெயிட்டர ் ஒரு மாதிரியாக பார்த்தான். நான் கண்டுகொள்ளவ...

தேவதை தரிசனம்

Image
"தேவதை தரிசனம்"  #தேவதை  என் டைரிக் குறிப்புகள்:- ------------------------------------------------------------------------------------------- நீண்ட இடைவெளிக்கு பின் இன்று காலை அவளைப் பார்த்தேன்.  ஆம், அவளைத்தான்!!!  நான் வண்டியில் சென்ற போது எதிரில் அவள் தந்தையுடன் வண்டியில் சென்றாள்.(படிக்க:என் குறுங்கதை 3) விவரம் தெரிந்த வயதின்,வளர்ந்த பருவத்தின் பள்ளித்தோழி அவள். வெகு அரிதாக, அவளைப் பற்றிய எண்ணங்கள் என்னுள் எழும்போதெல்லாம் அவளுடனான அந்த நாட்களை அசைப் போடுவது உண்டு. உறங்கா இரவுகளும், முடியா உரையாடல்களும், உலரா முத்தங்களும், அளவில்லா அன்பும் அழகும் எனக்குள் முட்டிமோதும். மிகுந்த பிரயத்தனப்பட்டு என் சிறு இதயத்தினுள் அவை அனைத்தையும் அடக்கி,அடுக்கி வைத்திருந்தேன். இன்று காலை, தீத்தெறிக்கும் அந்த ஒற்றைப் பார்வையில் அனைத்தையும் அடித்து துவம்சம் செய்து மனதின் உச்சாணிக் கொம்பில் ஏறி சட்டமாய் அமர்ந்துக்கொண்டு இறங்க மறுக்கிறாள். அவள் பார்வையை இப்பதிவு சென்றடையுமா என்று தெரியவில்லை. ஆனால்,என்னுடைய இந்த நாள் முழுவதையும் இறகினை தூக்கிச் செல்லும் காற்றைப் போல தூக்...

பொங்கல் வாழ்த்து

Image
"விஜய் வெறியனுக்கு பொங்கல் வாழ்த்து !!!" சுமார் ஆறேழு வருடங்கள் முன் இருக்கலாம்,சரியாக நினைவில்லை.நான் விஜய் வெறியனாக இருந்த பொழுது (கவனிக்க:கடந்த காலம்) வருடந்தவறாமல் என் அண்ணன் எனக்கனுப்பிய பொங்கல் வாழ்த்தட்டைகள் இவை.நேற்று அலமாரியை அலசிய போது கண்களில் சிக்கியது.அலமாரியின் அடியிலிருந்து எடுத்த இந்த அட்டைகள் என் நினைவடுக்கின் அடியிலிருந்த நினைவுகளையும் கிளறிவிட்டன.இப்போது வாழ்த்தட்டைகளும் வருவதில்லை; நான் விஜய் வெறியனும் இல்லை!!!

முழுக்க முழுக்க மலரின் வாசனை

Image
"பிரேமம்" *முழுக்க முழுக்க மலரின் வாசனை* நீண்ட நாட்களாக பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்டில் இருந்த படம் "பிரேமம்" நேற்றுதான் நல்ல பிரிண்ட் கிடைத்தது பார்த்து முடித்தேன்.ஆம், அனைவரும் கூறியது போல் நல்லதொரு காதல் படம் தான்.அதற்காக ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளும் அளவுக்கெல்லாம் இல்லை.அதிலும் முதல் 40 நிமிடம் சகித்துக்கொள்ளவே முடியாது.மேரி மட்டும் தான் ஆறுதல்.மலருக்காக காத்திருந்து மேரியை ரசிக்கலாம்.கல்லூரி வாழ்க்கையிலிருந்துதான் படம் களைக்கட்டுகிறது.நிவின்பாலி உண்மையிலையே அற்புதமான நடிகர்.படம் முழுக்க மலையாள வாடை அடித்தாலும் மலரின் வாடைதான் அதிகமிருந்தது.ஜார்ஜ்-மலர் காதல் காட்சிகளில் அழுத்தம் குறைவுதான்.ஆனால்,கொள்ளை அழகு.அதுவும்,அந்த டான்ஸ் சொல்லிதரும் காட்சி அழகோ அழகு;லவ் யூ மலர் மிஸ். ஆனால், விபத்தில் நினைவு தப்புவது எதிர்பாரா திருப்பம்.தாடி எடுத்தாலும் நிவின் அழகாவே தெரிகிறார்.மேரியின் தங்கையை உள்ளே கொண்டு வந்தது நல்ல யோசனை. செலினின் அறிமுக காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால்,அவளின் திருமணம் நின்றதற்கு வேறு ஏதேனும் பலமான காரணம் வைத்திருக்கலாம்.இறுதியில் மலரின்...

சூழலியல்

                                                                                                                                சூழலியல் கழகம்  1.இங்கு புத்தர்கள் நிரம்பித்தான் கிடக்கிறர்கள் போதி மரங்களை தான் காணவில்லை ..!!!! 2.பூமி மரமண்டையாகவே இருந்துவிட்டு போகட்டும் மொட்டை அடிக்காதிர்கள் ..!!!! 

ஓர் மழை ஞாயிறு

*"ஓர் மழை ஞாயிறு"*                                                         -தமிழ்மறவோன்  ஓர் ஞாயிறு மதியத்தின் மத்தியில் நாங்கள் இருவரும் சேர்ந்து சமைத்த பாகற்காய் வறுவலையும் கொள்ளு ரசத்தையும் பிரண்டை துவலையும் சாப்பிட்டு முடித்தோம்.ஆம் நாங்கள் சைவம் (உணவில்).  இன்று வானம் ஏனோ இருட்டிக் கிடந்தது.வார நாட்களில் ஏற்படும் வேலைப் பளுவினால் ஞாயிறுகளில் கடோத்கஜனாய் உண்டு கும்ப கர்ணனாய் உறங்க விருப்பமில்லை.பெரும்பாலும் ஞாயிறுகள் தான் எங்களை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.நாங்கள் எங்களை உணர்ந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறது.சாப்பிட்ட பின், வாசலில் நாற்காலியிட்டு அமர்ந்தேன். மழை வருவது போலிருந்தது, இன்பமாயிருந்தது.அவளும் சேர்ந்துக் கொண்டாள்.இன்பம் இருமடங்கு!!! கைகளில் நீர்மோர்;"மழை வரும்போல் இருக்கிறதே,இந்நேரத்தில் மோரா?"இது நான்."நான் விரும்பி செய்தது வேண்டுமானால் குடி", இது அவள்.மறுபேச்சின்றி ஒரே மடக்கில் முடித்தேன். ...

நாய் காதல்

****நாய் காதல்*****  (கதையல்ல நிஜம்)   நேற்று கோவில்பட்டியில் இருந்து நெல்லை செல்வதற்காக பேருந்தில் ஏறினேன்.பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் பெரும்பாலும் ஜோடி ஜோடியாக கல்லூரி இளசுகள் அமர்ந்திருந்தனர்.நல்லவேளையாக கணடக்டர் ஸீட் ப்ரீயாக இருந்ததால் அதில் அமர்ந்துக்கொண்டேன்  (தனியாக தான்).காதில் செவிட்டு மெஷினை (ஹியர்போன்) மாட்டிக்கொண்டு இளையராஜாவை ஓடவிட்டேன்.சற்றே கண் அயர்ந்தேன்.திடிரென்று விழித்துப் பார்த்தபோது எனக்கு முன் இருக்கையில் ஒரு புது ஜோடி முளைத்திருந்தது.இரண்டுமே கல்லூரி சிட்டுகள்.கொஞ்ச நேரம் நல்லாதான் போயிட்டு இருந்தது.திடிர்னு அந்த பய பைய கைய நீட்டுனான்.அந்த பிள்ளையும் யாரும் பார்க்காங்களானு பார்ததுட்டு கைய கோர்த்துக்கிச்சு.அப்ப நான் பார்க்காத மாதிரி இருந்துகிட்டேன்(காறித் துப்புபவர்கள் எச்சில் தெறிக்காமல் துப்பிக்கொள்ளவும்)கைய பிடிக்கிறதும், தோள்ல சாயுறதும், அடிச்சுக்கறதும்-னு ஒரே ஜாலி தான்(யாருக்கோ).இதாவது பரவாயில்ல தமிழ்படம்,எனக்கே ஒருமாதிரி இருந்துச்சு சரி போதும்னு வேறப் பக்கம் திரும்புனா அங்க இங்கிலிஷ் படம் ஓடுது!!! இதையெல்லாம் பார்க்கும்போதே என...