Posts

தங்கல்

ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்கள் நமக்கு அத்தனை பரிச்சயமான களம் அல்ல. மசாலா படங்களையும், ஆக்ஷன் படங்களையும் பார்த்து உய்ந்துக்கொண்டிருந்த நமக்கு, கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணோ ஆணோ காலை 5 மணிக்கு எழுந்து ஓடி, பிடித்த சாப்பாட்டை சாப்பிடாமல் தியாகம் செய்து, கடுமையாக பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கிலோ, நேஷனல் கேம்மிலோ தங்கம் வென்று பின்னால் ”ஜனகனமன” ஒலித்தால் போதும் கண்ணில் ஜலம் வச்சுண்டு, நரம்புகள் முறுக்கேற தியேட்டரை விட்டு வெளியே வருவோம். என்னை பொறுத்தவரை தங்கல் ஒரு ச ாதாரண ஸ்போர்ட்ஸ் ஜானர் படம். நம்மூரில் காய்ந்து கிடந்துவிட்டு, வெளிநாட்டினர் லிப் லாக் செய்வதை ஆஆ..வென்று வேடிக்கை பார்ப்பதை போலத்தான் இதுவும். நாம் அதிகம் பார்க்காத ஒன்றை காட்டி உள்ளதால், அது நமக்கு புதியதாய் தோன்றுகிறது. நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு, நம்மால் முடியாததை நம் குழந்தைகளின் மீது திணிப்பது. இதுகுறித்து ஆ..ஊ..வென்று பேசினாலும், இதைத்தான் நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம். ஆமிர்கான் அந்த குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். அவர்களை அவர்களாக இருக்கவிடாமல் அவருடைய எண்ணத்தை அவர்கள் மீது திணிக்கிறா...

அறம் (உண்மை மனிதர்களின் கதை) - ஜெயமோகன்

அறம் (உண்மை மனிதர்களின் கதை) ஜெயமோகன் ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்பம் உண்மையானதாக கூட இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டது இந்த ’அறம்’. ஜெமோவின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் கூட இதை கொண்டாடுவார்கள் என்றே நினைக்கிறேன். இங்கு எழுத்து என்று எழுதப்படும் அனைத்துமே எழுதுபவரின் கதையோ அவர் பார்த்து, கேட்டு அனுபவித்த கதைகளோ தான். புனைவுகளில் கூட அவர்களது வாழ்வின் அனுபவங்களும், உணர்வுகளும் வெளிப்பட்டுவிடும். தனது சொந்த வாழ்வினூடே தான் அந்த புனைவுலகம் கட்டமைக்கப்படும். மிகுந்த யோசனையோடு தான் இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். 400 பக்கம் என்பது சற்று மலைப்பாகத்தான் இருந்தது, ’அறம்’ என்ற முதல் கதையின் இரண்டாம் பக்கத்தை தாண்டும்வரை. அதன்பின்னர், அந்த தொகுப்பை வாசிப்பது சுவாசத்தை போல இயல்பாய் நடந்துக்கொண்டேயிருந்தது. இதிலுள்ள ஒவ்வொரு கதை குறித்தும் ஒரு திறனாய்வு கட்டுரை வடிக்கலாம். ஒரு கதை என்பது அது நடந்த காலத்தை பிரதிபலிக்க வேண்டும...

உன் பெயரைச் சொல்லவா??

உன் பெயரைச் சொல்லவா?? (குறுங்கதை) ~ எங்களிடம் வார்த்தைகள் இருந்து கொண்டே யிருந்தன; நேரங்காலம் தெரியாமல் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம். மெரினா, ஸ்பென்சர், பனகல் பார்க் என்று எங்களது சொற்கள் விழாத இடமில்லை. நாகேஸ்வரா பார்க்கின் மரமில்லா ஒரு மூலையில் அமர்ந்து மீந்த சொற்கள் கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். "ஆதிரா.." ம் "நான் ஒண்ணு சொல்லுவா"? சொல்லேன் "உன் பேர மாத்த போறேன்" என் பேரயா?? "ம்ம் ஆமா".. ஐயயோ அப்ப Birth affidavitலாம் வாங்கணுமே!!! "ஏய் லுசு; இது நான் உனக்கு வைக்கப்போற பேரு. எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரியும்" ஓஓஓ..சூப்பர் சூப்பர். என்ன பேரு செல்லம்?? "கெஸ் பண்ணு பார்க்கலாம்".. ம்ம்ம், எனி க்ளு?? "ஓகே..உன் உடம்புல இருக்குற ஒரு உறுப்பு வச்சு உருவாக்குன பேரு. அந்த உறுப்பு ஜோடியாதான் இருக்கும்". கை, கால்?? "இல்ல, உன் இடுப்புக்கு மேல"; இடுப்புக்கு மேலயா?? "ஆமா".. ஏய்ய்ய்ய், நீ என்ன சொல்லுவனு எனக்குத் தெரியும். நீ எதும் பேரு வைக்க வேண்டாம்; போடா!! (அந்த வேண்டாம் என்பதிலே வேண்டும் என்பது அப்ப...

"பைரவா"

பைரவா (ஒரு அவசர அலசல்) - இப்போதெல்லாம் விஜயை திரையில் பார்த்தாலே எரிச்சல் தான் வருகிறது. நாளுக்கு நாள் எல்லாருக்கும் நடிப்பு மெருகேறும்; இவருக்கு தாழ்ந்துகிட்டே போகுது. பரதனுக்கு இவர்கிட்ட நடிப்ப வாங்கத்தெரியலையானு தெரியல. தமிழில் வரக்கூடிய நல்லப்படங்களையெல்லாம் பார்த்தும் தைரியமாக இப்படியொரு படம் எடுக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்குத்தான் ஒரு ரசிகனின் ரசனையின் அளவுக்கோளை இவர்கள் வைத்திருக்கிறார்கள். இது புரியாமல், நம்மளும்... தேவையில்லாத வேலை: 1. ஹேர் ஸ்டைல் 2. டயலாக் மாடுலேஷன் சரியில்லாதது: 1. வில்லன் 2. பின்னணி இசை 3. கலை(ஆர்ட்) வீணடிக்கப்பட்டவர்கள்: 1. டேனியல் பாலாஜி 2. ஆடுகளம் நரேன் 3. சந்தோஷ் நாராயணன் 4. மொட்டை ராஜேந்திரன் 5. தம்பி ராமையா ஓ.கே: 1. சதீஷ் டைமிங் 2. ஸ்ரீமன் 3. கதை சூப்பர்: 1. ஒளிப்பதிவு திரு.விஜய் அவர்கள் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டிய நேரம்!! கொடுத்த காசுக்கு கொஞ்ச நேரம் கீர்த்தி சுரேஷ லோ-ஹிப் சாரில காட்டுவாங்க.. பாத்துட்டு, போலாம் போலாம் னு வந்துட்டே இருக்கலாம்!! பை பை ரவா.. நெக்ஸ்ட்.. கோடிட...

Pant - Shirt பெண்கள்

Pant - Shirt பெண்கள் = சில விஷயங்கள் எவ்வளவு எழுதினாலும் தீராது. அப்படியான ஒரு விஷயம்தான் ’உடை’. அதிலும் குறிப்பாக பெண்களின் உடை. அழகை அழகாக பார்க்கும் வரை அது ஆபாசமாகாது என்பதென் கருத்து. அதனால்தான் இந்த பதிவு. கடந்த சில நாட்களாக பேண்ட் - ஷ்ர்ட் அணிந்த பெண்கள் அதிகமாக கண்ணில் தென்படுகிறார்கள். பொதுவாக நம்மூரில் இத்தகைய உடையணிந்த பெண்களை காண்பதரிது. கார் ஷோரூம்களிலோ, யூனிசெக்ஸ் சலூன்களிலோ தான் பரவலாக பார்க்க முடியும். ஆனால் இங்கு, இந்த கார்ப்பரேட் உலகில் அது மிக சாதாரணம். ஆனா ல் இங்கும் நமது பெண்கள் காட்டன் சுடிதாரிலிருந்து அத்தனை எளிதாக மாறிவிடுவதில்லை. பொதுவாக எனக்கு பெண்கள் பேண்ட் ஷ்ர்ட் அணிந்தால் பிடிக்கும். அது ஒரு ஆளுமையின் வெளிப்பாடாகவே தெரியும். ஒரு ஆணைப் பார்த்து உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று சொல்வதுபோல் இருக்கும். அதை அணிந்த பெண்களிடம் ஒரு மிடுக்கு தெரியும். ’யாரடி நீ மோகினியில்’ தாவணி நயன்தாராவை விட பேண்ட்-ஷ்ர்ட் நயனே எனக்கு சால சால இஷ்டம். உடை என்பது வெறும் உடலை மறைக்கும் ஒரு விஷயம் மட்டுமல்ல. அதற்கு பின் ஏகப்பட்ட உளவியல் இருக்கிறது. அதை அவரவர் கண்டிப்பாக உணர வே...

புதுவருடம்

புதுவருடம் ~ புதுவருட பிறப்பிற்கெல்லாம் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. புதுவருட கொண்டாட்டத்திலும் சிறுவயதிலிருந்தே அவ்வளவாக ஈடுபாடு காட்டமாட்டேன். சரியாக பார்த்தால் இது 5வது வருடம், புதுவருட பிறப்பன்று நான் வீட்டில் இல்லாமலிருப்பது!!  கடைசியாக 12ம் வகுப்பு படிக்கையில் வருடப்பிறப்பிற்கு முதல்நாள் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த அம்மாவிடமிருந்து காவி, சுண்ணாம்பு வாங்கி ரோட்டில்  "Happy Newyear" எழுதியதாக நினைவு. கல்லூரி சேர்ந்த பின்னர் விடுதியில் தங்கி படித்ததால் மூன்ற ாண்டுகள் புதுவருடம் பிறந்தது NEC விடுதியில்தான்.. கடந்த வருடம் நானே எதிர்பார்க்காத வகையில் புதுவருடப்பிறப்பன்று 'அலகாபாத்' ரயில் பயணத்தில் இருந்தேன்.  எனக்கான இந்த 2017ன் பிரசவம் நிகழ்வது.. "அகமதாபாத் ரயில் நிலையத்தில்"!! ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து, "புத்தாண்டு வாழ்த்துகளுடன்"!! பிகு_/\_

நானும் அரவிந்த்சாமியும்!!

நானும் அரவிந்த்சாமியும்!! ~ நேற்று எங்கள் வீட்டின் முன் சில சிறுவர்கள் ரோட்டில் செங்கல் வைத்து மூன்று குச்சிகளை நிறுத்தி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவரிலமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, எனது கொசுவர்த்தி சுருள் ஒரு ஏழெட்டு வருடங்கள் பின்னோக்கி சுழன்றது. 8,9,10ம் வகுப்பு படிக்கையில்தான் கிரிக்கெட் பித்து தலைக்கேறியிருந்த சமயம்; வாரயிறுதியில் கிரிக்கெட் மட்டையை நீளவாக்கில் சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு கிரவுண்ட் கிரவுண்டாக சுற்றுவோம். அதுவ ும் ஏப்ரல்-மே கோடை விடுமுறையில் அடித்த பூரா வெயிலும் எங்கள் மீதுதான் விழுந்திருக்கும் என்ற வண்ணம் வெயில், வியர்வை, பசி, தாகம் பாராமல் ஆடுவோம். "எட்டாங்கிளாஸ் படிக்கும்போது அரவிந்த்சாமி கலருல இருந்தியேல இப்டி கறுத்துப்போயிட்டியே" என்று எந்தாய் ஆதங்கபடாத நாட்கள் குறைவு. தெருக்களில் செங்கற்கள் வைத்து, ஒன்பிட்ச் கேட்ச் வைத்து, வீட்டிற்குள் த்ரூவாக அடித்தால் அவுட் போன்ற விதிமுறைகளை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கும்போதே, (அதை ஓனருக்கு தெரியாமல், காலடி ஓசை கேளாமல் சுவரேறி குதித்து எடுப்பது த...

பஜன் பஜன் காலை!

பஜன் பஜன் காலை! (18+ இல்ல) இதோ தொடங்கிவிட்டது மார்கழி மாதம்.  மார்கழி மாதம் குளிருக்கானது என்ற பேச்செல்லாம் பழையதாகிவிட்டது. பருவநிலை மாற்றம் என்ற பெயரில் மழை பெய்யும் காலம் குளிர்கிறது, குளிர் காலம் மழை பொழிகிறது. கண்ட கண்ட இடமெல்லாம் பனி உட்புகுந்து, காதுக்குள் ஊசி குத்துவதைப் போல் இறங்கவில்லையென்றால் மார்கழி மாதத்திற்கான மரியாதையே போய்விடும். அத்தகைய மார்கழி மாதத்து மற்றொரு முக்கிய விஷயம், ’பஜனை’. நன்றாக நினைவில் நிற்கிறது, 5 வகுப்பு படிக்கையில் பனி அதிகமாக இருக்கிறது என்ற ு மார்கழி பஜனைக்கு செல்ல வீட்டில் அனுமதிக்கவில்லை. அழுது புரண்டு ’இரண்டு மணிநேரம்’ உண்ணாவிரதமெல்லாம் இருந்துதான் அனுமதி வாங்கினேன். அன்றுத் தொடங்கி 10 வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்திற்காக ஏங்கி கிடந்தேன். தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 130 நபர்கள் செல்வோம். 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது சீனியர் சிட்டிசன் வரை. தினமும் இரண்டு வீதிகள் வீதம் தியாகராஜநகர், டிவிஎஸ் நகர், திருமால் நகர், மல்லிகா காலனி இன்னும் அதை சுற்றியுள்ள பகுதிகளையெல்லாம் பஜனை பாடல்களை பாடிக்கொண்டே...

இயற்கை பேரழிவு

இதுதான் உண்மையான  "இயற்கை பேரழிவு"!!! ----------------------------- கடந்த 2004 சுனாமி ஆகட்டும், தானேவாகட்டும், சென்ற ஆண்டு வந்த சென்னை மழை ஆகட்டும்; இவையனைத்தும் ஒரு வகை என்றால், இன்று வந்த இந்த 'வர்தா' வேறொரு வகை. அவை இயற்கையால் வந்த பேரழிவு, இது இயற்கைக்கே வந்த பேரழிவு!!! கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரியும், அந்த இயற்கை சீற்றத்திலெல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டது மனிதனும், அவனது உடைமைகளும் தான். அதற்காக இயற்கைக்கு அழிவில்லை என்று சொல்லவில்லை. 'தானே' புயலால் இயற்கை பாதிக்கப்பட் டது உண்மைதான்,ஆனால் இந்த அளவு இல்லை என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டின் டிசம்பர் மழையும் அப்படித்தான். ஆனால், இந்த புயல் மொத்தமாய் வாரி சுருட்டி சென்றிருப்பது இயற்கையை. 75% இயற்கைதான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சென்னையின் எந்த ரோட்டிற்கு சென்றாலும் அங்கு குறைந்தது நான்கு மரங்கள் விழுந்துக்கிடக்கும். சேலையை இடுப்பில் தூக்கி செருகிக்கொண்டு மரத்தை இழுத்துக்கொண்டிருக்கும் பெண்களை ஒவ்வொரு தெருவிலும் பார்க்க முடியும். தள்ளாத வயதிலும் அரிவாளால் மரக்கொப்புகளை வெட்டிக்கொண்டிருக்கிறார்...

என்று தணியும் காஷ்மீர்?

என்று தணியும் காஷ்மீர்? கடந்த 100 நாட்களாக நாம் ” பாகிஸ்தான் , தீவிரவாதம் , போர் ” போன்ற வார்த்தைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகிறோம் அல்லது கேட்க வைக்கப்படுகிறோம் . இந்த நிலைக்கான மூலப் பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் , கடந்த ஜுலை மாதம் 8 ம் தேதி புர்ஹான் வானி என்றவரை இந்திய பாதுகாப்பு படை கொன்றது . இவர் யாரென்றால் , இந்தியாவிற்கு எதிராக ஆசாத் காஷ்மீரில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய இந்தியத் தலைவர்களில் ஒருவர் ஆவார் . இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக ஊடகங்களில் , புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் காஷ்மீரி மக்களைக் கவரும் வகையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்தவர் . 9 ஜுலை 2016 அன்று புர்கான் வானியின் சவ ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர் . புர்கான் வானியின் பிணத்தை புதைப்பதற்கு முன்பு , அவரது உடலை பாகிஸ்தான் நாட்டுக் கொடியால் போர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது . புர்கான் வானியின் இறப்பின் காரணமாக காஷ்மீரில் கலவரம் பரவியது . காஷ்மீர் சமவெளியில் தொடர் வன்முறை வெட...

எனக்கு பிடித்த பச்சை சட்டை

எனக்கு பிடித்த பச்சை சட்டை ~ என்கிட்ட ஒரு பச்சை சட்டை உண்டு. பச்சையென்றால் எந்த மாதிரி பச்சைன்னா, மாடு சாணி போட்டுட்டு அது மேலயே ஒண்ணுக்கு அடிச்சா ஒரு பச்சை வருமே.. அந்த பச்சை. அந்த சட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். பொதுவா காலேஜுக்கு கிறுக்கன் மாதிரிதான் போவேன், ஆனா அன்னைக்கு இந்த சட்டை போட்டதால கொஞ்சம் டீசண்ட்டா, டக்-இன் பண்ணி, ஷூ போட்டு போயிருந்தேன். போற வழியிலேயே பூரா பயலும் "மச்சான் செமல; பட்டைய கெளப்புதுனு" ஆரம்பிச்சிட்டானுங்க. என்னைய யாராது இப்படி சொன்னாலோ, பாராட்டினாலோ கொ ஞ்சம் பயம் வந்துடும். ஆஹா, இன்னிக்கு என்ன நடக்கப்போவுதோ?? நீதான்ப்பா காப்பாத்தணும்னு முனி மேல பாரத்த போட்டு கிளாஸுக்கு போனேன். அங்க போனா நமக்கு முன்னாடியே சனியன் ஸைடு ஸ்டாண்ட் போட்டு நின்னுட்டிருக்கு. மேட்டர் என்னனா, எங்கிளாஸ்ல படிக்கிற ஒரு பொண்ணும்(!!!) அதே கலர்ல சுடிதார் போட்டு, கிளாஸுக்குள்ள போறதுக்காக பெர்மிஷன் கேட்டு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கு. நானும் போயி வெயிட்டிங்ல ஜாயின் பண்ணிகிட்டேன். உள்ள நுழையவும் பின்னாடி பெஞ்ச்லயிருந்து "ஷ்ஷ்ஷ்" னு எவனோ ஆரம்பிச்சான், நம்மாட்களுக்கு அப்ப...

அலட்டல்

நாம் காதலிப்பது அவர்களுக்கு தெரியாதவரைக்கும்  இயல்பாக தான் இருக்கிறார்கள், தெரிந்த உடன் தான் அலட்டல்  அதிகமாகிவிடுகிறது!! # Verified

பிடல் காஸ்ட்ரோ

நான் மரணமடையும் அந்த நாள் தொடங்கி எனது எதிரிகள் வெறுமையை உணர்வார்கள், ஏனெனில் அவர்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்காது!! -பிடல் காஸ்ட்ரோ

இதுவா அதுவா?

இவைகளிலெது??  என்றுக் கேட்டால், இதுவல்லதது என்று சொல்லிவிடுகிறோம். இதுவா அதுவா?  என்று கேட்கும்பொழுது சற்று திணறித்தான் போகிறோம்!!! -பஞ்சகல்யாணி

நங்கை பேசும் மொழிகள்

நங்கை பேசும் மொழிகள் _______________________ தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பேச்சு வழக்கு இருக்கும். அதில் முக்கியமான ஊர்கள் என்றால் நெல்லை, மதுரை, கோவை ஆகிய மூன்றை சொல்லலாம். இது மூன்றுமே தன்னளவில் சிறப்பு வாய்ந்தவை தான். குறிப்பாக அப்பகுதிகளில் உள்ள பெண்கள் அந்த பேச்சு வழக்கில் பேசும்போது அது இன்னும் அழகாகிறது. நெல்லையை சேர்ந்த ஒரு பெண் தோழி ”எலெ, போலெ” என்று கூறும்போது அது அத்தனை இன்பமாய் இருக்கிறது. அன்பின் விளிம்பிலோ, கோபத்தின் உச்சத்திலோ ”போலெ லூசுப்பயல” என்பதற்கு  ஈடிணையில்லை என்பது அடியேன் எண்ணம். மதுரை மக்கள் மட்டுமல்ல, மொழியும் ஈர்க்கக் கூடியதுதான். மதுரையில் வேறெங்கும் காணக் கிடைக்காத வகையில், பெண்கள் தேவதைப் போலிருப்பது நான் கண்டறிந்த ஒன்று. அந்த பெண்கள் ”அவிய்ங்க, இவிய்ங்க, வந்தாய்ங்க, போனாய்ங்க” என்று பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பதை போல் அலாதியானது வேறொன்றும் இல்லை. கோவைக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்குள்ள பெண்கள் பேசும்போது ஒவ்வொரு வாக்கிய முடிவிலும் ”சாமி” என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள். ”ஏன் சாமி, என்ன சாமி, சாப்டியா சாமி, சொல்லு சாமி” என்பன போன...

#சென்னை_டேஸ்

(வி)சித்திரம் 0 சென்னை வந்ததில் இருந்து விதவிதமான மனிதர்களுக்கும் விசித்திரங்களுக்கும் குறைவில்லை. அப்படிதான் இன்று 26ம் நம்பர் பேருந்தில் தௌஸண்ட் லைட்ஸ் டூ கோடம்பாக்கம் பவர்ஹௌஸ் வந்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஐந்தடி தள்ளி, எதிர் வரிசையில் ஒரு பெண். என் கணிப்புபடி, சுமார் 26-27 வயது இருக்கலாம், கழுத்தில் ஐடி கார்டோடு நின்றுக்கொண்டிருந்தாள். ஒரு இருக்கையை ஒட்டி, ஒரு கையால் அந்த சீட்டின் கைப்பிடியை கஷ்டப்பட்டு பிடித்து வந்தாள். இன்னொரு கையில் போன் இருக்கும்போல என்று விட்டு விட் டேன். ரொம்ப நேரம் அவள் அப்படியே நின்றுவர, என்னதான் பிரச்சனை என்று எட்டிப் பார்த்தபோது தான் விஷயம் புரிந்தது, அந்த பெண் தன்னோட இன்னொரு கையில மெஹந்தி வச்சிருக்காங்க. மிக நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது அந்த மெஹந்தி கோட்டோவியம். ஒன்று ரோட்டு கடையில் வரைந்து விட்டு பஸ் ஏறியிருக்க வேண்டும் அல்லது அலுவலகத்தில் யாரேனும் வரைந்து விட்டிருக்க வேண்டும். பேருந்தில் கூட்டம் இருக்குமென்று மெஹந்தி வரையாமலோ, மெஹந்தி வரைந்திருக்கிறோம் என்று பேருந்தில் ஏறாமலோ இல்லாமல், என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்ற மனநிலையில் வந்த அந்...

#சென்னை_டேஸ்

என்னைப் புதுப்பித்துக்கொள்ள,  லாங் டிரைவ்வெல்லாம்  தேவைப்படுவதில்லை.. பாய் கடை சாயாவும் பட்டர் பிஸ்கெட்டும்  போதுமானதாய் இருக்கிறது!! -பஞ்சகல்யாணி # சென்னை_டேஸ்

கோழி குஞ்சு செத்துப் போச்சு

கோழிக் குஞ்சு செத்துப் போறதுனா சும்மாவா?? o இன்று காலை பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமில்லை, ஆனாலும் அமர இடமில்லாததால் நின்றுக்கொண்டுதான் வந்தேன். என்னருகில் ஒரு முதியவரும் நின்று வந்தார். பக்கத்தில் நின்றதிலிருந்தே என்னை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்து வந்தார். என்ன நினைத்தார் என்று தெரியவில்லை; திடீரென்று தனக்கு அருகில் நின்ற ஒருவரிடம், ”இப்படித்தான், எங்கூருல போன பங்குனி மாச வெக்க தாங்காம ஒரு 40-50 கோழி குஞ்சு செத்துப் போச்சு” என்று கூறிக்கொண்டிருந்தார் . ”என்ன டா சம்பந்தமே இல்லாம சொல்றாரே” என்று தற்செயலாக பார்க்கிறேன், நான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டைப் பார்த்துவிட்டுதான் அவர் அப்படி கூறி இருக்கிறார். ரூம் சென்ற உடன் முதல் வேலையாக அந்த ஜீன்ஸ் பேண்ட்டை தூக்கி எறிந்துவிட்டேன். பின்ன என்னங்க, அந்தாளு என்னமோ 40 50 குஞ்சு செத்துப் போகுதுங்கறாரு!! குஞ்சு செத்துப் போறதுனா சும்மாவா?? Be Carefullllll… -தமிழ்மறவோன் 18-11-2016

#சென்னை_டேஸ்

நேற்று காலை டீ அடிக்க போகும் வழியில் கண்ட காட்சி சற்றே பதற வைத்துவிட்டது. வீட்டு வாசலில் ஒரு டாடா மேஜிக் நின்றுக்கொண்டிருக்க, உள்ளிருந்து ஓர் இளம் அம்மா தனது குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வருகிறார். அந்த பெண் குழந்தை ஸ்கூல் யூனிபார்ம் போட்டிருக்கிறது. இதில் பதற என இருக்கு என்று கேட்கிறீர்களா? இருக்கு ஜி.. 1. நான் போன நேரம் காலை 7 மணி. 2. அந்த குழந்தைக்கு வயது அதிகபட்சம் 5 இருக்கும் அவ்வளவுதான். 3. இன்னொரு முக்கியமான விஷயம், அந்தம்மா தூக்கிட்டு வரும்போது அந்த குழந்தை தூங்கிட்டு இருக்கு!!!! தூங்கிட்டு இருக்கும் ஒரு குழந்தையை குளிப்பாட்டி, உடை மாற்றி அனுப்புகிறார்கள், இல்லை இல்லை தள்ளிவிடுகிறார்கள். இன்னும் அந்த குழந்தைக்கு விடியவே இல்லை. அந்த குழந்தை இன்னும் கண் விழிச்சு தன்னுடைய அம்மாவின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அதற்குள்ளாக அதை ஏற்றிவிட்டு அந்த டிரைவரிடம் இப்படி சொல்கிறாள் அந்த தாய், “அண்ணே, ஸ்கூல்ல கொஞ்சம் தூக்கிட்டு போய் உள்ள விட்டுருங்க”னு. அப்துல் கலாம் ஐயா, நீங்கள் கூறிய ”கனவு காணுங்களை” இவர்கள் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? தூ...

இல்லாது போவர்

கொடுப்பவர் எவரும் இலர் கெடுப்பவர் கிடப்பர் சூழ்ந்து,  எடுப்பவர் இங்குண்டு ஏராளம் செவி மடுப்பவர்  இல்லாது போவர்  நாம் செத்தொழிந்தாலும்!!! -தமிழ்மறவோன் 16-11-2016