#சென்னை_டேஸ்
நேற்று காலை டீ அடிக்க போகும் வழியில் கண்ட காட்சி சற்றே பதற வைத்துவிட்டது. வீட்டு வாசலில் ஒரு டாடா மேஜிக் நின்றுக்கொண்டிருக்க, உள்ளிருந்து ஓர் இளம் அம்மா தனது குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வருகிறார். அந்த பெண் குழந்தை ஸ்கூல் யூனிபார்ம் போட்டிருக்கிறது.
இதில் பதற என இருக்கு என்று கேட்கிறீர்களா?
இருக்கு ஜி..
1. நான் போன நேரம் காலை 7 மணி.
2. அந்த குழந்தைக்கு வயது அதிகபட்சம் 5 இருக்கும் அவ்வளவுதான்.
3. இன்னொரு முக்கியமான விஷயம், அந்தம்மா தூக்கிட்டு வரும்போது அந்த குழந்தை தூங்கிட்டு இருக்கு!!!!
தூங்கிட்டு இருக்கும் ஒரு குழந்தையை குளிப்பாட்டி, உடை மாற்றி அனுப்புகிறார்கள், இல்லை இல்லை தள்ளிவிடுகிறார்கள். இன்னும் அந்த குழந்தைக்கு விடியவே இல்லை. அந்த குழந்தை இன்னும் கண் விழிச்சு தன்னுடைய அம்மாவின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அதற்குள்ளாக அதை ஏற்றிவிட்டு அந்த டிரைவரிடம் இப்படி சொல்கிறாள் அந்த தாய், “அண்ணே, ஸ்கூல்ல கொஞ்சம் தூக்கிட்டு போய் உள்ள விட்டுருங்க”னு.
அப்துல் கலாம் ஐயா, நீங்கள் கூறிய ”கனவு காணுங்களை” இவர்கள் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?
தூங்கி கொண்டே பள்ளிக்கூடம் சென்றால், நல்ல கனவா வரும்னு நினைத்திருப்பார்களோ?
-தமிழ்மறவோன்
17-11-2016
Comments
Post a Comment