#சென்னை_டேஸ்
(வி)சித்திரம்
0
சென்னை வந்ததில் இருந்து விதவிதமான மனிதர்களுக்கும் விசித்திரங்களுக்கும் குறைவில்லை. அப்படிதான் இன்று 26ம் நம்பர் பேருந்தில் தௌஸண்ட் லைட்ஸ் டூ கோடம்பாக்கம் பவர்ஹௌஸ் வந்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஐந்தடி தள்ளி, எதிர் வரிசையில் ஒரு பெண். என் கணிப்புபடி, சுமார் 26-27 வயது இருக்கலாம், கழுத்தில் ஐடி கார்டோடு நின்றுக்கொண்டிருந்தாள். ஒரு இருக்கையை ஒட்டி, ஒரு கையால் அந்த சீட்டின் கைப்பிடியை கஷ்டப்பட்டு பிடித்து வந்தாள். இன்னொரு கையில் போன் இருக்கும்போல என்று விட்டு விட்டேன். ரொம்ப நேரம் அவள் அப்படியே நின்றுவர, என்னதான் பிரச்சனை என்று எட்டிப் பார்த்தபோது தான் விஷயம் புரிந்தது, அந்த பெண் தன்னோட இன்னொரு கையில மெஹந்தி வச்சிருக்காங்க. மிக நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது அந்த மெஹந்தி கோட்டோவியம். ஒன்று ரோட்டு கடையில் வரைந்து விட்டு பஸ் ஏறியிருக்க வேண்டும் அல்லது அலுவலகத்தில் யாரேனும் வரைந்து விட்டிருக்க வேண்டும். பேருந்தில் கூட்டம் இருக்குமென்று மெஹந்தி வரையாமலோ, மெஹந்தி வரைந்திருக்கிறோம் என்று பேருந்தில் ஏறாமலோ இல்லாமல், என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்ற மனநிலையில் வந்த அந்த பெண்ணின் தன்னம்பிக்கை !
-தமிழ்மறவோன்
Comments
Post a Comment