நங்கை பேசும் மொழிகள்
நங்கை பேசும் மொழிகள் _______________________ தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பேச்சு வழக்கு இருக்கும். அதில் முக்கியமான ஊர்கள் என்றால் நெல்லை, மதுரை, கோவை ஆகிய மூன்றை சொல்லலாம். இது மூன்றுமே தன்னளவில் சிறப்பு வாய்ந்தவை தான். குறிப்பாக அப்பகுதிகளில் உள்ள பெண்கள் அந்த பேச்சு வழக்கில் பேசும்போது அது இன்னும் அழகாகிறது. நெல்லையை சேர்ந்த ஒரு பெண் தோழி ”எலெ, போலெ” என்று கூறும்போது அது அத்தனை இன்பமாய் இருக்கிறது. அன்பின் விளிம்பிலோ, கோபத்தின் உச்சத்திலோ ”போலெ லூசுப்பயல” என்பதற்கு ஈடிணையில்லை என்பது அடியேன் எண்ணம். மதுரை மக்கள் மட்டுமல்ல, மொழியும் ஈர்க்கக் கூடியதுதான். மதுரையில் வேறெங்கும் காணக் கிடைக்காத வகையில், பெண்கள் தேவதைப் போலிருப்பது நான் கண்டறிந்த ஒன்று. அந்த பெண்கள் ”அவிய்ங்க, இவிய்ங்க, வந்தாய்ங்க, போனாய்ங்க” என்று பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பதை போல் அலாதியானது வேறொன்றும் இல்லை. கோவைக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்குள்ள பெண்கள் பேசும்போது ஒவ்வொரு வாக்கிய முடிவிலும் ”சாமி” என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள். ”ஏன் சாமி, என்ன சாமி, சாப்டியா சாமி, சொல்லு சாமி” என்பன போன்று;