#சென்னை_டேஸ்

தாம்பரம் டூ மாம்பலம்
வழி: கிண்டி

தாம்பரத்தில் இருந்து மாம்பலத்திற்கு ரயிலில் வந்துக்கொண்டிருந்தேன். கிண்டி ரயில் நிலையத்தில் ஆண் பெண் என்று இருபாலரும் இருந்த 7 பேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் ஒன்று ஏறியது. நான் அமர்ந்திருந்த பெட்டி வித்தியாசமான அமைப்புடன் ‘ப’ வடிவில் இருந்தது. அந்த பெட்டியில் ஆண்கள் பெண்கள் என்று சுமார் 20 பேர் அமர்ந்திருந்தோம். நடுவில் இருந்த வெற்று இடத்தில் அவர்கள் நின்றுக் கொண்டு வந்தனர். அவர்கள் நின்றிருந்த விதம் ஏதோ வித்தியாசமாக தோன்ற, நன்றாக பார்த்த பின்னர் தான் தெரிந்தது அவர்களில் ஒருவர் மட்டும் மேலே கம்பியை பிடித்துக்கொண்டு வர இன்னொருவர் அந்த ஒருவரை பிடித்துக்கொண்டு வர அவரை இன்னொருவர் என்று சங்கிலி தொடர் போல் பிடித்து வந்தனர். ஏன் இப்படியென்று யோசிக்கையில் தான் கவனித்தேன், அவர்களில் யாருமே துப்பட்டா அணியவில்லை. மேலே கம்பியை பிடித்துக்கொண்டு வர அவர்களுக்கு ஏதோ அன்ஈஸியாக தோன்றிருக்க வேண்டும் அதான் இந்த ஏற்பாடு என்று எண்ணிக்கொண்டேன். நான் மாம்பலத்தில் இறங்கும்வரை, பெண்கள் பெட்டிக்கு போகலாமா வேண்டாமா? என்று அவர்களுக்குள் ஒரு கிசுகிசு ஓடிக்கொண்டே இருந்தது.

நான் இறங்கிவிட்டேன் அவர்கள் பெட்டி மாறியிருப்பார்களா மாட்டார்களா?? தெரியவில்லை!!!!.
பெண்களின் வாழ்க்கை கஷ்டம்தான் இல்ல??
டிசைன் டிசைனா பிரச்சனை வருது!!!
ஆண்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

கேசம் - நரன்

முள் - சாரு நிவேதிதா