பருத்திக்கொட்டை - கிளாஸ்பொண்ணு - பட்டப்பேரு!!

பருத்திக்கொட்டை - கிளாஸ்பொண்ணு - பட்டப்பேரு!!
------------------------------------------------------------------------------------------
இன்று History tv சேனலில் Food tech என்ற நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. அதில், Cotton seed oil என்ற ஒரு கான்செப்ட். அதாவது பருத்திவிதையில் இருந்து எப்படி எண்ணெய் தயாரிக்கிறார்கள் என்று ஒரு குண்டு அண்ணன் விளக்கினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த போது பள்ளி ஞாபகங்கள் மனக்கண்முன் நிழலாடியது. 

எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு பட்டப்பேரு, "பருத்திக்கொட்டை". ஆனா அத பெரும்பாலான நேரங்கள்ல சுருக்கி 'பருத்தி'னுதான் எங்களுக்குள்ள பேசிக்குவோம். அக்சுவலா பருத்திக்கொட்டைனு எதுவுமே கிடையாது, பருத்தி விதை தான் உண்டு. அத தான் பேச்சுவழக்குல பருத்திக்கொட்டைனு சொல்றோம். அந்த பட்டப்பேருக்கு காரணம் என்ன அப்படிங்கறத ஆராஞ்சு பார்த்தா, அந்த பொண்ணு கொஞ்சம் கருப்பா இருப்பா; கொஞ்சம்னா, கொஞ்சம் அதிகம்னே வச்சுகோங்களேன். ஆனா லட்சணமாதான் இருப்பா!!!
எவன் இந்த பேரு வச்சான்னு தெரியல, ஏன்னா பருத்தின்னா பஞ்சு அது நல்ல வெள்ளையா தான இருக்கு, இப்பதான் பாக்குறேன் பருத்திவிதையும் வெள்ளை கலர்ல தான் இருக்கு .
அதாவது எப்படி இருக்குண்ணா, மக்கா சோளத்த ரெண்டா வெட்டி வச்சா எப்படி இருக்குமோ அதான் பருத்திவிதை. பருத்திக்கும் கருப்புக்கும் சம்பந்தமே கிடையாது.
இனிமேல் பட்டப்பேரு வச்சாலும் நல்ல அனலைஸ் பண்ணித்தான் வைக்கோணும் போல!!!
-பஞ்சகல்யாணி
30-10-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்