அச்சம் என்பது மடமையடா
அச்சம் என்பது மடமையடா!!!
(Spoiler இல்ல)
கடைசியாக பிரேமம் படத்துக்கு எழுதியதாக ஞாபகம். அதுக்கு அப்பறம் இந்த AYM.
கௌதம் மேனன்
ஏ,ஆர்.ஆர்
மஞ்சிமா
சிம்பு
இந்த வரிசைக்காக தான் படம் பார்க்கச் சென்றது. ஒரு படத்தை முதல் பாதி இரண்டாம் பாதி என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. படத்திற்கு 120 என்று மொத்தமாகத்தான் வாங்குகிறார்கள், அப்பறம் படம் மட்டும் முதல் பாதி நல்லா இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்?
1. வழக்கமான தன் படங்களை போல ஹீரோ, ஹீரோயினை அழகாக காட்ட முயன்றிருக்கிறார் GVM.
2. வழக்கம் போல் இசை ராஜாங்கம் நடத்துகிறார் ஏ.ஆர்.ஆர்.
3. வழக்கமான சிம்பு வழிந்து வழிந்து காதலிக்கிறார்.
4.வழக்கமான GVM படத்தில் வருவதுபோல கதாநாயகி சும்மா வந்து செல்கிறார்.
சில இடங்களில் சில நுணுக்கமான விஷயங்கள் ஈர்க்கின்றன. உதாரணத்திற்கு, ”செருப்பெல்லாம் கல்லுடா, கால்லலாம் குத்திருச்சு”னு சிம்பு மகேஷ்கிட்ட சொல்லுவாரு, அடுத்த ஸீன் மஞ்சிமாவ வண்டில கூட்டிட்டு போகும்போதும் கால்ல செருப்பு இருக்காது. கவனமா எடுத்துருப்பாங்க அந்த ஸீன். இது மாதிரி கொஞ்சம் ஸீன்ஸ் ஓகே.
இவங்களுக்கு இவ்ளோ போதும்; சிம்புவையும், மஞ்சிமாவையும் காட்டுனா ஜொள்ளு வடிச்சுட்டு போயிருவாங்க அப்படினு நெனைச்சுட்டாரு போல.
இந்த படத்துல வர்ற துப்பாக்கி கௌதமுக்கு வேணுங்கறவங்கள மட்டும் கொல்லாது. கேட்டா கமர்ஷியல்னு சொல்வாய்ங்க. அப்ப சிங்கம் படத்துல குதிரையில வர்றதையும் கமர்ஷியல்னு எடுத்துக்க வேண்டிதான? இத சொன்னா நம்மள????
படத்துல நல்லா இருக்குனு பேசணும்னா ஏ.ஆர்.ஆர் மட்டும்தான். படம் முடிச்சுட்டு வரும்போது அந்த வரிசை கொஞ்சம் மாறியிருந்தது.
ஏ.ஆர்.ஆர்.
கதிர் (ஒளிப்பதிவாளர்)
மகேஷ்
உன்னையலாம் யாரு எழுத சொன்னது?
போன்ற வசவுகள் வரவேற்கபடுகின்றன.
-பஞ்சகல்யாணி
Comments
Post a Comment