ரெமோ- பிட்டு- மெனக்கெடுதல்
ரெமோ- பிட்டு- மெனக்கெடுதல்
-----------------------------------------------------
ரெமோ படத்தைப் பற்றி பலவித விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கும் எதிர் கருத்துக்கள் உண்டு. இருக்கட்டும்; அந்த படத்திலிருந்து நான் எடுத்துக்கொண்ட ஒரு விஷயம் "மெனக்கெடுதல்".
அனைத்து காரியங்களிலும் மெனக்கெடுதல் என்பது ரொம்ப முக்கியமானது. எந்தவொரு விஷயத்தையும் மெனக்கெட்டு செய்யும்போது அதன் முடிவு சாதகமான ஒன்றாகத்தான் இருக்கும். அதற்கு உதாரணம் தான், இந்த "ரெஜினாமோத்வானி". மெனக்கெட்டு ஒரு விஷயத்தை செய்தபோதுதான் அவருக்கு தேவையான ஒன்று கிடைத்தது. இன்னொரு உதாரணம், பரீட்சையில் பிட் அடிப்பது. அந்த பிட்டை எழுதும்போது எவ்வளவு தெளிவாக எழுதுகிறோம், எப்படி புரியும்படி மெனக்கெட்டு எழுதுகிறோம் என்பதுதான் பரீட்சை ஹாலில் செலக்டிவ்வாக பிட்டினை எடுத்து அதிகம் சிரமப்படாமல் எழுத உதவும். ஒழுங்காக மெனக்கெட்டு எழுதாமல் மேம்போக்காக எழுதி வைத்தோமேயானால் ஹாலில் பிட்டை உற்று நோக்கும்போது வாத்தியார் உங்களை நோக்கிக்கொண்டிருப்பார். சோ, எந்த ஒரு விஷயத்தையும் மெனக்கெட்டு, கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்து பாருங்கள்;
முடிவு சாதகமாகவே இருக்கும்!!!!
Comments
Post a Comment