பெருமூச்சு(சா)

பெருமூச்சு(சா) 
------------------------------

ஓர் விடுமுறை நாளின் மாலையில் அம்மா பிரதோஷமென்று கோவிலுக்குச் சென்றுவிட, அப்பாவும் வெளியில் சென்றுவிட்டார். நான் மட்டும் வீட்டில்; அம்மா போறதுக்கு முன்னாடி, "பால் வாங்க பாத்திரம் வச்சுருக்கேன் வாங்கி வச்சிரு" "பக்கத்து வீட்டு சாவி இருக்கு, வந்து கேட்டா கொடுத்துரு" "வாசல்ல பூக்காரம்மாட்ட பூ வாங்கி வை" என்றும் சொல்லி சென்றாள். நானும் குனிந்த தலை நிமிராது தொடுதிரையை தடவிக்கொண்டே தலையாட்டி வைத்தேன். கொஞ்ச நேரங்கழிச்சு 1க்கு அடிக்கணும் போல இருந்தது. அப்பறந்தான் யோசிச்சேன் "அய்யயோ வீட்ல யாருமில்லையே".
என்ன செய்ய???
வாசற்கதவை பூட்டிட்டு போலாமா?
அந்நேரம் பார்த்து பால்காரர் வந்து, வீட்ல யாருமில்லைனு திரும்பி போயிட்டா என்ன பண்ண?
பூக்காரம்மா போயிட்டால் அம்மாட்ட என்ன சொல்லி சமாளிப்பது? பக்கத்து வீட்டு ஆன்ட்டினா பரவால்ல கொஞ்சம் வெயிட் பண்ணும். அவர்களும் "ஏன் லேட்டு"?னு கேட்டா "பாத்ரூம் போயிருந்தேன்" என்று சொல்லவா முடியும். சொல்லலாம் தான் ஆனாலும் ஏதோ ஒன்று சொல்லவிடாமல் தடுக்கிறதே!!!
என்ன செய்வது??
"ஆத்திரத்தை அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்கக்கூடாது" என்ற ஔவையின்(!!!) சொல்லுக்கிணங்க, எதற்கும் துணிந்தவனாய் கதவை பூட்டிவிட்டு பாத்ரூம் செல்ல தீர்மானித்தேன்.
பால்காரர் போய்விட்டால்??
இருக்கவே இருக்கு பாக்கெட் பால்.
பூக்காரம்மா??
அந்தம்மா வரவேயில்லை என்று அம்மாவிடம் கூறிவிடலாம்.
அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி,
கொஞ்ச நேரம் தான் நிற்கட்டுமே!! இறுதியில், உறுதியாய் கழிவறை கதவை திறந்து உள்நுழைந்தேன்.
கதவை தாழ் கூட போடவில்லை, அப்பதான் யாராது வந்தா டக்குன்னு வெளிய வர முடியும். பின்னர் அடக்கி வைத்திருந்ததை கட்டவிழ்த்து விட்டேன். காட்டாறாய் சீறியது. என்னையுமறியாமல் ஓர் பெருமூச்சு வெளிபட்டது. முடிக்கும் தருவாயில் உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுமே, கரெக்டா அந்த நேரம் பெல்லடித்தது (காலிங்பெல்!!), யாராக இருக்கும் என்று எண்ணியவாறே இறுதி சொட்டையும் இறக்கிவிட்டேன். "இனிமேல் யாராக இருந்தால் என்ன?
அதான் எல்லாம் முடிந்துவிட்டதே" என்று கழிவைறயில் தண்ணீர் ஊற்ற மறக்காமல், தாழ் போடாத கதவை திறந்து வாசற்கதவு நோக்கி விரைந்தேன். திறந்து பார்த்தால்
"குட் ஈவ்னிங் சார்!!!
உங்க வீட்ல டேபிள்மேட் இருக்கா???"என்று கழுத்திறுக்கி(Tie) அணிந்த அன்பர் ஒருவர் நின்றிருந்தார். "யார்ரா நீ? எங்க இருந்து டா வந்த? என் லிஸ்டுல நீ இல்லவே இல்லையேடா!!!
என்று மனதில் நினைத்துக்கொண்டே
"ரொம்ப நன்றிப்பா __/\__ நல்லவேள எல்லாம் முடிஞ்சப்பறம் வந்த. பாதியிலயே வந்திருந்தா ஸீன் மாறியிருக்கும் என்று நினைத்து,
நீ கிளம்பு" என்று டாட்டா காட்டி அனுப்பிவிட்டு வாசற்கதவை திறந்து வைத்து காத்திருக்கத் தொடங்கினேன்.
ஓர் நிம்மதி பெருமூச்சோடு!!!
-பஞ்சகல்யாணி
31-10-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா