#வாசகசாலை 1

வணக்கம்!!
வாசகசாலை சார்பில் 22-10-2016 (சனிக்கிழமை) மாலை எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களின் படைப்புலகம் பற்றிய நிகழ்வு நடைபெற்றது. நீங்கள் யோசிப்பதைப் போன்று தான் நானும் யோசித்தேன்,
யார் இந்த இராசேந்திர சோழன்?
அன்றைய நிகழ்வுக்கு பிறகுதான் தெரியவந்தது இவர் எவ்வளவு கொண்டாடப்பட வேண்டியவர் என்று. தமிழ் இலக்கிய வரலாறை பத்திரிக்கைகளில் ஓரளவு வாசித்து இருக்கிறேன். ஆனால், இந்த பெயரை கடந்து வந்ததே இல்லை. தமிழ் இலக்கிய உலகில் இவர் மறக்கப்பட்டாரா? மறைக்கப்பட்டாரா? என்று தெரியவில்லை. தற்போது 80 வயதாகும் இவர், கடந்த 40 வருடங்களாக சிறுகதை, குறுநாவல், கட்டுரை என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். அதிகம் பேச படாத, ஆனால் பேச வேண்டிய ஒரு எழுத்தாளரை எடுத்து, அவரது படைப்புகளை இளைஞர்களை கொண்டு பேச வைத்த வாசகசாலைக்கு வாழ்த்துகள்!!!
இறுதியில், ஏற்புரையின் போது அவரது கண்களிலும், பேச்சிலும் ஒரு பெருமிதத்தை காண முடிந்தது. அவரது வார்த்தைகளில் ஏதையோ அடைந்துவிட்ட ஒரு உணர்வு வெளிப்பட்டது.
இதுதான் வாசகசாலையின் வெற்றி!!!!
(அன்றே எழுதியது பதிவேற்ற தவறிவிட்டேன்)

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா