"க்ளிப்"ping (StressBuster)

"க்ளிப்"ping (StressBuster)
-----------------------------------
துணி துவைப்பதை விட அதை காயப்போடுவது என்பது எரிச்சல் பிடித்த வேலை. இதை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்பதுதான் கான்செப்ட்!!!!
காயப்போட்ட துணிகளுக்கு க்ளிப் போடுவது வழக்கம். அதை எப்படி optimal ஆக்கலாம் என்று யோசிக்கும்போதுதான் இது தோன்றியது. அதாவது, குறைந்த க்ளிப்களை அதிகமான துணிகளுக்கு எப்படி மாட்டுவது?? ஒவ்வொரு முறையும் இது சவாலான ஒரு விஷயமாகவே இருக்கும். சும்மா ஒரு துணிக்கு ஒரு க்ளிப் போடுவது என்பது மாட்டும்போதும் எரிச்சல், எடுக்கும்போதும் எரிச்சல்.
சரி,துணி காயப் போடும்போது என்னென்ன விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டும்??
1.துணியின் கனம்
2.க்ளைமேட்
3.துணியின் வகைகளும் எண்ணிக்கையும்.
-> பேண்ட் என்றால் அதன் கனத்தை கணக்கில் கொண்டு கண்டிப்பாக, ஒரு பேண்ட்டுக்கு ஒரு க்ளிப் அவசியம்.
-> சட்டை என்றால் க்ளிப் தேவையில்லை; துண்டை காயப்போடுவதுப் போல் போட்டு பட்டன் மாட்டிவிட்டால், புயலடித்தாலும் கீழே விழாது.
-> டீஷர்ட், ஷார்ட்ஸ், ஜட்டி போன்றவற்றை இரண்டிரண்டாக இணைத்துப் போடலாம். அதாவது இப்படி,
---*--- ---*--- ---*---
அந்த ஸ்டார் தான் க்ளிப், இது மாதிரி போட்டால் க்ளிப்பின் தேவைப் பாதியாக குறைந்துவிடும். சுடிதார் டாப்ஸ, பேண்ட், லெக்கிங்ஸ் எல்லாம் இந்த கேட்டகரிதான்.
-> துண்டை காயப்போட்டு அதன் மீது கர்ச்சீப், சாக்ஸ் போன்றவற்றைப் போட்டு இரண்டுக்கும் சேர்த்து ஒரே க்ளிப்பாக போட்டுவிடலாம் அல்லது துண்டின் நுனியில் முடிச்சு போடலாம்.
லுங்கி, பாவாடை வகையறாவுக்கும் இதே கான்செப்ட் தான்.
-> பனியன்,ஸ்லிப் போன்றவற்றிற்கு தோள்பட்டையில் வரும் கயிறு பகுதியை கொடியின் ஒரு பக்கத்தில் பிடித்துக்கொண்டு உடல் பகுதியை கொடியின் இன்னொரு பக்கமாக கொண்டுவந்து அந்த கயிறு பகுதிக்குள் நுழைத்துவிட வேண்டும். க்ளிப் தேவையேயில்லை அல்லது சாதாரணமாக முடிச்சும் போடலாம்.
ஒரு முறை முயன்றுதான் பாருங்களேன்!!! நான் நாலு வருஷமா இப்படிதான் பண்ணிட்டிருக்கேன்.
Credit goes to:
NECH!!!
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா