Posts

Showing posts from 2016

புதுவருடம்

புதுவருடம் ~ புதுவருட பிறப்பிற்கெல்லாம் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. புதுவருட கொண்டாட்டத்திலும் சிறுவயதிலிருந்தே அவ்வளவாக ஈடுபாடு காட்டமாட்டேன். சரியாக பார்த்தால் இது 5வது வருடம், புதுவருட பிறப்பன்று நான் வீட்டில் இல்லாமலிருப்பது!!  கடைசியாக 12ம் வகுப்பு படிக்கையில் வருடப்பிறப்பிற்கு முதல்நாள் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த அம்மாவிடமிருந்து காவி, சுண்ணாம்பு வாங்கி ரோட்டில்  "Happy Newyear" எழுதியதாக நினைவு. கல்லூரி சேர்ந்த பின்னர் விடுதியில் தங்கி படித்ததால் மூன்ற ாண்டுகள் புதுவருடம் பிறந்தது NEC விடுதியில்தான்.. கடந்த வருடம் நானே எதிர்பார்க்காத வகையில் புதுவருடப்பிறப்பன்று 'அலகாபாத்' ரயில் பயணத்தில் இருந்தேன்.  எனக்கான இந்த 2017ன் பிரசவம் நிகழ்வது.. "அகமதாபாத் ரயில் நிலையத்தில்"!! ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து, "புத்தாண்டு வாழ்த்துகளுடன்"!! பிகு_/\_

நானும் அரவிந்த்சாமியும்!!

நானும் அரவிந்த்சாமியும்!! ~ நேற்று எங்கள் வீட்டின் முன் சில சிறுவர்கள் ரோட்டில் செங்கல் வைத்து மூன்று குச்சிகளை நிறுத்தி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவரிலமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, எனது கொசுவர்த்தி சுருள் ஒரு ஏழெட்டு வருடங்கள் பின்னோக்கி சுழன்றது. 8,9,10ம் வகுப்பு படிக்கையில்தான் கிரிக்கெட் பித்து தலைக்கேறியிருந்த சமயம்; வாரயிறுதியில் கிரிக்கெட் மட்டையை நீளவாக்கில் சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு கிரவுண்ட் கிரவுண்டாக சுற்றுவோம். அதுவ ும் ஏப்ரல்-மே கோடை விடுமுறையில் அடித்த பூரா வெயிலும் எங்கள் மீதுதான் விழுந்திருக்கும் என்ற வண்ணம் வெயில், வியர்வை, பசி, தாகம் பாராமல் ஆடுவோம். "எட்டாங்கிளாஸ் படிக்கும்போது அரவிந்த்சாமி கலருல இருந்தியேல இப்டி கறுத்துப்போயிட்டியே" என்று எந்தாய் ஆதங்கபடாத நாட்கள் குறைவு. தெருக்களில் செங்கற்கள் வைத்து, ஒன்பிட்ச் கேட்ச் வைத்து, வீட்டிற்குள் த்ரூவாக அடித்தால் அவுட் போன்ற விதிமுறைகளை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டிருக்கும்போதே, (அதை ஓனருக்கு தெரியாமல், காலடி ஓசை கேளாமல் சுவரேறி குதித்து எடுப்பது த...

பஜன் பஜன் காலை!

பஜன் பஜன் காலை! (18+ இல்ல) இதோ தொடங்கிவிட்டது மார்கழி மாதம்.  மார்கழி மாதம் குளிருக்கானது என்ற பேச்செல்லாம் பழையதாகிவிட்டது. பருவநிலை மாற்றம் என்ற பெயரில் மழை பெய்யும் காலம் குளிர்கிறது, குளிர் காலம் மழை பொழிகிறது. கண்ட கண்ட இடமெல்லாம் பனி உட்புகுந்து, காதுக்குள் ஊசி குத்துவதைப் போல் இறங்கவில்லையென்றால் மார்கழி மாதத்திற்கான மரியாதையே போய்விடும். அத்தகைய மார்கழி மாதத்து மற்றொரு முக்கிய விஷயம், ’பஜனை’. நன்றாக நினைவில் நிற்கிறது, 5 வகுப்பு படிக்கையில் பனி அதிகமாக இருக்கிறது என்ற ு மார்கழி பஜனைக்கு செல்ல வீட்டில் அனுமதிக்கவில்லை. அழுது புரண்டு ’இரண்டு மணிநேரம்’ உண்ணாவிரதமெல்லாம் இருந்துதான் அனுமதி வாங்கினேன். அன்றுத் தொடங்கி 10 வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்திற்காக ஏங்கி கிடந்தேன். தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 130 நபர்கள் செல்வோம். 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது சீனியர் சிட்டிசன் வரை. தினமும் இரண்டு வீதிகள் வீதம் தியாகராஜநகர், டிவிஎஸ் நகர், திருமால் நகர், மல்லிகா காலனி இன்னும் அதை சுற்றியுள்ள பகுதிகளையெல்லாம் பஜனை பாடல்களை பாடிக்கொண்டே...

இயற்கை பேரழிவு

இதுதான் உண்மையான  "இயற்கை பேரழிவு"!!! ----------------------------- கடந்த 2004 சுனாமி ஆகட்டும், தானேவாகட்டும், சென்ற ஆண்டு வந்த சென்னை மழை ஆகட்டும்; இவையனைத்தும் ஒரு வகை என்றால், இன்று வந்த இந்த 'வர்தா' வேறொரு வகை. அவை இயற்கையால் வந்த பேரழிவு, இது இயற்கைக்கே வந்த பேரழிவு!!! கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரியும், அந்த இயற்கை சீற்றத்திலெல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டது மனிதனும், அவனது உடைமைகளும் தான். அதற்காக இயற்கைக்கு அழிவில்லை என்று சொல்லவில்லை. 'தானே' புயலால் இயற்கை பாதிக்கப்பட் டது உண்மைதான்,ஆனால் இந்த அளவு இல்லை என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டின் டிசம்பர் மழையும் அப்படித்தான். ஆனால், இந்த புயல் மொத்தமாய் வாரி சுருட்டி சென்றிருப்பது இயற்கையை. 75% இயற்கைதான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சென்னையின் எந்த ரோட்டிற்கு சென்றாலும் அங்கு குறைந்தது நான்கு மரங்கள் விழுந்துக்கிடக்கும். சேலையை இடுப்பில் தூக்கி செருகிக்கொண்டு மரத்தை இழுத்துக்கொண்டிருக்கும் பெண்களை ஒவ்வொரு தெருவிலும் பார்க்க முடியும். தள்ளாத வயதிலும் அரிவாளால் மரக்கொப்புகளை வெட்டிக்கொண்டிருக்கிறார்...

என்று தணியும் காஷ்மீர்?

என்று தணியும் காஷ்மீர்? கடந்த 100 நாட்களாக நாம் ” பாகிஸ்தான் , தீவிரவாதம் , போர் ” போன்ற வார்த்தைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகிறோம் அல்லது கேட்க வைக்கப்படுகிறோம் . இந்த நிலைக்கான மூலப் பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் , கடந்த ஜுலை மாதம் 8 ம் தேதி புர்ஹான் வானி என்றவரை இந்திய பாதுகாப்பு படை கொன்றது . இவர் யாரென்றால் , இந்தியாவிற்கு எதிராக ஆசாத் காஷ்மீரில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய இந்தியத் தலைவர்களில் ஒருவர் ஆவார் . இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக ஊடகங்களில் , புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் காஷ்மீரி மக்களைக் கவரும் வகையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்தவர் . 9 ஜுலை 2016 அன்று புர்கான் வானியின் சவ ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர் . புர்கான் வானியின் பிணத்தை புதைப்பதற்கு முன்பு , அவரது உடலை பாகிஸ்தான் நாட்டுக் கொடியால் போர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது . புர்கான் வானியின் இறப்பின் காரணமாக காஷ்மீரில் கலவரம் பரவியது . காஷ்மீர் சமவெளியில் தொடர் வன்முறை வெட...

எனக்கு பிடித்த பச்சை சட்டை

எனக்கு பிடித்த பச்சை சட்டை ~ என்கிட்ட ஒரு பச்சை சட்டை உண்டு. பச்சையென்றால் எந்த மாதிரி பச்சைன்னா, மாடு சாணி போட்டுட்டு அது மேலயே ஒண்ணுக்கு அடிச்சா ஒரு பச்சை வருமே.. அந்த பச்சை. அந்த சட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். பொதுவா காலேஜுக்கு கிறுக்கன் மாதிரிதான் போவேன், ஆனா அன்னைக்கு இந்த சட்டை போட்டதால கொஞ்சம் டீசண்ட்டா, டக்-இன் பண்ணி, ஷூ போட்டு போயிருந்தேன். போற வழியிலேயே பூரா பயலும் "மச்சான் செமல; பட்டைய கெளப்புதுனு" ஆரம்பிச்சிட்டானுங்க. என்னைய யாராது இப்படி சொன்னாலோ, பாராட்டினாலோ கொ ஞ்சம் பயம் வந்துடும். ஆஹா, இன்னிக்கு என்ன நடக்கப்போவுதோ?? நீதான்ப்பா காப்பாத்தணும்னு முனி மேல பாரத்த போட்டு கிளாஸுக்கு போனேன். அங்க போனா நமக்கு முன்னாடியே சனியன் ஸைடு ஸ்டாண்ட் போட்டு நின்னுட்டிருக்கு. மேட்டர் என்னனா, எங்கிளாஸ்ல படிக்கிற ஒரு பொண்ணும்(!!!) அதே கலர்ல சுடிதார் போட்டு, கிளாஸுக்குள்ள போறதுக்காக பெர்மிஷன் கேட்டு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கு. நானும் போயி வெயிட்டிங்ல ஜாயின் பண்ணிகிட்டேன். உள்ள நுழையவும் பின்னாடி பெஞ்ச்லயிருந்து "ஷ்ஷ்ஷ்" னு எவனோ ஆரம்பிச்சான், நம்மாட்களுக்கு அப்ப...

அலட்டல்

நாம் காதலிப்பது அவர்களுக்கு தெரியாதவரைக்கும்  இயல்பாக தான் இருக்கிறார்கள், தெரிந்த உடன் தான் அலட்டல்  அதிகமாகிவிடுகிறது!! # Verified

பிடல் காஸ்ட்ரோ

நான் மரணமடையும் அந்த நாள் தொடங்கி எனது எதிரிகள் வெறுமையை உணர்வார்கள், ஏனெனில் அவர்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்காது!! -பிடல் காஸ்ட்ரோ

இதுவா அதுவா?

இவைகளிலெது??  என்றுக் கேட்டால், இதுவல்லதது என்று சொல்லிவிடுகிறோம். இதுவா அதுவா?  என்று கேட்கும்பொழுது சற்று திணறித்தான் போகிறோம்!!! -பஞ்சகல்யாணி

நங்கை பேசும் மொழிகள்

நங்கை பேசும் மொழிகள் _______________________ தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பேச்சு வழக்கு இருக்கும். அதில் முக்கியமான ஊர்கள் என்றால் நெல்லை, மதுரை, கோவை ஆகிய மூன்றை சொல்லலாம். இது மூன்றுமே தன்னளவில் சிறப்பு வாய்ந்தவை தான். குறிப்பாக அப்பகுதிகளில் உள்ள பெண்கள் அந்த பேச்சு வழக்கில் பேசும்போது அது இன்னும் அழகாகிறது. நெல்லையை சேர்ந்த ஒரு பெண் தோழி ”எலெ, போலெ” என்று கூறும்போது அது அத்தனை இன்பமாய் இருக்கிறது. அன்பின் விளிம்பிலோ, கோபத்தின் உச்சத்திலோ ”போலெ லூசுப்பயல” என்பதற்கு  ஈடிணையில்லை என்பது அடியேன் எண்ணம். மதுரை மக்கள் மட்டுமல்ல, மொழியும் ஈர்க்கக் கூடியதுதான். மதுரையில் வேறெங்கும் காணக் கிடைக்காத வகையில், பெண்கள் தேவதைப் போலிருப்பது நான் கண்டறிந்த ஒன்று. அந்த பெண்கள் ”அவிய்ங்க, இவிய்ங்க, வந்தாய்ங்க, போனாய்ங்க” என்று பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பதை போல் அலாதியானது வேறொன்றும் இல்லை. கோவைக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்குள்ள பெண்கள் பேசும்போது ஒவ்வொரு வாக்கிய முடிவிலும் ”சாமி” என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள். ”ஏன் சாமி, என்ன சாமி, சாப்டியா சாமி, சொல்லு சாமி” என்பன போன...

#சென்னை_டேஸ்

(வி)சித்திரம் 0 சென்னை வந்ததில் இருந்து விதவிதமான மனிதர்களுக்கும் விசித்திரங்களுக்கும் குறைவில்லை. அப்படிதான் இன்று 26ம் நம்பர் பேருந்தில் தௌஸண்ட் லைட்ஸ் டூ கோடம்பாக்கம் பவர்ஹௌஸ் வந்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஐந்தடி தள்ளி, எதிர் வரிசையில் ஒரு பெண். என் கணிப்புபடி, சுமார் 26-27 வயது இருக்கலாம், கழுத்தில் ஐடி கார்டோடு நின்றுக்கொண்டிருந்தாள். ஒரு இருக்கையை ஒட்டி, ஒரு கையால் அந்த சீட்டின் கைப்பிடியை கஷ்டப்பட்டு பிடித்து வந்தாள். இன்னொரு கையில் போன் இருக்கும்போல என்று விட்டு விட் டேன். ரொம்ப நேரம் அவள் அப்படியே நின்றுவர, என்னதான் பிரச்சனை என்று எட்டிப் பார்த்தபோது தான் விஷயம் புரிந்தது, அந்த பெண் தன்னோட இன்னொரு கையில மெஹந்தி வச்சிருக்காங்க. மிக நேர்த்தியாக வரையப்பட்டு இருந்தது அந்த மெஹந்தி கோட்டோவியம். ஒன்று ரோட்டு கடையில் வரைந்து விட்டு பஸ் ஏறியிருக்க வேண்டும் அல்லது அலுவலகத்தில் யாரேனும் வரைந்து விட்டிருக்க வேண்டும். பேருந்தில் கூட்டம் இருக்குமென்று மெஹந்தி வரையாமலோ, மெஹந்தி வரைந்திருக்கிறோம் என்று பேருந்தில் ஏறாமலோ இல்லாமல், என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்ற மனநிலையில் வந்த அந்...

#சென்னை_டேஸ்

என்னைப் புதுப்பித்துக்கொள்ள,  லாங் டிரைவ்வெல்லாம்  தேவைப்படுவதில்லை.. பாய் கடை சாயாவும் பட்டர் பிஸ்கெட்டும்  போதுமானதாய் இருக்கிறது!! -பஞ்சகல்யாணி # சென்னை_டேஸ்

கோழி குஞ்சு செத்துப் போச்சு

கோழிக் குஞ்சு செத்துப் போறதுனா சும்மாவா?? o இன்று காலை பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமில்லை, ஆனாலும் அமர இடமில்லாததால் நின்றுக்கொண்டுதான் வந்தேன். என்னருகில் ஒரு முதியவரும் நின்று வந்தார். பக்கத்தில் நின்றதிலிருந்தே என்னை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்து வந்தார். என்ன நினைத்தார் என்று தெரியவில்லை; திடீரென்று தனக்கு அருகில் நின்ற ஒருவரிடம், ”இப்படித்தான், எங்கூருல போன பங்குனி மாச வெக்க தாங்காம ஒரு 40-50 கோழி குஞ்சு செத்துப் போச்சு” என்று கூறிக்கொண்டிருந்தார் . ”என்ன டா சம்பந்தமே இல்லாம சொல்றாரே” என்று தற்செயலாக பார்க்கிறேன், நான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டைப் பார்த்துவிட்டுதான் அவர் அப்படி கூறி இருக்கிறார். ரூம் சென்ற உடன் முதல் வேலையாக அந்த ஜீன்ஸ் பேண்ட்டை தூக்கி எறிந்துவிட்டேன். பின்ன என்னங்க, அந்தாளு என்னமோ 40 50 குஞ்சு செத்துப் போகுதுங்கறாரு!! குஞ்சு செத்துப் போறதுனா சும்மாவா?? Be Carefullllll… -தமிழ்மறவோன் 18-11-2016

#சென்னை_டேஸ்

நேற்று காலை டீ அடிக்க போகும் வழியில் கண்ட காட்சி சற்றே பதற வைத்துவிட்டது. வீட்டு வாசலில் ஒரு டாடா மேஜிக் நின்றுக்கொண்டிருக்க, உள்ளிருந்து ஓர் இளம் அம்மா தனது குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வருகிறார். அந்த பெண் குழந்தை ஸ்கூல் யூனிபார்ம் போட்டிருக்கிறது. இதில் பதற என இருக்கு என்று கேட்கிறீர்களா? இருக்கு ஜி.. 1. நான் போன நேரம் காலை 7 மணி. 2. அந்த குழந்தைக்கு வயது அதிகபட்சம் 5 இருக்கும் அவ்வளவுதான். 3. இன்னொரு முக்கியமான விஷயம், அந்தம்மா தூக்கிட்டு வரும்போது அந்த குழந்தை தூங்கிட்டு இருக்கு!!!! தூங்கிட்டு இருக்கும் ஒரு குழந்தையை குளிப்பாட்டி, உடை மாற்றி அனுப்புகிறார்கள், இல்லை இல்லை தள்ளிவிடுகிறார்கள். இன்னும் அந்த குழந்தைக்கு விடியவே இல்லை. அந்த குழந்தை இன்னும் கண் விழிச்சு தன்னுடைய அம்மாவின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அதற்குள்ளாக அதை ஏற்றிவிட்டு அந்த டிரைவரிடம் இப்படி சொல்கிறாள் அந்த தாய், “அண்ணே, ஸ்கூல்ல கொஞ்சம் தூக்கிட்டு போய் உள்ள விட்டுருங்க”னு. அப்துல் கலாம் ஐயா, நீங்கள் கூறிய ”கனவு காணுங்களை” இவர்கள் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? தூ...

இல்லாது போவர்

கொடுப்பவர் எவரும் இலர் கெடுப்பவர் கிடப்பர் சூழ்ந்து,  எடுப்பவர் இங்குண்டு ஏராளம் செவி மடுப்பவர்  இல்லாது போவர்  நாம் செத்தொழிந்தாலும்!!! -தமிழ்மறவோன் 16-11-2016

#பிதற்றல்கள்

ரசிப்பதைவிட, ரசிக்கப்படுவது  அதிக கிளர்ச்சி  தருவதாய் இருக்கிறது!!! # பிதற்றல்கள்

அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா!!! (Spoiler இல்ல) கடைசியாக பிரேமம் படத்துக்கு எழுதியதாக ஞாபகம். அதுக்கு அப்பறம் இந்த AYM. கௌதம் மேனன் ஏ,ஆர்.ஆர் மஞ்சிமா சிம்பு இந்த வரிசைக்காக தான் படம் பார்க்கச் சென்றது. ஒரு படத்தை முதல் பாதி இரண்டாம் பாதி என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. படத்திற்கு 120 என்று மொத்தமாகத்தான் வாங்குகிறார்கள், அப்பறம் படம் மட்டும் முதல் பாதி நல்லா இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்? 1. வழக்கமான தன் படங்களை போல ஹீரோ, ஹீரோயினை அழகாக காட்ட முயன்றிருக்கிறார் GVM. 2. வழக்கம் போல் இசை ராஜாங்கம் நடத்துகிறார் ஏ.ஆர்.ஆர். 3. வழக்கமான சிம்பு வழிந்து வழிந்து காதலிக்கிறார். 4.வழக்கமான GVM படத்தில் வருவதுபோல கதாநாயகி சும்மா வந்து செல்கிறார். சில இடங்களில் சில நுணுக்கமான விஷயங்கள் ஈர்க்கின்றன. உதாரணத்திற்கு, ”செருப்பெல்லாம் கல்லுடா, கால்லலாம் குத்திருச்சு”னு சிம்பு மகேஷ்கிட்ட சொல்லுவாரு, அடுத்த ஸீன் மஞ்சிமாவ வண்டில கூட்டிட்டு போகும்போதும் கால்ல செருப்பு இருக்காது. கவனமா எடுத்துருப்பாங்க அந்த ஸீன். இது மாதிரி கொஞ்சம் ஸீன்ஸ் ஓகே. இவங்களுக்கு இவ்ளோ போத...

#வாசகசாலை 1

வணக்கம்!! வாசகசாலை சார்பில் 22-10-2016 (சனிக்கிழமை) மாலை எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களின் படைப்புலகம் பற்றிய நிகழ்வு நடைபெற்றது. நீங்கள் யோசிப்பதைப் போன்று தான் நானும் யோசித்தேன், யார் இந்த இராசேந்திர சோழன்? அன்றைய நிகழ்வுக்கு பிறகுதான் தெரியவந்தது இவர் எவ்வளவு கொண்டாடப்பட வேண்டியவர் என்று. தமிழ் இலக்கிய வரலாறை பத்திரிக்கைகளில் ஓரளவு வாசித்து இருக்கிறேன். ஆனால், இந்த பெயரை கடந்து வந்ததே இல்லை. தமிழ் இலக்கிய உலகில் இவர் மறக்கப்பட்டாரா? மறைக்கப்பட்டாரா? என்று தெரியவில்லை. தற்போது 80 வயதாகும் இவர், கடந்த 40 வருடங்களாக சிறுகதை, குறுநாவல், கட்டுரை என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். அதிகம் பேச படாத, ஆனால் பேச வேண்டிய ஒரு எழுத்தாளரை எடுத்து, அவரது படைப்புகளை இளைஞர்களை கொண்டு பேச வைத்த வாசகசாலைக்கு வாழ்த்துகள்!!! இறுதியில், ஏற்புரையின் போது அவரது கண்களிலும், பேச்சிலும் ஒரு பெருமிதத்தை காண முடிந்தது. அவரது வார்த்தைகளில் ஏதையோ அடைந்துவிட்ட ஒரு உணர்வு வெளிப்பட்டது. இதுதான் வாசகசாலையின் வெற்றி!!!! (அன்றே எழுதியது பதிவேற்ற தவறிவிட்டேன்)

பெருமூச்சு(சா)

பெருமூச்சு(சா)  ------------------------------ ஓர் விடுமுறை நாளின் மாலையில் அம்மா பிரதோஷமென்று கோவிலுக்குச் சென்றுவிட, அப்பாவும் வெளியில் சென்றுவிட்டார். நான் மட்டும் வீட்டில்; அம்மா போறதுக்கு முன்னாடி, "பால் வாங்க பாத்திரம் வச்சுருக்கேன் வாங்கி வச்சிரு" "பக்கத்து வீட்டு சாவி இருக்கு, வந்து கேட்டா கொடுத்துரு" "வாசல்ல பூக்காரம்மாட்ட பூ வாங்கி வை" என்றும் சொல்லி சென்றாள். நானும் குனிந்த தலை நிமிராது தொடுதிரையை தடவிக்கொண்டே தலையாட்டி வைத்தேன். கொஞ்ச நேரங்கழி ச்சு 1க்கு அடிக்கணும் போல இருந்தது. அப்பறந்தான் யோசிச்சேன் "அய்யயோ வீட்ல யாருமில்லையே". என்ன செய்ய??? வாசற்கதவை பூட்டிட்டு போலாமா? அந்நேரம் பார்த்து பால்காரர் வந்து, வீட்ல யாருமில்லைனு திரும்பி போயிட்டா என்ன பண்ண? பூக்காரம்மா போயிட்டால் அம்மாட்ட என்ன சொல்லி சமாளிப்பது? பக்கத்து வீட்டு ஆன்ட்டினா பரவால்ல கொஞ்சம் வெயிட் பண்ணும். அவர்களும் "ஏன் லேட்டு"?னு கேட்டா "பாத்ரூம் போயிருந்தேன்" என்று சொல்லவா முடியும். சொல்லலாம் தான் ஆனாலும் ஏதோ ஒன்று சொல்லவிடாமல் தடுக்கிறதே...

கண் சிமிட்டல்கள்!!!

பேருந்து நிலைய காத்திருப்பையும்  கவிதையாய் மாற்றிவிடுகிறது, பெயர் தெரியா அந்த தேவதையின்  கண் சிமிட்டல்கள்!!! # பிதற்றல்கள் -தமிழ்மறவோன் 31-10-2016

பருத்திக்கொட்டை - கிளாஸ்பொண்ணு - பட்டப்பேரு!!

பருத்திக்கொட்டை - கிளாஸ்பொண்ணு - பட்டப்பேரு!! ------------------------------------------------------------------------------------------ இன்று History tv சேனலில் Food tech என்ற நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. அதில், Cotton seed oil என்ற ஒரு கான்செப்ட். அதாவது பருத்திவிதையில் இருந்து எப்படி எண்ணெய் தயாரிக்கிறார்கள் என்று ஒரு குண்டு அண்ணன் விளக்கினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த போது பள்ளி ஞாபகங்கள் மனக்கண்முன் நிழலாடியது.  எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணுக்கு பட்டப்பேரு, "பருத்திக்கொட ்டை". ஆனா அத பெரும்பாலான நேரங்கள்ல சுருக்கி 'பருத்தி'னுதான் எங்களுக்குள்ள பேசிக்குவோம். அக்சுவலா பருத்திக்கொட்டைனு எதுவுமே கிடையாது, பருத்தி விதை தான் உண்டு. அத தான் பேச்சுவழக்குல பருத்திக்கொட்டைனு சொல்றோம். அந்த பட்டப்பேருக்கு காரணம் என்ன அப்படிங்கறத ஆராஞ்சு பார்த்தா, அந்த பொண்ணு கொஞ்சம் கருப்பா இருப்பா; கொஞ்சம்னா, கொஞ்சம் அதிகம்னே வச்சுகோங்களேன். ஆனா லட்சணமாதான் இருப்பா!!! எவன் இந்த பேரு வச்சான்னு தெரியல, ஏன்னா பருத்தின்னா பஞ்சு அது நல்ல வெள்ளையா தான இருக்கு, இப்பதான் பாக்குறேன் பருத்த...

ஏமாற்று!

நம்மாட்கள ஏமாத்த,  துணிக்கடைக்காரனுக்கு ஒரு கம்புப்பையும், நகைக்கடைக்காரனுக்கு ஒரு மணி பர்ஸும் போதும்!!! -பஞ்சகல்யாணி

#சென்னை_டேஸ்

எங்க இருக்கீங்க டேடி??? ------------------------------ எங்களைப்போல் UBER ப்ரீ ரைடை ஒருவரும் பயன்படுத்தியிருக்க முடியாது. சென்னை வந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட இருபது முறை அதைப் பயன்படுத்தி பயணித்திருப்போம். அப்படியொரு மாலை பயணத்தின் போது, நான் டிரைவரின் அருகிலிருக்கும் ஸீட்டில் அமர்ந்திருந்தேன். டிரைவருக்கு "May wyif"(இப்படிதான் பதிந்திருக்கிறார்) என்று பதியப்பட்ட எண்ணிலிருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. லௌட் ஸ்பீக்கரில் போட்டுதான் பேசினார், பேசியது அவரது குழந்தை. பேசியதிலி ருந்து அந்த குழந்தைக்கு எட்டு வயதிருக்கும் என்று யூகிக்க முடிந்தது. இனி அவர்களிடையேயான உரையாடல், டேடி, எங்க டேடி இருக்கிங்க? அப்பா டீ.நகர் போயிட்டிருக்கேன் மா; நீ டியூஷன் போயிட்டு வந்துட்டியா?? ம்ம்ம். வந்துட்டேன் ப்பா; அப்பா நீ எப்பப்பா வருவ?? இப்பதான் பாப்பா ரெண்டாவது ரைடு வந்துருக்கேன். இன்னும் ஒரு இருவது ரைடு முடிச்சுட்டு அப்பா வீட்டுக்கு வந்துருவேன் சரியா?? ம்ம்ம்.சரிப்பா(குரல் உடைகிறது) நீ சாப்பிட்டுட்டு தூங்கு அப்பா வந்துருவேன் ஓகேயா செல்லம். ஓகேப்பா சீக்கிரம் வந்துருங்க!...

#சென்னை_டேஸ்

தாம்பரம் டூ மாம்பலம் வழி: கிண்டி தாம்பரத்தில் இருந்து மாம்பலத்திற்கு ரயிலில் வந்துக்கொண்டிருந்தேன். கிண்டி ரயில் நிலையத்தில் ஆண் பெண் என்று இருபாலரும் இருந்த 7 பேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் ஒன்று ஏறியது. நான் அமர்ந்திருந்த பெட்டி வித்தியாசமான அமைப்புடன் ‘ப’ வடிவில் இருந்தது. அந்த பெட்டியில் ஆண்கள் பெண்கள் என்று சுமார் 20 பேர் அமர்ந்திருந்தோம். நடுவில் இருந்த வெற்று இடத்தில் அவர்கள் நின்றுக் கொண்டு வந்தனர். அவர்கள் நின்றிருந்த விதம் ஏதோ வித்தியாசமாக தோன்ற, நன்றாக பார்த்த பின்னர ் தான் தெரிந்தது அவர்களில் ஒருவர் மட்டும் மேலே கம்பியை பிடித்துக்கொண்டு வர இன்னொருவர் அந்த ஒருவரை பிடித்துக்கொண்டு வர அவரை இன்னொருவர் என்று சங்கிலி தொடர் போல் பிடித்து வந்தனர். ஏன் இப்படியென்று யோசிக்கையில் தான் கவனித்தேன், அவர்களில் யாருமே துப்பட்டா அணியவில்லை. மேலே கம்பியை பிடித்துக்கொண்டு வர அவர்களுக்கு ஏதோ அன்ஈஸியாக தோன்றிருக்க வேண்டும் அதான் இந்த ஏற்பாடு என்று எண்ணிக்கொண்டேன். நான் மாம்பலத்தில் இறங்கும்வரை, பெண்கள் பெட்டிக்கு போகலாமா வேண்டாமா? என்று அவர்களுக்குள் ஒரு கிசுகிசு ஓடிக்கொண்டே இருந்தது. ...

#புதுமைப்பெண்!!!

"அண்ணா, ஒரு விஸ்பர் எக்ஸ்ட்ரா லார்ஜ் கொடுங்க"  என்று சாதரணமாய் கேட்டு,  பேப்பர் சுற்றாமல் வாங்கிச்செல்கிறாள், # புதுமைப்பெண் !!! -தமிழ்மறவோன்

சாமி

சாமி இருக்குனு பயந்துகிட்டு,  யாரும் தப்பு பண்ணாமலாம் இருக்குறது இல்ல;  பண்றதெல்லாம் பண்ணிட்டு  "என்னைய மன்னிச்சுடு சாமின்னு" மன்னிப்பு கேட்டுக்குறோம் அவ்வளவுதான்!!!

"க்ளிப்"ping (StressBuster)

"க்ளிப்"ping (StressBuster) ----------------------------------- துணி துவைப்பதை விட அதை காயப்போடுவது என்பது எரிச்சல் பிடித்த வேலை. இதை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்பதுதான் கான்செப்ட்!!!! காயப்போட்ட துணிகளுக்கு க்ளிப் போடுவது வழக்கம். அதை எப்படி optimal ஆக்கலாம் என்று யோசிக்கும்போதுதான் இது தோன்றியது. அதாவது, குறைந்த க்ளிப்களை அதிகமான துணிகளுக்கு எப்படி மாட்டுவது?? ஒவ்வொரு முறையும் இது சவாலான ஒரு விஷயமாகவே இருக்கும். சும்மா ஒரு துணிக்கு ஒரு க்ளிப் போடுவது என்பது மாட்டும்போதும் எ ரிச்சல், எடுக்கும்போதும் எரிச்சல். சரி,துணி காயப் போடும்போது என்னென்ன விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டும்?? 1.துணியின் கனம் 2.க்ளைமேட் 3.துணியின் வகைகளும் எண்ணிக்கையும். -> பேண்ட் என்றால் அதன் கனத்தை கணக்கில் கொண்டு கண்டிப்பாக, ஒரு பேண்ட்டுக்கு ஒரு க்ளிப் அவசியம். -> சட்டை என்றால் க்ளிப் தேவையில்லை; துண்டை காயப்போடுவதுப் போல் போட்டு பட்டன் மாட்டிவிட்டால், புயலடித்தாலும் கீழே விழாது. -> டீஷர்ட், ஷார்ட்ஸ், ஜட்டி போன்றவற்றை இரண்டிரண்டாக இணைத்துப் போடலாம். அதாவது இப...

அவளுக்கு திருமணம்

பகலில் எரியும் தெருவிளக்கு போல் பிரயோஜனமற்று கிடக்கின்றன, அவளுக்கான என் கவிதைகள்!!! ------------------------------------------------- அவளுக்கு திருமணம்

ரெமோ- பிட்டு- மெனக்கெடுதல்

ரெமோ- பிட்டு- மெனக்கெடுதல் ----------------------------------------------------- ரெமோ படத்தைப் பற்றி பலவித விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனக்கும் எதிர் கருத்துக்கள் உண்டு. இருக்கட்டும்; அந்த படத்திலிருந்து நான் எடுத்துக்கொண்ட ஒரு விஷயம் "மெனக்கெடுதல்". அனைத்து காரியங்களிலும் மெனக்கெடுதல் என்பது ரொம்ப முக்கியமானது. எந்தவொரு விஷயத்தையும் மெனக்கெட்டு செய்யும்போது அதன் முடிவு சாதகமான ஒன்றாகத்தான் இருக்கும். அதற்கு உதாரணம் தான், இந்த "ரெஜினாமோத்வானி". மெனக்கெட்டு ஒரு விஷயத்தை செ ய்தபோதுதான் அவருக்கு தேவையான ஒன்று கிடைத்தது. இன்னொரு உதாரணம், பரீட்சையில் பிட் அடிப்பது. அந்த பிட்டை எழுதும்போது எவ்வளவு தெளிவாக எழுதுகிறோம், எப்படி புரியும்படி மெனக்கெட்டு எழுதுகிறோம் என்பதுதான் பரீட்சை ஹாலில் செலக்டிவ்வாக பிட்டினை எடுத்து அதிகம் சிரமப்படாமல் எழுத உதவும். ஒழுங்காக மெனக்கெட்டு எழுதாமல் மேம்போக்காக எழுதி வைத்தோமேயானால் ஹாலில் பிட்டை உற்று நோக்கும்போது வாத்தியார் உங்களை நோக்கிக்கொண்டிருப்பார். சோ, எந்த ஒரு விஷயத்தையும் மெனக்கெட்டு, கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்து பாருங்க...

கேன் வில்லியம்சன்-வெறுப்பேற்றுதல் - மீனின் சிறகுகள்

கேன் வில்லியம்சன்-வெறுப்பேற்றுதல் - மீனின் சிறகுகள் ---------------------------------------------------------------------------- இன்று காலை பேப்பரில், "வெறுப்படையும்போதுதான் அதிகம் கற்றுக்கொள்ள முடியும்" என்ற கேன் வில்லியம்சனின் பேட்டியை படிக்கும்போது "அட, ஆமாப்பா" என்று தோணியதன் விளைவுதான் இப்பதிவு. நன்றாக கவனித்துப் பார்த்தால் இது புரியும். ஒருவர் நம்மை எந்த அளவுக்கு வெறுப்பேற்றுகிறாரோ அந்த அளவுக்கு நமக்குள் வெறி ஏற்படும், ஒரு சக்தி உருவாகும். அந்த சக்தியை, வெறியை அப்படியே  நல்ல செயல்களுக்கு திருப்பிவிட்டால், முடியாது என்றெண்ணிய காரியமும் எளிதில் முடிந்துவிடும். சச்சின் பேட்டிங் செய்யும் போது இதைக் கண்கூடாக பார்க்கலாம். "மீனின் சிறகுகள்" நாவலில் ஒரு சம்பவம் வரும், விபத்தில் கால் இழந்த ஒருவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வருவார்கள் (பெயர்கள் மறந்துவிட்டன); அவர்களது தாம்பத்திய வாழ்வு அவளுக்கு திருப்திகரமானதாக இருக்காது. ஒரு இரவுப் பொழுதில் அவள் குளித்து முடித்து சீவி சிங்காரித்து அவன் கண்ணில் படும்படியாக நிற்பாள்; அங்குமிங்கும் அலைவாள். ஒரு கட்டத...

#சென்னை_டேஸ்

“நாயன்பு” ------------------------------------------------------------------------- நீங்கள் வெளியில் செல்லும்போது உங்களது குழந்தை, உங்களுடன் வரவேண்டும் எனறு அடம்பிடித்தால் என்ன செய்வீர்கள்?? அவர்களை வண்டியில் அமர வைத்து ஒரு ரவுண்ட் அடித்து இறக்கிவிட்டு செல்வீர்கள் தானே?  இன்று காலை கோடம்பாக்கம் ரயில்நிலையம் செல்லும் வழியில் பார்த்ததை பகிர்கிறேன், படியுங்கள். ஒரு வீட்டில் ஒருவர் வண்டியில் வெளியே கிளம்புகிறார். அதை கண்ட அந்த வீட்டின் நாய் கேட் அருகில் நின்று சத்தமாக குரைக்கிறது . நல்ல வளர்ந்த நாய்; உடனே அந்த நபர் அந்த நாயை வண்டியின் முன்னால் நிற்க வைத்து ஒரு சிறிய ரவுண்ட் அடித்து மீண்டும் வீட்டு வாசலில் விட்டு செல்கிறார். அந்த நாயும் சமர்த்தாக உள்ளே சென்று விடுகிறது. இதை பார்த்தப் பொழுது இப்படியும் மனிதர்களா? இப்படியும் நாய்களா? என்று தோன்றியது. நிறைய நாயன்பர்களை பார்த்திருக்கிறேன்; பாசக்கார நாய்களை பார்த்திருக்கிறேன்.,வாஞ்சையான ஓனர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனா இந்த அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்ட ரெண்டு பேரை பார்த்ததே இல்ல…. இது உலக மகா பாசம்டா சாமி!!! -...

கிழிந்த ரவிக்கை

கிழிந்த ரவிக்கையினூடே  பிதுங்கும் முலையை வெறிக்கிறது ஒரு தொந்தி!!

ஞாபகங்கள்

இருள் கவிந்த அந்த வீட்டினை  கடக்கையி லெல்லாம் பளிச்சென் றுந்தன் ஞாபகங்கள்!!!

"தியாகிகள்"

"தியாகிகள்" --------------------- பஸ்ல ஒரு கூட்டத்துக்காக திருவான்மியூர் போயிட்டிருக்கும்போது, சென்னை வந்து இத்தன நாள் ஆச்சு எங்கயுமே போகலையேனு திடிர்னு தோண, சட்டுனு ஜன்னல பார்த்தேன் "தியாகிகள் மண்டபம்" உடனே இறங்கி, உள்ள போயாச்சு. நம்ம தியாகிகள் அப்படி என்னதான் பண்ணிருக்காங்கனு பார்த்துட்டு வெளிய வந்தேன். நல்ல அருமையான சூழல்; புல்வெளி என்று பார்க்கவே ரம்மியமாய் இருந்தது அந்த இடம். இதுமட்டுமில்லாம, உயிரோட இருக்குற நிறைய தியாகிகள் த ங்களோட வீடு, படிப்பு எல்லாத்தையும் விட்டுட்டு வந்து நாட்டோட வளர்ச்சிக்காக(!!!) படு பயங்கரமா "போராடிகிட்டு" இருந்தாங்க; (என்ன வளர்ச்சினு கேக்கக்கூடாது) அதுவும் தனியா இல்லைங்க ஜோடி ஜோடியா!!! "நீ திரும்ப ரூம்முக்கே போயிடு சிவாஜினு" உள்ளயிருந்து காந்தி சொன்ன மாதிரியே கேட்டது. நமக்கெதுக்கு வம்புன்னு ரூமுக்கு வந்து பேசாம இழுத்து போத்திக்கிட்டு தூங்கிட்டேன். (அநேகமா காந்தி மண்டபத்துக்கு தனியா போன முட்டாள் நானா தான் இருப்பேன்னு நெனைக்கேன்) -பஞ்சகல்யாணி

"பாராட்டுங்கள்"

"பாராட்டுங்கள்" ------------------------------ யாருக்கேனும் ஏதேனும் நல்லது செய்ய  நினைத்தால் அவர்கள் செய்த நற்செயல்களை கண்டறிந்து பாராட்டுங்கள். பாராட்டினால் கிடைக்கும் போதை அளப்பரியது. மது மாதுவினால் கூட பாராட்டு தரும் போதையை தந்துவிட முடியாது. அது ஒரு Virtual போதை. பாராட்டு என்பது ஒரு Temporary Orgasm போன்றது. யாரேனும் நம்மை பாராட்டினால் அதனுடைய Impact அந்த நாள் முழுதும் நம்மை உற்சாகமான மனநிலையில் வைத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு பேஸ்புக்கையே எடுத்துக்கொள்வோம், இதில் Like என ்பது இப்போது Give & take policy ஆகி விட்டது. அதை விட்டுவிடுங்கள். கமெண்டில் யாராவது பாராட்டினால் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதேயிது இன்பாக்ஸில் வந்து நம்மை பாராட்டும் போது நான் சொன்ன அந்த போதை கிடைக்கத் தொடங்கும். அது நம்மை மேலும் கவனமாக சிரத்தையெடுத்து எழுதச் சொல்லும். இது இயல்பாகவே நமது Efficiencyயை கூடச் செய்யும் which inturn increases our productivity too. "பாராட்டுகளை தலை வணங்கி ஏற்றுக் கொள்ளுங்கள்; தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்" பிகு:- நான் இப்போது அனைவரையு...